அவ்வப்போது ஜோக்ஸ் படிக்கிறோம் அதில் மனதில் நிற்பது எத்தனை . குமுதம் ஆனந்த விகடன் அங்கே இங்கே கிடைத்த ஜோக்ஸ் தான் .யார் எப்போ எழுதினது .தெரியாது .
1 . என்னம்மா சமையல் இது . சாம்பார் லே உப்பே இல்லை . ரசத்துலே புளி இல்லே .
போதும் நிறுத்துங்கப்பா . இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும் .
2 . என் மாமியார் தங்கமானவங்க
இப்போ அவங்க எங்கே
என் புருஷன் குழந்தையா இருக்கறப்பவே இறந்துட்டாங்க
3.தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு .. நம்ப முடியல
சாராயம் வித்ததா சொல்றதையா
இல்ல . எட்டாவது படிச்சதா சொல்றதை !
4 .இது வரை ஒரு புறம்போக்கு நிலத்தை கூட தலைவர் தனக்குன்னு வச்சுகிட்டதில்லை
அப்படியா
ஆமாம் . எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாரு !
5. பேரிச்சம்பழ வியாபாரியோட நெருங்கிபழகினது தப்பா போச்சுடி
ஏன் ?
டேட்ஸ் தள்ளி போயிடுச்சிடி .
6. தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே .
எப்படி
காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !
7.ஐயோ மன்னா தப்பா புரிஞ்சிகிட்டீங்க . முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்காக யுத்தத்தில் condom எல்லாம் பயன் படுத்த முடியாது .
8.மின்னலை பார்த்தா கண்ணு போய்டும் .பார்க்கலைன்னா மின்னல் போய்டும் .
அருமையான தொகுப்பு
ReplyDeleteஆனந்த விகடனின் இந்த ஜோக்கும் மறக்க முடியாதது...
ReplyDeleteபாருங்க .. உங்க அம்மா என்னை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க..
சரி சரி விடு.. ஆமா..நீ ஏன் இஞ்சிய திங்கற??
நல்ல பதிவு..
நர்சிம்
நம்பர் 8: ஜோக்கல்ல. கவிதை !
ReplyDeleteவிஜய்
சாதாரணது... உங்கள் பதிவுகளிலேயே.. வேறு ஏதாவது Blogil நுழைந்துவிட்டோமா?
ReplyDeleteஅட இது நம்ப Jaali நாயகர்(கற்பக விநாயகர் சும்மா மோனைக்கு) உங்களுக்கு அசாதாரணம் மட்டுமே சாத்தியம் என்று எண்ணினேன். ('saadharanam' 2 suzhi Naa va illa 3 suzhi naa va?)