Share

Oct 24, 2008

விஷாதம்

மனக்குழப்பம் !
மனிதனோடு எப்போதும் இருப்பது .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷாதம் . அதனால் விசாரம் . வித்தையுள்ளவனுக்கும் விசாரமுள்ளவனுக்கும் தூக்கம் ஏது ?
'கவலையில்லாத மனிதன் 'என்ற பெயரில் சந்தோசமாக படம் எடுக்க ஆரம்பித்த கண்ணதாசன் அந்த படத்தின் கதாநாயகன் சந்திர பாபு செய்த அடாவடியால் படம் முடிவதற்குள்ளும் , முடிந்த பின்னும் ரொம்ப கவலைக்குள்ளானார்.

ஒரு நாள் சிட்டி மகன் விஷ்வேஷ்வரம் அவர்களின் முதிர்ந்த நண்பர்குழுவுக்கு ஒரு விஷாதம் .
"சாமியாருக்கும் போலி சாமியாருக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?"
விஷ்வேஷ்வரம் தான் தீர்வு சொல்லியிருக்கிறார் .
" முதல்ல சாமியார் ! மாட்டிகிட்டா போலி சாமியார் !!"

ஒரு பிரஞ்சு படம் .படத்தின் ஆங்கில தலைப்பு “For the life of a cop”. அதில் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் .
கடத்தியவர்கள் அந்த பெண்ணை கற்பழித்து , பின் சித்திரவதையை தொடர்ந்து அவளை கொலை செய்யுமுன் அவளை காப்பாற்றிவிடுவார்கள் . காப்பாற்றியவர்களில் ஒருவனுக்கு ஒரு மனகுழப்பம் . அவன் அந்த பெண்ணை பார்த்து கேட்பான் .
“I think we were in time?”
நொந்து நூலாகிப்போன அந்த பெண் ஈன ஸ்வரத்தில் சொல்வாள் .
“Rapewise, you were not in time”

மனக்குழப்பத்திற்கு காரணம் என்ன ?
ரஸ்ஸல் க்ரொவ் நடித்த “A beautiful Mind” படத்தில் பதில் சொல்லப்படுகிறது .
Everybody is haunted by their Past!
.......

Yann Martel’s Life of Pi

Why do people Move? What makes them uproot and leave everything they have known for a great unknown beyond the horizon ?

The answer is the same the world over: People move in the hope of a better life.




5 comments:

  1. “Rapewise, you were not in time”

    Brilliant repartee !

    ReplyDelete
  2. நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே மிகச் சிறந்த பதிவு இதுதான். வாசிப்பவர்களுக்கு தத்துவ விசாரத்தைத் தூண்டுவதாக உள்ளது. யான் மார்டலைத் தேடிப் பிடித்து வாசிக்கும்படி செய்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  3. நிறைய விஷயங்களை உள்ளடக்கியது இப்பதிவு.

    “Rapewise, you were not in time”

    pick of th posting

    அன்புடன்
    சூர்யா.

    ReplyDelete

  4. To consolidate comments, click here and use your site url.


    Sir, please post this code in your blog layout using Add Gadget/ HTML/JavaScript, to consolidate the beautiful comments you are allowing!

    Wishing you and the family, Seasons Greetings!

    ReplyDelete
  5. இயக்குனர் ஸ்ரீதர் பற்றி எழுதுவீர்கள் என்று காத்திருக்கிறோம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.