நீங்கள் என்ன புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்று ஒரு வாசகர் இங்கே என் வலைதளத்தில் கேட்டுள்ளார் .
நான் வாசகன் தான் . எழுத்தாளன் அல்ல . ஒரு புத்தகமும் நான் எழுதி வெளியானதில்லை .
நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதிய சொற்ப விஷயங்கள் " தழல் வீரம் " என்ற தலைப்பில் பிறர் வற்புறுத்தல் காரணமாக டைப் செய்யப்பட்டு தயாராக நான்கு ஆண்டுகளாக கிணற்றில் கல்லாக கிடக்கிறது . வெளியிட யாருக்கும் தைரியமில்லை ஆர்வமாக முன் வந்தவர்கள் சிலர் சென்ற வருடங்களில் ஒதுங்கி கொண்டார்கள் .
ஒரு ஆராய்ச்சி மாணவர் ' நாங்கள் (அதாவது மாணவர்கள் )ஏதேனும் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் கட்டுரைகளை தான் புத்தகமாக வெளியிடுவதாக இருக்கிறோம் 'என்றார் .
கிழக்கு பதிப்பகம் செய்த காரியம் விசித்திரமானது . நான் எழுதியவை அனைத்தும் பத்தி எழுத்து வகை தான் . " தழல் வீரம் " தொகுப்பில் உள்ள ஒரு இருபது கட்டுரைகளும் COLUMN WRITING தான் . இரண்டு வருடம் கழித்து " தழல் வீரம் " திருப்பி அனுப்பப்பட்ட போது கிழக்கு பதிப்பகம் குறிப்பிட்டது இப்படி - " தங்கள் நாவலை பிரசுரிக்க முடியாமைக்கு வருந்து கிறோம்"
இங்கே என் வலைத்தளத்தில் உள்ள ஒரு நான்கு குறிப்புகளை இணைத்து பாருங்கள் . ஒரு அருமையான 'பத்தி எழுத்து' கிடைக்கும் . எந்த நான்கு தலைப்பில் உள்ள விஷயங்கள் இணைந்தாலும் !
புத்தகம் ஆக்க ஒரு தன் முனைப்பு Self - centredness வேண்டும் . என்னிடம் சுத்தமாக கிடையாது .பிரசுர வாய்ப்பு க்காக Sponsor தேடியதும் இல்லை .ஒவ்வொரு எழுத்தாளன் ஆடு புழுக்கை போடுவது போல வருஷம் ரெண்டு புத்தகம் போட்டு விடுகிறான் . நான் என்னை ஒரு வாசகனாக அடையாளப்படுத்தி கொள்பவன் .
Thala
ReplyDeleteIppadi panna Yenna pesama antha type panna material ellam scan panni oru pdf fa convert pannunga inga unga blog antha book ka oru nominal rate pottu vithudunga like if u pay this accont some x money u can send them the pdf in mail .chumma try panni parunga.inga intha oorula(america) e publishing bayankara famous.you may not earn a great deal but still u can reach a wider audience.u know jeffery archer started writing in his 36 after his political carrier went haywire who knows you can become an tamil jeffery archer.I would be more than happy to buy the first copy of the book
Regards
Kishore
I second Kishore Kumar's opinion.
ReplyDelete