Share

Oct 21, 2008

J.M.Coetzee

ஜே எம் கூட்சீ எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . இரண்டு முறை புக்கர் பரிசு வாங்கினார் . 2003 ல் நோபல் பரிசு வாங்கிவிட்டார் .
Great writers are the saints for the godless !
இவருடைய Disgrace நாவல் படித்தது என் வாழ்வின் முக்கிய அனுபவம் . கீழே வைக்க முடியாத பிரதியின்பம் தரக்கூடிய நூல்கள் சில . அவற்றில் இந்த நாவல் முதல் வரிசையில் வைக்கப்பட வேண்டியது . The Master of Petersburg நாவல் நெஞ்சை பிழிந்து விடக்கூடிய துயரத்தை சாரமாக கொண்டது . கதை நாயகன் ரஷ்ய எழுத்தாளர் Dostoevsky யின் புத்திர சோகம் பற்றியது . என்றாலும் கூட்சீ இதை எழுதியதற்கு காரணம் கூட்சீ யின் மகன் 23 வயதில் ஒரு விபத்தில் இறந்ததால் தன்னுடைய புத்திர சோகத்தையே எழுதினார் .
தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் . ஆஸ்ட்ரேலியா வில் இப்போது வாழ்கிறார் .
சிகரெட் கிடையாது . குடிபழக்கம் இல்லாதவர் . ஆச்சரியமாக மாமிசம் சாப்பிடுவது கூட கிடையாது . இப்படி ஒரு வெள்ளை எழுத்தாளர் !
இவருடைய நுட்பமான பார்வை ரொம்ப அபூர்வமானது .
வண்டியிழுக்கும் குதிரை யின் பார்வையை கூட்சீ அனுமாநிப்பதை உதாரணமாக சொல்லலாம் . ' வண்டிகளை இழுப்பதற்காக இவ்வுலகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதே குதிரைக்கு தெரியாது .அதற்கு அந்த புரிதல் இல்லை . ஏதோ சவுக்கடி படுவதற்காக தான் பிறந்திருக்கிறோம் என்று அது நம்புகிறது . அடி தன் மேல் கடுமையாக விழும்போது தான் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக தான் கட்டப்பட்டுள்ள மாபெரும் பளு தான் வண்டி என்றே தான் குதிரை நம்பிகொண்டிருக்கிறது .'
Dostoevskyயை நாம் உயிருடன் தரிசிக்கும் பிரமையை The Master of Petersburg நாவல் ஏற்படுத்திவிடுகிறது . அவருடைய படைப்புகளை படித்தவர்களுக்கு இந்த நாவல் முழு அனுபவம் ஏற்படுத்துவதுடன் அவரை படிக்காதவர்களுக்கு Dostoevskyயை அறிமுகம் செய்கிறார் கூட்சீ ! இந்த நாவல் தமிழில் சா . தேவதாஸ் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது .
Disgrace நாவல் தெனாப்பிரிக்க சூழல் . இந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் இங்கே கூட்சீ யார் என நன்கறிய முடியும் . ஆங்கிலத்திலேயே படிக்க கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் .
கவிஞர் பைரன் பற்றி இந்த நாவலில் கூட்சீ பேசுமிடங்கள் மறக்க முடியாது .
டேவிட் லூரி என்ற ஒரு ஆங்கில பேராசிரியர் தான் கதை நாயகன் .
லூரி , லூசி , பீட்ராஸ் ,ரோசலின் , எல்லோரும் இன்னும் நினைவில் ஜீவனோடு நிற்கிறார்கள் .
Disgrace நாவலில்
' ஒரு ஆண் நாய் . பெண் நாய் வாடையை உணரும்போது , அண்மையில் பெண் நாய் வந்திருப்பதை தன் மோப்ப சக்தியால் உணரும்போதேல்லாம் அந்த ஆண் நாய் அதன் சொந்தக்காரர்களால் கடுமையாக அடிக்கப்படுகிறது . செக்ஸ் அதற்கு மறுக்கப்படுகிறது . இது போல அந்த வில்லாவின் வெளியே பெண் நாய் வரும்போதெல்லாம் தொடர்ந்து கடுமையாக நாய்க்கு அடி . என்ன செய்வதென்றே அந்த நாய்க்கு தெரியவில்லை . ஒரு கட்டத்தில் பெண் நாய் வாடை இதற்கு உணர கிடைத்தவுடன் தன் காதுகளை விரைத்து,அதன் வால் அதன் பின்னங்கால்களுக்கு இடையில் வைத்து தன் குறி மறைத்து ,ஊளையிட்டு அழுதுகொண்டே தன்னை அடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தோட்டத்தில் ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடும் . அந்த நாய் ,பெண் நாய் மீது தனக்கு ஏற்படும் இயற்கையான இச்சையையே வெறுக்க ஆரம்பித்து விடுகிறது .'

3 comments:

  1. Good info. Can u give ur favorite list rather must read list novel from other lang. Would help us to extend our brain cell..

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு புத்தகம் படித்து முடிப்பதற்குள் என் ஆயுள் காணுமா எனத் தெரியவில்லை.

    உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர் வாசிப்பு விஷயத்தில்.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  3. http://geethappriyan.blogspot.in/2010/06/2008-18.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.