Share

Oct 16, 2008

தி .ஜா மரணிப்பதற்கு சற்று முன்..


வரலாறு நிகழ்வுகளை சரியாக பதிகிறதா ? சமீபத்திய மரணங்கள் பற்றியே கூட உண்மையை அறிவதில் குழப்பங்கள் நேர்கிறது .எனும்போது பல நூற்றாண்டு சம்பவங்களின் நம்பகத்தன்மை என்ன ?
தளையசிங்கம் மரணம் பற்றி ஜெகம் பிராடு ஜெயமோகன் பெரிய பொய்யை சொல்லி அதனை கேள்விக்கு நான் உள்ளாக்கி சு.ரா களமிறங்கி மு .பொன்னம்பலம் சு.ரா எழுதிய தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் கட்டுரையில் தளைய சிங்கம் மரணம் பற்றி தகவல் பிழை எதுவும் இல்லை என்று ஜெகம் பிராடு வின் முகத்திரை கிழித்தார் . சமீபத்தில் சாரு நிவேதிதா வின் Mummy returns – part 3 யில் ஜெகம் பிராடு எனக்கு தளையசிங்கம் மரணம் பற்றி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ஜெய மோகன் முழுசா அம்மனகுண்டியாநிக்கும்படி பண்ணியாச்சு . இதிலே காஞ்ச காட்டான் நாஞ்சில் நாட்டான் 'அய்யோயோ நான் உண்மையின் பக்கம் நின்னு வெள்ளவேட்டியிலே புல்லழுக்கு, புடுக்குலே சொறி சொரங்காயிடுச்சி' ன்னு புலம்புறான் .

ப்ருனோ லத்தூர் அறிவியல் உண்மைகளை விஞ்ஞாந விஷயங்களையே இப்போது கேள்விக்குள்ளாக்கி விட்டார் . இதை விட பெரிய சாதனை என்ன இருக்கிறது!
1973 ல் நடந்த தளைய சிங்கம் மரணம் பற்றி இவ்வளவு போராட வேண்டி வந்துச்சு .

1982 ல் நடந்த தி .ஜானகிராமனின் மரணம் பற்றி ஒரு விஷயத்தை நான் பேசி விடுகிறேன் .
'ஜானகிராமனை மருத்துவமனையில் ஒரு நர்ஸ் அவமானப்படுத்தி விட்டார் . சில மணி நேரத்தில் அவர் மரணம் நிகழ்ந்தது . இது ஜானகிராமனுக்கு மட்டுமல்ல சாதாரணமாக யாருக்குமே நடந்திருக்க கூடாது ' என்கிற அர்த்தத்தில் அப்போது கணையாழியில் அசோகமித்திரன் எழுதியிருந்தார் .
வாசகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி ! ஜீரணிக்க மிகவும் கஷ்டமாய் இருந்தது . ஜானகிராமனுக்கு மரணமடையும்போது இப்படி ஒரு அவமானமா ?

இப்போது இந்த ஜானகிராமன் பற்றிய செய்தி அசோகமித்திரனின் கட்டுரைகளில் உள்ளது .

1988 ல் சிட்டியிடம் நான் இந்த விஷயம் பற்றி பிரஸ்தாபித்த போது ' இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ' என உறுதியாக மறுத்தார் . வேதனை பட்டார் . அப்படி எந்த அவமானமும் ஜானகிரமானுக்கு நடக்கவில்லை .
எனக்கு ஆச்சரியாமாக இருந்தது .

1989 ல் மார்ச் மாதம் சென்னை சென்றிருந்த போது ஜானகிராமனை கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டிருந்த மணிக்கொடி சிட்டியின் மகன்களில் ஒருவரான சங்கரை சந்திக்க விரும்பினேன் .இவர் தான் ஜானகிராமன் இறந்த நேரத்தில் அவர் அருகில் இருந்தவர் . தூர்தர்சனில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் . சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் தான் என்னை சங்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார் . சங்கரிடம் கேட்டேன் . ஜானகிராமனுக்கு இறப்பதற்கு முன் அவமானம் ஏதும் யாராலும் நடக்கவில்லை என்பதை சங்கர் உறுதிபட சொன்னார் .

இதில் அசோகமித்திரனுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து அவர் கொஞ்சம் அவசரப்பட்டு கணையாழியில் அப்படி எழுதியிருக்கிறார் என்றே அனுமானிக்க வேண்டியிருக்கிறது .

அசோகமித்திரனிடம் அவரை புதுவையில் சந்தித்த போதும் பின் என் முயற்சி காரணமாக அவர் ஸ்ரீவில்லி புத்தூர் வந்து பென்னிங்க்டன் நூலகம் நடத்திய விழாவில் (எழுத்தாளர் அறிமுகம் ) அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி நான் பேசிய பின் மறு நாள் அவரை வழியனுப்பும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலும் அவரிடம் சொல்லிவிட்டேன் .

5 comments:

  1. Interesting..What was Asokamitran's response ? And for people like me who do not know the background of Thalayasingam affiar vis-a-vis Jeyamohan, can you please shed light on it in your future posts ?

    ReplyDelete
  2. Krishnan!

    I have conveyed the truth to Asokamitran. that's all. naturally this was an embarassment to Asokamitran.

    You should read my articles
    1.Ooty yil Thalayasingaththirku nadantha thozhugai
    2. Vilangum nani kan puthaikkum

    3. Here is the rub!

    You can find these articles here in my blog in the month of June.

    ReplyDelete
  3. Krishnan!

    I have conveyed the truth to Asokamitran. that's all. naturally this was an embarassment to Asokamitran.

    You should read my articles
    1.Ooty yil Thalayasingaththirku nadantha thozhugai
    2. Vilangum nani kan puthaikkum

    3. Here is the rub!

    You can find these articles here in my blog in the month of June.

    ReplyDelete
  4. இத்தனை ஆண்டு காலம் மனதில் முள்ளாய் கிடந்து உறுத்திய ஒரு செய்திக்கு.... உங்களால் இன்றைக்கு
    நிம்மதி கிடைத்திருக்கிறது.

    திரு.ராஜநாயஹம் அவர்களே நீங்கள் சொல்வது நிஜம்தானே... தி.ஜா. மரணிப்பதற்கு முன் அப்படி ஏதும் நடக்கவில்லைத்தானே?
    - தாஜ்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.