Share

Oct 21, 2008

சிவகுமாரும் குமாரர்களும்

"ஒரு நடிகன் அவனோட கேரியரில் அஞ்சு படமாவது பெயர் சொல்லும்படியா பண்ணனும்டா " ன்னு அப்பா சொல்வார் ! இப்படி மே மாத ஆனந்த விகடனொன்றில் சிவகுமாரின் சின்ன மகன் பருத்தி வீரன் கார்த்தி சொல்லியிருந்தார் .
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?

'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .

பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .

சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை  அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!

ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.

10 comments:

  1. அதுவும் அவரது இடது கை பழக்கமும், சாப்பிடும் காட்சிகளில் தாடை அசைவும் நல்ல காமெடி

    ReplyDelete
  2. Rather reluctantly I have to agree with you that Sivakumar has not excelled on silver screen. Yes, he is an avid bibliophile and admired LasaRa very much.

    This is from The Hindu a month or so back:
    "Mr. Sivakumar said he planned to make a presentation of 100 select Kamba Ramyanam verses in January next at the Kongu Vellalar Magali Kalloori in Erode and make a DVD to take the greatness of Kamba Ramayanam to the world'.

    ReplyDelete
  3. சிவகுமார் நல்ல ஓவியரும் கூட .... நடிப்பில் சிவாவுடன் ஆனந்தபாபு, பிரசாந்த் பிளஸ் பண்ணிக்கலாம், சூப்பர் பதிவு தலைவா... 100% உங்களுடன் உடன்படுகிறேன், அப்படியே ஹிந்தியையும் அலசியது நன்று.
    அப்புறம் Sujatha, பிரமிளா(ஸம்மெ ka) , Sowkar ஜானகி - நடிப்பு எனக்கு பிடிப்பதில்லை I dont நோ why? Sujatha & sivakumar - both - பேசும் போது குரல் உடையும் அழும்.

    கார்த்திக்கும் சூரியாக்கும் அமீர் பாலா அமைந்தது அவர்களின் வரம்.

    யன என்னும்

    D.R.அசோக்
    அன்புடன்

    ReplyDelete
  4. அவர் நடித்த 'மறுபக்கம்' படத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா?

    ReplyDelete
  5. எனக்கும் சிவகுமாரின் நடிப்பில் பிடிப்பு இல்லை..மணிவண்ணன் வசனத்திலும் மாடுலேசன் இருக்காது.(அமைதிப்படை விதிவிலக்கு).

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை, அவரும் அதற்கு மெனக்கெடவில்லை என்று தோன்றுகிறது. "சேது" வில் பாலாவும், "காதலுக்கு மரியாதை" யில் பாசிலும் அவரை சரியாக பயன்படுத்தி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. மிகவும் கறாரான விமர்சனம். மறுபக்கம் மற்றும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படங்களில் ஓரளவு நன்றாகத்தான் செய்தார். சிந்து பைரவி, பாசப்பறவைகள் இவற்றிலும் தேவலாம். நீங்கள் சொல்லும் ஸ்டீரியோ டைப் விஜயகாந்த், சரத்குமார் வகையறாக்களுக்கும் பொருந்தும். ஆயினும் சராசரிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வயதான பின் செய்த பாத்திரங்கள் (ராஜ் சொல்வதுபோல் சேது, கா.மரியாதை போன்றவை) எவ்வளவோ பரவாயில்லை.

    சூர்யாவைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், 'காக்க காக்க' மற்றும் 'நந்தா' வையும் சேர்க்கவேண்டும். பிரெண்ட்ஸ் கூட அவர் நன்றாக நடித்த படம்.

    உங்கள் வாசிப்புக்கும், திரையுலக அனுபவத்திற்கும் இன்னும் சற்று விரிவாக (2-3 பதிவுகளாகக் கூட) எழுதலாம். It doesn't do justice to the topic.

    அனுஜன்யா

    ReplyDelete
  8. சிவாஜியை எனக்கு பிடிக்காது என்பது போல சிவக்குமாரை உங்களுக்கு பிடிக்கவில்லை. அவர் சினிமாவில் நடித்ததை விட சித்தி மெகாத்தொடரில் நன்றாக நடித்தார் என்று நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  9. சிவகுமாரும் குமாரர்களும் என்ற உங்கள் கட்டுரை படித்தேன். அதில் சிவகுமாரை விட சூர்யாவும் கார்த்திக்கும் நன்றாக நடிக்கிறார்கள் என்ற உங்கள் வார்த்தைகள் எதோ புதிதாக சொல்ல போகுறீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்று கூரியபோது தான் உங்களுக்கு சினிமாவை பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது உறுதியாகிவிட்டது. தமிழனை தவிர எந்த ஒரு மானகெட்ட இனமும் ரஜினியின் படத்தை ரசிக்காது. ரஜினியின் படத்தை ரசிக்கும் ஒருவனால் மற்ற நடிகர்களின் படத்தை ரசிக்க முடியாது.

    ReplyDelete
  10. டீவியில் சிவகுமார் படம் வந்தால் எங்க பாட்டி என்னிடம் சொல்லும் "ஒன்னு இவன் பொண்டாடி செத்துடும், இல்லாட்டி எவனோடவாவது ஓடி போயிடும்...கருமம்! படத்த நிறுத்துடா!"

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.