அஜாடிகள் - அதாவது ஜாடை தெரியாதவர்கள் கச்சேரியில் முன் வரிசையில் உட்கார்ந்து விடக்கூடாது என்று விளாத்திகுளம் சுவாமிகள் சொல்வாராம் . கி.ரா சொன்னார் என்னிடம் .
டி.என் .ராஜரத்தினம் பிள்ளை சுவாமி புறப்பாட்டின் போது நடந்து கொண்டே வாசிக்கும் போது ஒருவன் முன்னால் அவர் பார்க்கும்படியாக பிரமாதமாக சொடக்கு போட்டு தலையை ஆட்டி கொண்டே வந்தானாம் . தோடி இவருடைய பிரத்யேக ராகம் . அரைமணி நேரம் நடந்து கொண்டே இவர் வாசித்து முடித்தவுடன் , அவரிடம் அந்த பிரமாதமாக ஆகாகாரம் போட்டு ரசித்துகொண்டே வந்த அந்த ஆள் ' அடுத்த படியாக தோடி வாசிங்கோ ' என சத்தமாக சொல்லியிருக்கிறான் . ராஜரத்தினம் தன் பக்கத்தில் ஒத்து ஊதி கொண்டு வந்தவன் முதுகில் ஒரு போடு போட்டாராம் .
" எங்கேடா அந்த தோடி வாசிக்கிற நாகஸ்வரம் . எடுத்துட்டு வரலையா "
எந்த கலைஞனுக்கும் இந்த அஜாடிகள் அலர்ஜி தான் .
புதுமைபித்தனின் ' சிற்பியின் நரகம் ' கதையில் வரும் சிற்பிக்கு இந்த உளைச்சல் தானே .
எதற்கு சொல்கிறேன் என்றால் எழுத்துக்கும் இது பொருந்தும் .
தத்து பித்து என்று பல பின்னூட்டங்களை பார்க்கும்போது இந்த அஜாடிகளை என்ன செய்ய என்று தோன்றும் . வடிகட்டி தான் போடவேண்டும் .அப்படி நிர்த்தட்சன்யமாக புறக்கணித்து விட வேண்டியிருக்கிறது .
There are obvious dangers in the pleasure of Blog writing!
>" எங்கேடா அந்த தோடி வாசிக்கிற நாகஸ்வரம் . எடுத்துட்டு வரலையா "< நச்சென்ற வரி.
ReplyDeleteஅன்புடன்
சூர்யா.
//There are obvious dangers in the pleasure of Blog writing! //
ReplyDeleteஇணையத்தால் ஏற்படும் சங்கடங்களில் இந்த மாதிரியான பின்னூட்ட சமாச்சாரமும் ஒன்று.
உங்கள் பதிவுகளின் மூலம் பல பழைய விஷயங்களை சுவாரசியமான எழுத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே பின்னூட்டங்களின் மூலம் ஒருவேளை மனம் நொந்து எழுதுவதைப் புறக்கணித்து விடாதீர்கள். அவற்றைப் புறக்கணியுங்கள்.