Share

Oct 13, 2008

Rev.Fr விக்டர் S.J.

Trichi St.Joseph’s ல் பள்ளிபடிப்பு. Madurai American Collegeல் கல்லூரி படிப்பு .

படிக்கிற காலத்தில் நான் ரொம்ப பாபுலர் .
Rev.Fr விக்டர் பள்ளியில் என்னிடம் அடிக்கடி கேட்பார் . ' நீ பின்னால் ரொம்ப பிரபலமான ஆளாய் வருவாய் . பிரபலமான மனிதராய் இருக்கும்போது என்னை நினைப்பாயா . எப்போதாவது நினைத்து பார்ப்பாய் .'
பாட்டு , நடிப்பு , வாசிப்பு , எழுத்து என எல்லா துறையிலும் பேர் வாங்கியவன் என்பதால் இப்படி என்னைப்பற்றி நம்பினார் .
Rev.Fr விக்டர் அன்பே உருவானவர் . கோபமே பட மாட்டார் .பல நல்ல நூல்களை எனக்கு படிக்க கொடுத்தவர் . ஜெயகாந்தனின் 'உன்னை போல் ஒருவன் ' படம் லாலி ஹாலில் திரையிட்டார்கள் . அந்த படம் நானும் பார்க்க ஆசைப்பட்ட போது ' வேண்டாம்டா .உனக்கு இந்த வயதில் அந்த படம் புரியாது .நீ இப்போது சிறுவன் . கல்லூரியில் படிக்கும்போது கட்டாயம் நீ பார்க்கலாம் ' என்றவர் .

பின்னால் இவர் பாளையங்கோட்டை St.Xavier’s Collegeக்கு Rector. இப்போது சென்னை லயோலா கல்லூரியில் இருக்கிறார் .

Father! நான் பிரபலமாவேன் என்ற நம்பிக்கை இன்று பொய்யாகி விட்டது .
கொஞ்சம் கூட நான் பிரபலம் ஆகவில்லை . அந்தஸ்து , கெளரவம் , வாழ்க்கை வசதி எதுவும் இல்லை .

நான் உங்களை ஏமாற்றி விட்டேன் பார்த்தீர்களா !
My life is entirely different now from what You would have liked it to be.

ஆனால் உங்களை எப்போதும் வணக்கத்துடன் நினைத்து கொண்டே இருக்கிறேன் !

இந்த வஞ்சக உலகத்தின் கோர முகங்களை கண்டு மிரண்டு தவித்து போன எனக்கு உங்களை போன்ற புனிதரை நினைப்பது தான் ஒரே ஆறுதல் .

தலைமையாசிரியர் மறைந்த Rev Fr மச்சாடோ ,
Rev Fr தம்புராஜ் , ( லோயோலா காலேஜ் இல் முன்னாள் ரெக்டர் )
மறைந்த Rev Fr கஷ்மீர் ஞானதிக்கம் ( அப்போது திருச்சி ஜோசெப்ஸ் ரெக்டர் , பின்னால் ஆர்ச் பிஷப் )
Rev Fr கேப்ரியல் லாரன்ஸ், Rev Fr லூயிஸ்
ஆகியோரையும் உங்கள் சேசு சபையை விட்டு வெளியேறிவிட்ட சாமிதுரை , அருள் இருதயம் , ஜேசுராஜா ஆகியோரையும் வணக்கத்துடன் நினைவு கூர்கிறேன் .

9 comments:

  1. நீங்கள் பணம் சம்பாதிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, புகழ் பெறவில்லை என்று சொல்லிவிட முடியாது. இலக்கிய வட்டாரத்திலும், இணையத்திலும் உங்களைப் பலருக்குத் தெரிந்திருக்கிறதே. சிறு சிறு பதிவுகளாக எழுதுவதைக் கொஞ்சம் விரிவாக எழுதி, கட்டுரைகளாக்கி நூல் வடிவில் வெளியிட்டால் நீங்கள் மேலும் பரவலாக அனைவருக்கும் தெரிய வருவீர்கள் என்பது என் கருத்து.

    புகழ் பெறுவதா, இல்லை இப்படியே இருப்பதா என்பதை ஒவ்வொருவரும் அவரவர்களே முடிவு செய்ய வேண்டும். புகழ் பெறுவது பல வேளைகளில் தொந்தரவைக் கொண்டு வருகிறது. உங்கள் நேரம் வீணடிக்கப்படும். தெருக்களில் நடக்கும்போது மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவீர்கள். சுதந்திரமாக சைட் கூட அடிக்க முடியாது. பேரம் பேச முடியாது (பெரிய எழுத்தாளர்/நடிகர்/இசைக்கலைஞர். ஆனா அற்பத்தனமா பேரம் பேசறாரே!), நிறைய பேர் கடன், உதவி கேட்டு வருவார்கள். யாருடனாவது சேர்ந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டியிருக்கும். தேவையா இது?

    ReplyDelete
  2. //நான் பிரபலமாவேன் என்ற நம்பிக்கை இன்று பொய்யாகி விட்டது .// நாளை மெய்யாகலாம்.

    ReplyDelete
  3. திருச்சி புனித ஜோசப் கல்லூரி மாணவனான எனக்கு நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் .நன்றி!

    ReplyDelete
  4. ராஜநாயஹம்: பிரபலமானவன் யார்? அதற்கு ஏதாவது அளவுகோல்கள் இருக்கின்றனவா? அதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம்? பணமும் புகழும் சாசுவதமா? அப்படியொன்றால் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த நடிகர் தியாகராஜ பாகவதர் ஏன் கடைசிக்காலத்தில் ரசிகரான ஒரு ரிக்‌ஷாக்காரர் பராமரிப்பில் இறந்தார்?

    என்னைப்பொறுத்தவரையில், நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நல்லவனாக வாழ முயற்சி செய்தாலே நாம் பெரியவர்கள் தாம்! நாம் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் தான்.

    ஐம்பதுகளில் தில்லிக்குப்போனபோது, அங்கு என் தூரத்து உறவினர் IAS பாஸ் பண்ணிவிட்டு பெரிய வேலையில் இருந்தார். அழைப்பின் பேரில் அவர் வீட்டு விசேஷத்துக்கு போய்விட்டு, அவர் வீட்டார் காட்டிய அலட்சியத்தால், பரிசைக் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் வந்திருக்கிறேன். பிறகு என்னிடமும் கார் பங்களா வசதிகள், தில்லி தமிழ்ச்சமூகத்தில் அங்கீகாரம் வந்தபோது, என் நட்புக்காக விழைந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை அவருக்கு நினைவூட்டினேன் -- அதுவும் ஐம்பதுபேர் இருந்த சபையில்.

    இப்போது என்னிடம் Inferiority Complex சுத்தமாக இல்லை. நான் தான் உலகத்திலேயே உயர்ந்த மனிதன்! இப்படி நான் நினைப்பதை யார் தடுக்கமுடியும்?

    நாம் எல்லோருமே உயர்ந்த மனிதர்கள், நல்ல மனிதர்கள்!

    பாரதி மணி

    ReplyDelete
  5. Thank you
    Vasanth,Robin and Joe

    Bharathi Mani Sir,

    Thanks for your beautiful comment.

    ReplyDelete
  6. RP sir,

    I feel you are already famous, I follow your blog almost daily (unless otherwise my I-net is down), I love the way you describe your past experience, there is always I find something as a "take away".

    Thanks for genuinely coming out with your past,there is a lot for us to learn from you.please keep writing in various topics.

    You are really good at heart is what I felt after reading all your posts.

    Thanks...

    ReplyDelete
  7. Cogito!
    Thanks for your admiring comments.

    ReplyDelete
  8. என்ன ராஜ நாயஹம்( சரியாக 'ஹ' போட்டு விட்டேன்) நீங்களுமா புகழுக்கு ஏங்குகிறீர்கள். இருக்காது. பாதர் சொன்னது பலிக்க வில்லை என்ற உங்கள் உறுத்தலைப் பதிவு பண்ணி இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். திரு பாரதி மணி மிக அழகாக பதிவு பண்ணி இருக்கிறார்.

    நீங்கள் நல்ல மனிதர், அன்புள்ளம் கொண்டவர் என்பதை நான் அறிவேன். வாசகர்களும் எழுத்தின் மூலம் அறிந்து வருகிறார்கள்.

    மேலும் காலம் ஒன்றும் கடந்து போகவில்லை. புகழ் என்பது சில நேரம் ஒரு வினாடியில் கூட வரும் ஒன்று.உ-ம் ஹிதேந்திரனின் பெற்றோர்.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  9. I don't think you are not famous.

    U deserved for it and your fame should make "real" fame among the people.

    I'm jus a very ordinary reader but reading your blogs is the grt success and fame of you.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.