Share

Oct 11, 2008

புரடக்சன் அசிஸ்டன்ட்ஸ்

சினிமாவில் இந்த புரடக்சன் அசிஸ்டன்ட்ஸ் நிலை பற்றி சொல்லவேண்டும் . ஷூட்டிங் சமயங்களில் ,டப்பிங், எடிட்டிங் என்று எல்லா முக்கிய கட்டங்களிலும் படக்குழுவினருக்கு இவர்கள் தான் பெட் காபி துவங்கி இரவு உணவு வரை கொடுப்பவர்கள் .
இரவு எல்லோருக்கும் பின் உறங்கி அதி காலை மூன்று மணிக்கு எழுந்து வேலையை ஆரம்பிப்பவர்கள் .
கதா நாயகி சோழா ஸ்டார் ஓட்டல் பட்டர் சிக்கன் கேட்டால் ஒரு தடவை சோழா போய் பத்து சோழா கவர் வாங்கி அடுத்த ஒன்பது முறை வேலு மெஸ்ஸில் கோழி பார்சல் வாங்கி சோழா கவரில் போட்டு கொடுத்து விடுவார்கள் .
சினிமா கிசுகிசுக்கள் இவர்களுக்கு அத்துப்படி .
உழைக்கிற நேரத்தில் முழு போதையில் இவர்களில் பலர் இருப்பார்கள் . உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் பழக்கங்கள் நிறைய இவர்களிடம் உண்டு
இருபது வயதில் ஆரம்பிக்கும் இவர்கள் புரடக்சன் அசிஸ்டன்ட் வாழ்க்கை முப்பத்தைந்து வயதிற்குள் முடியும் . கிழவனாகி விடுவார்கள் . அந்த அளவுக்கு ஆன பின் இவர்களை

படக்கம்பனிகள் ஒதுக்கி விடுவார்கள் . எதிர்காலம் கேள்விக்குறி ?

மன உளைச்சல் கடைசி ஐந்து வருடங்களில் அதிகமாகி புரடக்சன் அசிஸ்டன்ட்ஸ் புலம்பி தவிப்பார்கள் .

பேசும்போது பல அபூர்வ தகவல்கள் இவர்களிடம் இருந்து கிடைக்கும் .

ஒரு புரடக்சன் அசிஸ்டன்ட் என்னிடம் சொன்ன ஒரு தகவல்

"கம்ப தாசன் எனக்கு ஒரு ரூபா கடன் தர வேண்டும் . அவர் மகள் இப்போ ஒரு டான்ஸ் மாஸ்டர் கிட்ட டான்ஸ் அசிஸ்டன்ட் ."

2 comments:

  1. >கதா நாயகி சோழா ஸ்டார் ஓட்டல் பட்டர் சிக்கன் கேட்டால் ஒரு தடவை சோழா போய் பத்து சோழா கவர் வாங்கி அடுத்த ஒன்பது முறை வேலு மெஸ்ஸில் கோழி பார்சல் வாங்கி சோழா கவரில் போட்டு கொடுத்து விடுவார்கள் .> சினிமா உலகின் அக்கு வேறு ஆணீ வேறாக கவனமாக சுவையாகப் பதிவு செய்கிறீர்கள். பட்டையைக் கிளப்புங்கள்.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. //கதா நாயகி சோழா ஸ்டார் ஓட்டல் பட்டர் சிக்கன் கேட்டால் ஒரு தடவை சோழா போய் பத்து சோழா கவர் வாங்கி அடுத்த ஒன்பது முறை வேலு மெஸ்ஸில் கோழி பார்சல் வாங்கி சோழா கவரில் போட்டு கொடுத்து விடுவார்கள் .//

    :-))

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.