Share

Oct 7, 2008

பின்னூட்டங்கள்

படு அபத்தமாக பின்னூட்டங்கள் வருகின்றன . பின்னூட்டங்கள் பதிவதை நிறுத்தி விடலாமா என தோன்றுகிறது .
ஏற்கனவே சாரு நிவேதிதா வலைதள அபத்த பின்னூட்டங்களின் தரம் பற்றி எழுதிவிட்டார்!
என்னோடு முரண் படுவதற்கு ஒரு தகுதி வேண்டாம். ஆனால்
ஓரளவிற்கு என் வலைத்தளம் பற்றி தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரிய வேண்டும் . என் எழுத்து எல்லோரும் வாசிப்பதற்கு எளிமையாய் உள்ளது .இதனால் சில ஆபத்துகளும் இருக்கிறதை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் .
என் எழுத்து இரண்டாம் வாசிப்பை வேண்டுவது . முதல் வாசிப்பில் என் எழுத்து புரியாது . மறு வாசிப்பு அவசியம் . எனக்கென்று இல்லை .நல்ல எழுத்து எப்போதும் மறுவாசிப்பை எதிர்நோக்கியுள்ளது .
கிளிபிள்ளைக்கு சொல்வது போல சொல்லி புரிய வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது . Carnal thoughts -5 க்கு வந்துள்ள பின்னூட்டம் பார்க்கவும் . அதனால் இப்போது அந்த என் பதிவில் கூட இரண்டு வரிகள் சேர்த்துள்ளேன் .
சினிமாக்காரர்கள் பற்றி நான் எழுதுவது சிக்கல்கள் குறித்ததாக . மனிதவியல் உளவியல் சிக்கல்களை சுட்டத்தான் . தமிழ் சினிமா அபத்தங்களை காட்ட . மிக பழைய நடிகர்கள் பற்றி நான் எப்படி எழுத முடிகிறது . நான் எழுபதாண்டு தமிழ் சினிமா பற்றி அறிந்தவன் . அதோடு எனக்குஅப்போது இருபது வயதில்கூட நண்பர்கள் அறுபது ,எழுபது வயதை தாண்டியவர்கள் பலர் இருந்தார்கள் !
சுரேஷ் கண்ணனின் பின்னூட்டத்தை நான் மிகவும் மதிக்கிறேன் .இரண்டே இரண்டு முறை அழகாக பின்னூட்டமிட்டார் . அவருடைய ' பாக்ய ராஜ் பற்றிய மதிப்பீடுக்கு படு அபத்தமான பல எதிர்வினைகள் . அவற்றை இங்கே நான் அனுமதிக்க விரும்பவில்லை .
தயவுசெய்து கண்ணதாசன் ,வைரமுத்து ,பாலகுமாரன் ,பாக்யராஜ் ,ரசிகர்கள் ஒதுங்கி கொள்ளலாம் .இது உங்களுக்கான தளம் அல்ல . சுஜாதா வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கலாம் .
ஏற்கனவே ஜெகம் பிராடு வின் ஜால்ரா பற்றிய குறிப்பிற்கு பின் அந்த Coterie யின் "அனானி "அசொசியசன் தொடர்ந்து மிரட்டுவதாக நினைத்துக்கொண்டு பின்னூட்டம் இடுகிறது . இதோடு இப்படி அப்பாவிகளின் பால் மன பின்னூட்டங்கள் சகிக்கவில்லை . மேலும் கொள்கை சிங்கங்களின் கர்ஜனை வேறு ! அமைப்புகள் பற்றி அக்கறை எனக்கு கிடையாது .

தொடர்ந்து நான் எழுதும் விஷயங்கள் பல நல்ல சிறுகதைகளுக்கான கருக்கள் . குறும்படங்களுக்கான கருக்கள் . இந்த மாதிரி கரு கிடைக்கும் போது மற்றவனெல்லாம் விளக்கெண்ணையை எடுத்து குண்டி கழுவுவது போல பல பக்கங்களுக்கு சிறுகதையாக்கி விடுவான்! இப்படி பல அன்பர்கள் தொலை பேசியிலும் நேரிலும் ஈமெயில் மூலமாகவும் தெரிவித்தார்கள் .
ஆம் .
ஒரு வகையில் அந்த எழுத்தாளன்களுக்கு எதிரான பகடி தான் என் குறிப்புகள் .
Short ,crisp write-ups !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.