Share

Oct 10, 2008

ரவிச்சந்திரன்

திருச்சி பீமநகர் ராஜா காலனி வீடு .நான் குடியிருந்த போது ( இந்த வீடு தான் சிலவருடம் கழித்து கார்கில் தியாகி மேஜர் சரவணன் குடும்பம் குடியேறி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து பின்னால் அவர் மேஜர் ஆகி உயிர் துறந்த போது பிரபலமானது ) எதிரே கணபதி புரத்தின் பின் பகுதி . அங்கே குடியிருந்த மாமிக்கு என் ஒரு வயது மகன் கீர்த்தியின் மீது மிகவும் பிரியம் . எந்நேரமும் குழந்தை அவர் வீட்டில் தான் . குழந்தை கீர்த்தியை அவர் சீராட்டினார் . அப்போது அங்கே உள்ளவர்கள் சொல்வார்கள் . சென்ற வருடம் வரை அந்த மாமி அந்த தெருவில் குடியிருந்த நடிகர் ரவிச்சந்திரன் ( காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்தான் ) அவர்களின் இரண்டாவது மகன் ஹம்சவர்த்தனை தான் கொஞ்சி சீராட்டிகொண்டிருந்தார் . ரவிச்சந்திரன் குடும்பம் எதிரே யானை கட்டி மைதானம் தெருவில் குடி புகுந்தது . அதன் பின் அந்த மாமிக்கு சீராட்டி பாராட்ட கிடைத்த குழந்தை தான் கீர்த்தி . மாமியும் 'எப்படியோ ரவிச்சந்திரன் குடும்பம் எதிர் தெரு போன பின் குழந்தை ஹம்சவர்தன் போய்விட்டானே என தவித்து போய் இருந்த போது ராஜநாயஹம் மகன் கீர்த்தி வந்து கவலையை தீர்த்து விட்டான் 'என சொல்வார்கள் .
பீம நகரில் கிருஷ்ணன் கோவிலுக்கு போனால் 'இப்போ தான் ரவிச்சந்திரன் வந்து பகவானை சேவிச்சிட்டு போறார் .' என அய்யர் சொல்வார் . மெயின் கார்ட் கெட் போனால் பர்மா பஜாரில்' இப்போ தான் நடிகர் ரவிச்சந்திரன் வந்துட்டு போனார் 'என்பார்கள் . நான் பார்த்ததில்லை .
ஆனால் நான் சிறுவனாய் இருக்கும்போது( 14 வயது )கரூரில் ஒரு நாடகமொன்றிற்கு தலைமை தாங்கினார் நடிகர் ரவிச்சந்திரன் . சரியான கூட்டம் . அந்த நாடகம் பார்க்க ரவிச்சந்திரன் உட்கார்ந்த போது அவருக்கு பக்கத்தில் நான் தான் உட்கார்ந்தேன் .உட்கார வைக்கப்பட்டேன் .ஒரு இரண்டு மணி நேரம் அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தும் நடிகர் ரவிச்சந்திரன் என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை . ' 'என்ன தம்பி , என்ன படிக்கிறே , உன் பேர் என்ன '-இப்படி கேட்பார் என சிறுவனாய் இருந்த நான் ரொம்ப ஏங்கினேன் . ஆனால் ரவிச்சந்திரன் நிறைய சிகரெட் பிடித்துகொண்டே இருந்தார் .என்னிடம் பேசவே இல்லை .

2 comments:

  1. பெங்களூரில் இரவிச்சந்திரன் என்றொருவர் சுஜாதாவின் 'குளோனிங்' போல் எழுதிக் கொண்டிருந்தார். பிற்பாடு அவர் தற்கொலை செய்து கொண்டார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் உரைநடை எனக்குப் பிடித்தமானது. தலைப்பை பார்த்த கணத்தில் அவரைப் பற்றிய பதிவோ என்று நினைத்தேன்.

    //என்னிடம் பேசவே இல்லை .//

    அழகான, குரூரமான சித்திரம்.

    நடிகர்களின் நிஜ முகங்களை அறியாத நாம் நிழலில் தெரியும் அவர்களின் நேர்மையான பிம்பங்களை நம்பி தேசத்தையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  2. Suresh Kannan,

    You have caught what I said!

    thanks a lot.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.