Share

Oct 17, 2008

ஷார்ல் பாதலேர்


நிறைய விபச்சாரிகளிடம் ஷார்ல்பாதலேர் உறவுகொண்டான் . சாரா என்ற செக்ஸ் தொழிலாளி தான் அவனுக்கு வாழ்க்கை துணை . கொனோரியா , சிபிலிஸ் வியாதிகள் அவனுக்கு கிடைத்தன . சிபிலிஸ் வியாதி முற்றி அம்மா மடியில் உயிர் விட்டான் .

ஷார்ல் பாதலேர் நாற்பத்தி ஆறு வயது வரைவாழ்ந்தவன் . ஆடைகளை நேர்த்தியாக உடுத்துவதில் பாதலேர் ரசிகன் . நிறைய செலவாளி . அதனால் கடனாளி .
ரைம்போ சொல்வான் ' பாதலேர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞன் !'
அவனுடைய 'துன்ப மலர்கள் ' கவிதைத்தொகுதி யில் ஆறு பகுதியை சென்சார் செய்தார்கள் .
அவற்றை தேடி பிடித்து நான் படித்தேன் .
பிரஞ்சு கவிதையுலகின் மிகப்பெரிய சாதனையாளன் .
நாகார்ஜுனன் கொடுத்து வைத்தவர் . நேரடியாக ரைம்போ , பாதலேர் இருவர் மட்டுமல்ல எல்லோரையும் நேரடியாக பிரஞ்சு மொழியிலேயே படித்து விட்டவர் .
ரைம்போ , பாதலேர் இருவரையும் நான் ஆங்கிலத்திலேயே படித்தேன் . இருவர் பற்றி மட்டும் ஒரு நோட் புக் தனியாக குறிப்பெடுத்தேன் அந்த காலத்தில் .

இப்போது என் நினைவிலிருந்தே அவன் கவிதை வரிகள் சில யோசித்து தருகிறேன் .
Get Drunk
One should always get drunk.
You must get drunk without cease.

இந்த கவிதை படித்த போதே பாதலேர் எழுதியவை Dark poetry வகை தான் என தெரிந்தது .
Jeane Duval என்ற பெண்ணோடு தான் ரொம்ப நாள் வாழ்ந்திருக்கிறான் . அவளுக்கு தான் கீழ் கண்ட கவிதைகளை எழுதியிருப்பானோ ?
Hymn to Beauty
….
Who cares if you come from Paradise or Hell
…….
Come from Satan, come from God- who cares!


அவளை வரைய ஆசைப்பட்டிருக்கிறான் .

The desire to paint
I am burning to paint her

She is Lovely, more than Lovely:
…..
I would compare her to a black sun,
…..
But it is the moon , rather, to which
She is more readily likened.


கஞ்சா , குடி என்றே வாழ்ந்திருக்கிறான் . அவன் அம்மா பாதலேர் இறந்த பின் அவன் கடன்களை தீர்த்திருக்கிறாள் .
46 வயதில் தன் மகன் இறந்த போது தன்னை எப்படி தேற்றிகொள்ளமுடிந்தது .
“I see that my son, for all his faults, has his place in Literature.”

பெரும்பாலான அவன் எழுத்து அவன் மறைவிற்கு பிறகே பிரசுரிக்கப்பட்டது .

பாதேலேருக்கு அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ மீது ,ரிச்சர்ட் வாக்னர் இசை மீது மிகுந்த மரியாதையும் ஆர்வமும் இருந்தது .

அவன் எந்த அளவுக்கு செலவாளி என்றால் அவனுடைய வசதிக்கு மேல் வாங்க புத்தகம் , ஓவியம் ,புராதன பொருட்கள் இப்படி வாங்கி சேர்க்க ஆசைப்பட்டவன் .

கல்யாணம் என்பது பற்றி அவன் சொன்னான் .

“Unable to suppress love, the church wanted atleast to disinfect it and created Marriage.”

தன்னை பற்றி அவன் சொன்னது

“I have no convictions, because I have no ambitions. However I have some convictions, in a nobler sense, which cannot be understood by the men of my time.”

1 comment:

  1. He desire to paint
    He burning himself into paint
    He is lovely, he lived life as he likely
    Who should compare his 'living' (most of writers burning himself)
    who cares if you come from paradise or hell
    Live as a Paradise in hell

    summa unarchivasapattuten...kandukathinga :)

    Most of writers burning himself with sarakku and Pengal... Why RP?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.