Share

Oct 3, 2008

ஒரு எழுத்து வியாபாரி - ஒரு சினிமா வியாபாரி

வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி பாக்யராஜ் அடிக்கடி ராசுகுட்டி பட வேலைகளில் இருந்த காலங்களில் சொன்ன ஒரு விஷயம் .
' பாலகுமாரனாலே ஒரு சீக்வேன்சி கூட ஸ்டோரி டிஸ்கசன் லே சொல்ல முடியலே.'
( Sequence என்பதை சினிமாக்காரர்கள் சீக்வேன்சி என்பார்கள் - சீன் என்று அர்த்தம் )
'இது நம்ம ஆளு 'படத்தில் இயக்கம் பாலகுமாரன் என எழுத்து போடுவார்கள் . அந்த படத்தில் பாலகுமாரனால் ஒரு காட்சி கூட சொல்ல முடியவில்லை .
வண்டி ,வண்டியாநாவல்களை எழுதி தள்ளுன ஆள் கதை எவ்வளவு விசித்திரம் பாருங்கள் .

சரி .பாக்யராஜ் க்கு பிடித்த எழுத்தாளர் என்று அப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் .
அகில இந்தியாவிலும் 'திரைக்கதை Specialist’ என மட்டை கட்டப்பட்ட நடிகர் பாக்ய ராஜுக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் தெரியுமா ?

தாமரை மணாளன் !
“He who makes a Beast of himself gets rid of the pain of being a Man”

-Samuel Johnson

1 comment:

  1. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்றொரு saying உண்டு. பாக்யராஜ் சிறந்த திரைக்கதையாசிரியர் என்பதும் அதில் ஒன்று. சிறந்த திரைக்கதையுள்ள படங்கள் என்று நான் வரையறை கொள்வது 'எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காததும், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதும்'. அந்த அளவுகோலில் பாக்யராஜின் ஒரு படமும் தேறாது.

    அசட்டு நகைச்சுவையின் மூலம் தமிழச்சினிமாவின் சூழலை மாசுபடுத்திய இவருக்கும் பிரதான பங்கு உண்டு.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.