Share

Oct 23, 2008

Albert Camus’s ‘The Fall’

ஜெகம் பிராடு எழுத்தாளன் இருக்கானே , அவன் சுந்தர ராமசாமி செத்தப்ப சாப்பிடாம தூங்காம பேலாம எழுதின புத்தகத்திலே 'அல்பெர் காம்யுவை எனக்கு பிடிக்காது 'ன்னு எழுதியிருக்கான் .
அதை படிச்சப்ப எனக்கு ஒரு ஞாபகம் வந்துச்சு . மௌன்ட் ரோட்டில் அந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒக்கார்ந்திருப்பான் . அடிக்கடி அவன் சத்தம் போட்டு சொல்வான் ' ஸ்விட்சர்லாந்து எனக்கு பிடிக்காது . அங்கே நான் போக மாட்டேன் . போகவே மாட்டேன் '
பாவம் ஜெகம் பிராடு கூட இந்த பிச்சைக்காரன் மாதிரி தான் .

ஆல்பெர் காம்யு வின் " வீழ்ச்சி " நாவலில் ஒரு காட்சி .

"சுவர்களால் கட்டப்பட்ட ஒரு பெட்டி போன்ற ஒன்று . அதற்குள் சிறைகைதிகள் ஆடாமல் அசையாமல் நிற்பது மட்டுமே சாத்தியம் . கைதிகளின் முகங்கள் மேலே காணும்படி கதவின் உயரம் தாழ உள்ளது . அந்த பாதையில் செல்லும் சிறை அதிகாரிகள் கைதியின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு போவார்கள் . சங்கிலியால் நன்கு பிணைக்கப்பட்ட கைதி தன் முகத்தில் வழியும் எச்சிலை துடைக்க வழியேதும் கிடையாது . ஆனால் அதிகாரிகள் காறி உமிழும்போது கைதிகள் தங்கள் கண்களை மூடிக்கொள்ள அனுமதிக்கபட்டிருந்தார்கள் ."

இந்த நாவல் மனிதவியல் ,உளவியல் பற்றி முன் வைத்த கேள்விகள் முழுமையாக அதிக பட்சமாக இருக்கிறது .
போப் தன் சிம்மாசனத்தை விட்டு , வாடிகனை விட்டு கிளம்பி அயோக்கியர்கள் இடையில் வாழவேண்டும் . நாம் சீக்கிரமாக ஒரு புது போப் தேர்ந்தெடுக்க வேண்டும் .
பரிசுத்தம் , நீதி இரண்டுமே ஒன்று சேர முடியாத படி பிரித்து வைக்கப்பட்டுள்ளன . பரிசுத்தம் சிலுவையில் அறையப்பட்டும் நீதி என்பது அலமாரியிலும் தெரியகிடைக்கின்றது .

ஒரு மனிதன் தன் பொய்களை பற்றி ஒப்புக்கொள்ளாமல் மரணமடைய கூடாது .

சந்தோசம் உள்ளவனாக இருக்க வேண்டுமானால் அடுத்தவர்களை பற்றி ரொம்ப பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் .


க்லமன்ஸ் சொல்கிறான் " தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை நான் ஒதுக்கியிருப்பேன் . அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன் ."

3 comments:

  1. Your literary tastes makes me envious. Can you give us a list of must-read Tamil novels (including short stories) ? It will be of great use to me, a neophyte, who is just taking first stumbling steps into tasting Tamil literature.

    ReplyDelete
  2. In my village a couple of decades back there was drunkard. he was a very hard worker during the day and gets wildly drunk in the evening. he was very famous for oneline Question and Answer with himself like below:
    "Naan Pazhaya Sorae thingamaataen.
    Yaendaa?
    Irundhaathane!"
    The swiss comment from the begger reminded me of this.

    ReplyDelete
  3. ஜெகம் பிராடு யாரென்று க்ளூ கொடுக்க முடியுமா? Curioscity killing me :-)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.