Share

Oct 9, 2008

நாகார்ஜுனன் சினிமா சர்வே

நாகார்ஜுனன் தன் blog ல் "அடுத்த ஓராண்டுக்கு தமிழ் சினிமா இல்லை ?" என்ற கட்டுரையில்

சினிமா பற்றிய கருத்தரங்கத்திற்கு ஒரு சர்வே பதினோரு கேள்விகள் கொடுத்து அதற்கு பதிலும் கொடுத்திருக்கிறார். தமிழர் அனைவரும் அந்த கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும் .

அதற்கு நாகார்ஜுனனின் ஒரு பதிலுக்கு என் அபிப்பராயம் .

5 -அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நாகார்ஜுனன் : திராவிட இயக்கத்துக்காக திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் கொடியேற்றி தண்டனை அனுபவித்த அந்துவான் என்ற எஸ்.ஏ. அசோகன் நாடகம், சினிமா எல்லாம் கழிந்து இறுதியில் சோ, ஜெய்சங்கர் போன்ற நிச்சய பிராமணர்களை நண்பர்களாக ஏற்று வாழ்ந்தது.

RP ராஜநாயஹம் said...
அந்துவான் மரியதாஸ் என்ற மறைந்த வில்லன் நடிகர் எஸ்.ஏ. அசோகன் உங்களை நிறையப் பாதித்திருக்கிறார். 'எறந்தவனை சுமந்தவனும் எறந்துட்டான்' பாடலை முழுமையாக ஜான் ஆப்ரஹாம் பற்றிய கட்டுரையில் தந்திருக்கிறீர்கள்! இதில் ஐந்தாவது கேள்விக்கு உங்கள் பதில் விசித்திரம். அசோகன் திராவிட சித்தாந்தங்களில் இருந்து பிறழ்ந்துவிட்டது பெரிய அதிசயமா? Hypocrisy திராவிட கொள்கைச்சிங்கங்கள் அனைவருக்கும் பொதுவானது. அதுபோக அசோகன் தன் பிள்ளைகளுக்குக் கூட அமல்ராஜ், வின்சென்ட் என்று கிறித்தவப்பெயர்களை இட்டவர். பிராமணப்பெண்ணைத் திருமணம் செய்தவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுகூட அவருடைய பிராமண நேசத்துக்குக் காரணமாக இருக்கலாம். இவருடைய அரசியல்-நிலைப்பாடு உங்களைப் பாதிக்க வேண்டிய அவசியம் - ஒருவேளை அசோகன் குடும்பம் உங்களுக்கு family friends-ஆ?ஜமாலன் கேள்வியின் முதல் பகுதிக்கு சொல்லிய பதில் reasonable. ஆனால் நீங்கள் ஒரு பொதுமையான பிறழ்வை அசோகன்மீது சுமத்துகிறீர்கள் எனத் தோன்றுகிறது. திராவிடக்கொள்கை பெரியாரில் ஆரம்பித்து ஜெயலலிதா என்ற பிராமணப்பெண்ணிடம் வந்து நின்ற ஒன்று.

அசோகன் எம்ஜியாரை நம்பி தொழில் நடத்தியும் அவர் கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னால் பொகவில்லை. சாதாரண நடிகர்கள் ஐசரி வேலன், கே. கண்ணன், சிவசூரியன்தான் போனார்கள். இதற்குக்காரணம் நம்பியார் இப்போது சொன்னார்: எம்ஜியார் சந்தேக புத்தியுள்ளவர். அதனால் சித்திரவதை. அதனால்தான் நம்பியார் போகவில்லை. அசோகன் "நேற்று இன்று நாளை" படத்தயாரிப்பாளர் ஆகி எம்ஜியார் படுத்திய பாடுதான் அவரை சோ, ஜெய்சங்கர் பின்னால் போகச் செய்தது. எம்ஜியாரின் சித்திரவதை தான் அவரை விரட்டியது. இதில் திராவிடச்சித்தாந்தக் குழப்பம் என்ன பெரிதாய் வந்துவிட்டது..."வெறுங்கையோடு திருச்சியில் இருந்து வந்தேன். வெறுங்கையோடு திருச்சிக்குப் போய் விடுகிறேன்" -இப்படி எம்ஜியார் படம் எடுத்த கடன் தொல்லை தாங்க முடியாமல் அழுதவர்தான் அசோகன் என்ற அந்துவான் மரியதாஸ்.

திராவிட இயக்க நடிகர்கள் என்றால்கூட கே. ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், எம்ஜியார் என்றுதான் நினைவுக்கு வரும். அசோகனை யாரும் திராவிட இயக்க நடிகர் எனச் சொல்லவே மாட்டார்கள்... அண்ணாத்துரையின் வண்டிக்காரன் மகன் நாடகத்தைப் போட்டார். 1971-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாகப்பட்டினத்தில் சிவாஜி பிரச்சாரம் செய்தபோது "நாகப்பட்டினத்துக்குத்தான் என் இரண்டு பெண்ணையும் கொடுத்திருக்கிறேன்" என்றார். இதற்கு அசோகன் "ஊருக்கே பொண்ணைக் கொடுத்துட்டாரா?" எனப்பேசி சிவாஜியின் பகையையும் சம்பாதித்தார்.அதுவும் எம்ஜியாரை திருப்தி படுத்த தான் . இதுதான் அசோகனின் அரசியல் செயல்பாடுகளில் இப்போது நினைவுக்கு வருவது.

என்னைத்தாக்கிய அரசியல்-சினிமா சம்பவம் என நீங்கள் அசோகனைப் பற்றிக் குறிப்பிடுவது, நடிகர் கார்த்திக் தனக்கு முதலமைச்சர் ஆகத் தகுதியிருந்தும் விருப்பமில்லை என்று அறிக்கை விட்டதைப் பார்த்து -என்னைத் தாக்கிய அரசியல்-சினிமா சம்பவம் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

பேசும்படம் பற்றிச் சொல்வது சரிதான்.

அவள் அப்படித்தான் படம்தான் நம்மைப் போன்றவர்களுக்குப் பிடித்த ஒரே படமாய் இருக்க முடியும். ஆனால் அந்த ருத்ரையா குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான் அவள் அப்படித்தான்! அவர் இயக்கிய அடுத்த படம் சந்திரஹாசனை வைத்து எடுத்த கிராமத்து அத்தியாயம் பார்த்தால் இந்த உண்மை யாருக்கும் புரியும்.

இதற்கு நாகார்ஜுனன் பதில் கீழே :

நாகார்ஜுனன் said...
ராஜநாயஹம்

1. முதலில், இந்தப்பதிவு தமிழ்ச்சினிமாவுக்கு மனத்தளவில் வெளியே வாழ்கிற ஒருவ்னால், ஆனால் வெளியே நில்லாமல் எழுதப்பெற்ற ஒன்று (நீங்கள் நிறைய ஏற்கனவே எழுதுகிறீர்கள்). எனவே என் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒப்புதல்களுடன் இருக்கிறது. ஆனால் இந்தப்பதிவு தமிழ்ச்சினிமாவைச் சிலாகிப்பதில்லை.

2. சினிமா பார்ப்பது, பிரதிகளை வாசிப்பது, வரலாற்றை நினைவுகூர்வது என்ற நிலையில் இன்றைக்கு ஆய்வு நிற்கிறது. என்ன கருதுகோள் இருந்தாலும் சரி, சினிமா-அரசியல்-தொழில்நுட்பம் தொடர்பான கள ஆய்வு வேண்டும் என்பது நான் முன்வைப்பது.

3. எறந்தவனை சுமந்தவனும்.. பாட்டு ஜான் ஆப்ரஹாமுக்குப் பிடித்தது. எனக்குப் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.

4. எனக்கு அசோகன், குடும்பத்தாருடன் நேரடித்தொடர்பு ஏதுமில்லை. இளம்வயதில் நிறையத் தமிழ், ஹிந்தி நடிகர்களை imitate செய்து கைதட்டல் வாங்கியதுண்டு. குறிப்பாக எம்.ஆர். ராதாவை. ஆனால் அசோகன் என்னை மிகவும் சிரமப்பட வைத்தார். காரணம் அவர் வில்லன் பாத்திரத்திலிருந்து அப்போது மாறிக்கொண்டிருந்தார். அசோகனை நேரடியாகப் பார்த்தது ஒருமுறையே. சென்னையில் சைக்கிளில் சுற்றும்போது பார்த்தேன்.நீங்கள் கூறும் நேற்று இன்று நாளை படவெளியீட்டுக்காக சைக்கிள் பயணம் போய்க்கொண்டிருந்தார் - பல்லாவரத்திலிருந்து அண்ணாத்துரை சமாதி வரை. அப்போதே அழும்நிலையில் இருந்தார்.

4. அவர் இறந்தபிறகு அரசியல்-சினிமாத்துறையற்ற அவருடைய நண்பர்கள் சிலரைத் தனிப்பட்ட முறையில் அறிய நேர்ந்தது. அவர்களுடன் பேசியதிலிருந்து அசோகன், திராவிட இயக்கம் என்ற பெயர்களை மறந்துவிட்டு இந்தப் பிரச்னையை அலசலாம் என்று பட்டது. ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசும் வல்லமை கொண்டிருந்த இளைஞர், இறுதியில் கோமாளியாக நடிக்க நேர்ந்திருக்கிறது. இதேசமயத்தில் அந்த இளைஞருக்கு நியாயமான லட்சியமாகத் தெரிந்த இயக்கத்தால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஆக முடிந்திருக்கிறது. அதாவது ஒரு மொத்த milieu-வாகவே மாறிவிட்டது. அந்த இளைஞரின் அழிவைத் தடுக்க முடியாத, ஏன் ஊக்குவிப்பதாக இந்த milieu மாறுகிறது. அவரும் இதற்குத் துணைபோகிறார். இறுதியில் இந்த milieu-வை விட்டு விலக வழிதெரியாத நிலை... ஆக, அரசியல்வாதியற்ற அசோகனின் எதிர்-விதி (anti-destiny), என்று நான் கூறுவது அவரைப்போன்று வந்த, வருகிற, வரக்கூடிய இளைஞர்களின் எதிர்-விதிதான். (மற்றவர்களைப் போல நேரடிப்பதவி-விழைவுகள் கொண்டவரில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்)... நண்பர்கள் exhaust-ஆன நிலையில் milieu-வில் இருந்த பிராமண நடிகர்களே எஞ்சுகிறார்கள். மீண்டும் எம்ஜியாரை அண்டி மதுக்கடை நடத்தும் உரிமம் கேட்கவேண்டிய நிலை (அதற்குப்பிறகு அண்டுவோர் தொழில்நுட்பக்கல்லூரி நடத்துவோராக மாறுகிறார்கள்...)5. சினிமாத்துறையில் பெயர்பெற்று அழிந்தவர்கள் பலரின் வரலாறு நம்மைத் தாக்கிய ஒன்றே. அதேவேளை சினிமா-உலகுக்குள் இளைஞர்களை இப்படி இழுக்கிற milieu-வை திராவிட இயக்கம், மற்ற இயக்கங்கள் தீவிரப்படுத்துகின்றன. இதில் ஒருசிலர் அடையும் வெற்றி மற்றவர்களின் அவலத்துக்கும் கோமாளித்தனத்துக்கும் இட்டுச்செல்கிறது. அதைச் சுட்டவே அசோகனை எழுதினேன்.6. ஆக, சர்வே நடத்தப்பெற வேண்டிய விஷயம், இந்த விதி, எதிர்-விதி நிகழ்காலத்தில் எப்படிச் செயல்படுகிறது என்பதே.

நாகார்ஜுனன்

2 comments:

  1. I am really excited to see that everybody saying that they like "aval appadithan". For me it is one of the wonderful movie I ever seen in tamil. Even last week while trying to see that movie again in net I got only last portion of that movie. Still I enjoyed. Two years back I saw that in movie in singapore channel. what about your opinion of Nizhal Nijamagirathu"

    ReplyDelete
  2. (edukku)this is good lesson for youngsters.... those who r attracted towards cinema...
    for me ...also

    Yeppa RP summa adhirudhila....
    (mundhinadhukku)
    azhagiya singer.... matterthampa

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.