Share

Oct 11, 2008

Carnal thoughts – 7

இன்றைக்கு முப்பத்தைந்து வருடம் முன் நடந்த சம்பவம் .
அந்த படத்திற்கு ஐந்து தயாரிப்பாளர்கள் . தயாரிப்பாளர்கள் என்றால் பூர்ஷ்வா வர்க்கம் என நினைக்க கூடாது . பெரிய கம்பனி முதலாளிகளை தவிர மற்றபடி தயாரிப்பாளர்கள் பரிதாபமானவர்கள் தான் . அதிலும் ஐந்து தயாரிப்பாளர்கள் நிலை கேட்கவே வேண்டாம் .
ரொம்ப சிரமப்பட்டு படம் ஷூட்டிங் ,எடிட்டிங் வேலைகள் நடந்த படம் . ஒரு செட்யுல் முடிந்து அடுத்த செட்யுல் ஷூட்டிங் ஆரம்பித்த போது தொழிலாளர்களுக்கு டெக்னிசியன் களுக்கு 'பேய்மென்ட் ' பாக்கி . சினிமாவில் எப்போதும் கதாநாயகன் , கதாநாயகி , இயக்குனர் போன்ற மேல் மூடிகளை தவிர மற்றவர் பாடு பண விஷயத்தில் திண்டாட்டம் தான் .. மேல்மூடிகள் பணத்தை கறந்து விட்டு படபிடிப்பு தளம் வருவார்கள் .
டெக்னிசியன் சம்பள பாக்கி காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் டெக்னிசியன் களுக்கும் வாய்த்தகராறு முற்றிவிட்டது .
தயாரிப்பாளர்களில் ஒருவர் ' இதான் , இவனுங்க தொல்லை பிடிச்சவனுங்க . ஜோலி பார்க்க புண்டை இல்லேன்னு புலம்புவானுங்க . புண்டைய கொடுத்தா புண்டை பூரா மசுரா இருக்குன்னு சலிப்பானுங்க " என்று கத்தினார் .
உடனே ,உடனே ஒரு டெக்னிசியன் " நீ ஏன் புண்டைய காட்டுறே , உன் வாய காட்டு " என பாய்ந்தார் .
ஒரு வழியாக சமாதானமாகி ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது இந்த கனல் தெறிக்கும் வசனங்கள் நடிகர் முத்துராமனிடம் தயாரிப்பாளர்களில் ஒருவர் சொல்லிவிட்டார் . நடிகர் முத்துராமன் தன் வெடிசிரிப்பை ஆரம்பித்தார் . சிரிப்பை அவரால் அடக்க முடியவில்லை . ஷூட்டிங் வந்த நடிகை கே .ஆர் .விஜயாவிடம் இந்த ஜோக் நடிகர் முத்துராமன் அவர்களால் சொல்லப்பட்டது . நடிகைக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் .

அன்று முதல் இரவு காட்சி பாலை வெட்கப்பட்டு கொண்டே கே .ஆர் விஜயா கதாநாயகன் முத்துராமனிடம் தருவதை படம் பிடிக்க வேண்டும் . கேமரா ஓட துவங்கி நடிகை பாலை முத்து ராமனிடம் கொடுக்கும்போது இந்த டெக்னிசியன் கோப வசனம் ஞாபகம் வந்து பர்ர்ர்ர்ர்ர்ர் என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார் .முத்து ராமனும் தன் பிரத்யேக வெடி சிரிப்பை வெளிப்படுத்தினார் . கட் சொல்லிவிட்டு மீண்டும் இயக்குனர் அடுத்த டேக் போனால் சரியாக வெட்கப்பட வேண்டிய நேரத்தில் கே . ஆர் . விஜயா சிரித்து சொதப்பி விட்டார் . இப்படி பல டேக் ஆகியிருக்கிறது .
இயக்குனர் எரிச்சலாகி முத்துராமனிடம் " யோவ் முதலியாரே ( முத்து ராமனுக்கு பட்ட பெயர் முதலியார் . எம்ஜியாருக்கு " சின்னவர் " என்பது போல .ஒரு நாடகத்தில் முதலியாராக நடித்ததிலிருந்து முத்துராமனுக்கு முதலியார் என்ற பட்ட பெயர் .) என்னையா . பொம்பளை கிட்ட போய் இதைஎல்ல்லாம் சொல்லலாமா .விவஸ்தை கெட்ட ஆளுய்யா நீ . இப்ப பாரு ஷூட்டிங் பண்ண முடியலே " என்று கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் .
ஒரு வழியாக அன்று இந்த ஒரு காட்சியை படம் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .
பெண்கள் சாதாரண ஜோக் கேட்டாலே விழுந்து விழுந்து சிரிப்பார்கள் . இப்படி செக்சி சமாச்சாரங்களுக்கு கேட்கவே வேண்டாம் .

2 comments:

 1. Carnal Desires என்பது அருமையான தலைப்பு. காம இச்சையை மிருக இச்சை, கேவலம் சரீர இச்சை, இன்னும் என்னவெல்லாமோ சொல்லி இழிவுபடுத்துகிறோம், கேவலப்படுத்துகிறோம். ஆனால் அது நியாயமான இச்சைதான்.

  போதுமான அளவுக்கு பாலியல் இன்பம் துய்த்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைந்து சிறப்புடன் திகழ்வதையும், பாலியல் இன்பத்தைக் குறைவாகத் துய்த்தவர்கள் அல்லது இன்னமும் பாலியல் இன்பத்தை அனுபவிக்காதவர்கள் நடைப்பிணமாக வாழ்வதையும் கண்டிருக்கிறேன் நான்.

  இணைவிழைச்சு என்பது தமிழிலுள்ள அருமையான சொல். அதாவது காமம் என்பது இணை விழைவதுதான்! இதைத்தான் சினிமா பாடலாசிரியர் ஒரு பாட்டில்,

  "பொண்டாட்டி கேக்குதடா என்னோட ஒடம்பு" (வண்டிச்சக்கரம்)

  என்று அழகாகச் சொல்கிறார்.

  ReplyDelete
 2. Carnal Thought மூலமாக இப்படி பகடி பண்ண முடியுமா? நானும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

  அன்புடன்

  சூர்யா

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.