Share

Oct 3, 2008

P.D.சம்பந்தம்

தமிழ் திரை யில் ஐம்பது அறுபதுகளில் ஒரு நடிகர் இருந்தார் .
'அந்த நாள் ' வீணை பாலசந்தர் இயக்கிய பாடலே இல்லாமல் 1954 ல் வந்த சஸ்பென்ஸ் படம் . அதில் அவர் கொஞ்சம் ஓரளவு தெரியக்கூடிய பாத்திரத்தில் நடித்திருப்பார் .
அவர் P.D .சம்பந்தம் என்ற பெயருடையவர் .ரொம்ப குள்ளமான உருவம் . மற்றபடி ரொம்ப சிறிய கதா பாத்திரம் . எக்ஸ்ட்ரா என்று சொல்லும்படியாகவே படத்தில் தலை காட்டுவார் .' ஆடி பெருக்கு' அறுபதுகளின் துவக்கம் . ஜெமினி , சரோஜா தேவி நடித்த இந்த படத்தில் சந்திர பாபு பெண் வேடமிட்டு வரும்போது அவரை சைட் அடிப்பார் . 'அதே கண்கள் 'படத்தில் பெண் வேடமிட்டு வரும் நாகேஷை விரட்டி ,விரட்டி சைட் நொறுக்குவார் . நாகேஷ் ' ஆழாக்கு மாதிரி இருக்கிறான். அலையிறான் ' என்று சலித்துபோவார் . குமுதம் படத்தில் M . R . ராதா இவரை அவமானப்படுத்தும் போது சம்பந்தம் பரிதாபமாக ' டே நான் உங்கப்பாடா ' என்பார் .

P . D .சம்பந்தம் எப்போதுமே எச்சிகளைதனமான மிகவும் ஈனமான பாத்திரங்களில் தான் வருவார் . தில்லானா மோகனாம்பாள் படத்தில் அதற்கு முன் திருவிளையாடலில் கூஜாவாக நடிப்பார் . ஓடுங்கடா என்றால் பதறி ஓடும் குள்ளர்களில் ஒருவராக நடிப்பார் .
லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில்' யாரடா மனிதன் இங்கே 'பாட்டில் சிவாஜி ' மனிதரில் நாய்கள் உண்டு ' என்று பாடும்போது காமெரா இவர் மீது தான் Focus ஆகும் .
உண்மையில் இவர் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர் . எல்லா நடிகர்களுக்கும் இவர் தான் வாத்தியார் . ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பது , நாற்பது, ஐம்பது , அறுபதுகளில்திரையில் பிரபலமான பல நடிகர்களுக்கும் நாடக உலகில் இவர் தான் வாத்தியார் . இவ்வளவு ஏன் கலைவாணர் N . S . கிருஷ்ணன் இவரிடம் காலை தொட்டு வணங்குவார் . ஏனென்றால் நாடக உலகில் அவருக்கே இந்த சம்பந்தம் ஆசிரியர் . ரொம்ப கண்டிப்பானவர் .கட்டுப்பாடு விஷயத்தில் கறாரானவர் . கையில் பிரம்பு வைத்திருப்பார் . அவரிடம் அடி வாங்காத பிரபலங்களே கிடையாது .
திரையில் பிரபலமான பெரிய நடிகர்களுக்கு அவர்களின் பால்ய காலத்தில் துவங்கி வாலிப காலம் வரை நடிப்பு சொல்லி கொடுத்த ஒரு Commanding Personality தன் முதிய வயதில் திரையில் மிக அல்ப கதாபாத்திரங்களில் நடித்தார் என்பது சினிமா என்னும் மாய உலகம் கண்ட ,காட்டிய அபத்தங்களின் உச்சம் .

7 comments:

  1. மனதை உருக்கிய தகவல்.

    ReplyDelete
  2. உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வருவது...

    அந்த நாள் படத்தில் கொலையைப்பார்த்து ஓடிக்கொண்டே இருப்பது

    காட்டுரோஜா படத்தில் தங்கவேலுவின் மாமனாராக அடிக்கும் கொட்டம்

    அன்புக்கரங்கள் படத்தில் சங்கை பிடிக்கும் காமெடி..

    என்ன செய்வது..அவருக்கு அதிர்ஷ்டம் குறைவு.,

    இன்று கருணாஸ்..கஞ்சாகருப்பு சந்தானம் எல்லாம் பிரபல காமெடியன்கள்

    ஆனால் திறமையுள்ள சார்லி,வையாபுரி எல்லாம்?

    ReplyDelete
  3. இதைப் படிக்கும்போது அல் பாசினோ தன் குருவான லீ ஸ்ட்ராஸ்பர்க் - ஐ Godfather II -ல் மிக முக்கியமான பாத்திரத்தில் (ஹைமன் ராத்) நடிக்க வைத்து மரியாதை செய்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  4. That was a nice article on P.D. Sambantham. Didn't know that he was the "vaathyaar" in dramas.

    He also had a sumaar role in PENN, released in 1953 by AVM. He comes as Sarangapani's clerk/manager.

    I write a blog on old Tamil movies that get telecast in sun TV every week night for the last couple of months. Do check it out at http://awardakodukkaranga.wordpress.com

    I couldn't recognize P.D. Sambantham for a while - the people who played minor roles in movies fascinate me!

    ReplyDelete
  5. Murali kannan thanks

    TV Radhakrishnan, Great.

    Raj Chandra , your comparison is correct but Lee Strasberg did a magnificent,powerrful role in GodFather 2, contrary to the roles done by P.D.Sambandam

    rv, good information, Thanks

    ReplyDelete
  6. சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா! சினிமாவில் மட்டுமல்ல மற்ற துறைகளிலும் கூட இது சகஜம்தான். யாரை நாம் நொந்துகொள்வது? சொல்லுங்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.