Share

Oct 25, 2008

ஸ்ரீதரும் கல்யாண் குமாரும்

ஸ்ரீதர் இறந்தது எல்லா தமிழர்களையும் பாதித்திருக்கிறது . அவர் "நானும் ஒரு தொழிலாளி" படம் இயக்கும்போது பார்த்திருக்கிறேன் .( ஆரம்பமே பிசிறு தட்டுகிறதா ? ஸ்ரீதரை பற்றி பேச இந்தப்படம் தான் கிடைத்ததா ?) அவர் சிகரெட் ஊதும் ஸ்டைல் , அந்த பெண்மையான பாவனைகள் , நகத்தை கடிப்பது ( தெய்வ மகனில் சிவாஜி யின் ஒரு கதாபாத்திரம் ஸ்ரீதரை இமிடேட் செய்ததை அறிவீர்கள் . இரண்டாவது மகன் ). ஷூட்டிங் போதுசிந்தித்து கொண்டே திடீரென்று " டே சக்கி !" என்று கூப்பிடுவது ....( என்.சி . சக்கரவர்த்தி - இவர் 'உத்தரவின்றி உள்ளே வா 'இயக்குனர் . சி வி ராஜேந்திரனுக்கு பிறகு ஸ்ரீதரின் வலது கரம் . )

' நெஞ்சில் ஓர் ஆலயம் ' 'நெஞ்சம் மறப்பதில்லை ' இரண்டு ஸ்ரீதர் படத்தின் கதா நாயகர் கல்யாண் குமார் . இவரிடம் நான் பேசும்போது ஸ்ரீதர் பற்றி நிறைய கேட்பேன் . தேவ சேனா புகைப்படம் ஸ்ரீதர் காட்டிய போது ' இந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ' என்று கல்யாண் குமார் பாசிடிவ் ஆக அவரிடம் சொன்னதை என்னிடம் சொன்னார் .
'சரி . அந்த இரு படத்தில் வேலை பார்த்த பிறகு பிற்காலத்தில் அவரை எப்போதெல்லாம் சந்தித்தீர்கள் ?'- என் கேள்வி !
கல்யாண் குமார் பதில் " சந்தித்ததே இல்லை "
'சந்தித்ததே இல்லை . அவரும் என்னை சந்தித்ததில்லை . நானும் தேடிபோய் சந்தித்ததில்லை '
கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .
அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார்.

சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் .




4 comments:

  1. அன்பு ராஜநாயகம்
    பார்க்கவும்.
    http://www.raajaachandrasekar.blogspot.com/

    www.youtube.com/filmliner

    ராஜாசந்திரசேகர்

    ReplyDelete
  2. கடைசியாக அவரை நான் விகடன் தொலைகாட்சி சீரியல் ஒன்றில்தான் பார்த்தேன். சீரியல் பெயர் ”அட்சரா”. அது முடிவதற்கு முன்னாலேயே இறந்துவிட்டார், ஆனால் நல்ல வேளையாக கடைசி எபிசோட் ஷூட்டிங் அதற்குள் முடிந்திருந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. Do write more about Sridhar! I would love to hear your evaluation of Sridhar as a director.

    ReplyDelete
  4. Welcome Raaja chandra sekar

    Welcome Dondu

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.