Share

Oct 30, 2008

பாசுகரும் முக சுடாலினும்

திஜாகருத்தரங்கம் சம்பந்தமாக அப்போதைய புதுவை தமிழ் துறை தலைவர் க ப அறவாணன் அவருடைய உதவியாளர் ஒருவரை அனுப்பியிருந்தார் .. 'பாசுகர்'என அவர் பெயரை குறிப்பிட்டு அவரை அனுப்பிய விஷயம் குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது . பாசுகர் என்ற பெயர் விசித்திரம் ஆக தெரிந்ததால் கடிதம் கொண்டு வந்தவரிடம் 'உங்கள் பெயர் என்ன , விசித்திரமாக தெரிகிறதே ' - வினாவினேன் .
அவர் சொன்னார் " பாஸ்கர் ! அய்யா என்னை கூப்பிடுவது , எழுதுவது எல்லாம் 'பாசுகர் ' என்று தான் "
சமீபத்தில் கருணாநிதி அவர் மருமகன் மாறன் நினைவுநாளில் அவர் சிலைக்கு மாலை மரியாதை செய்த விழாவை டிவி யில் கண்டேன் .க ப அறவாணன் நின்றுகொண்டிருந்ததை அவர் சபாரி டிரஸ் , தொப்பி மூலம் அறிய முடிந்தது .
அவருடைய வகுப்பு தோழர் லக்ஷ்மி நாராயண அய்யங்கார் அவர்களையும் தூய தமிழில் பெயரை மாற்றிக்கொள்ள சொல்லி(திரு மாலவன் ) அந்த காலத்தில் அறவாணன் வற்புறுத்தினார் என்பதை மறைந்த லக்ஷ்மி நாராயண அய்யங்கார்( பரமகல்யாணி கல்லூரி முன்னாள் முதல்வர் ) என்னிடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் என் பக்கத்து வீட்டுக்காரராய் பத்து வருடம் முன் இருந்த போது என்னிடம் வருத்தப்பட்டு சொன்னது என் நினைவிற்கு வந்தது .
அவருடைய தலைவர் கருணாநிதி துணைவேந்தராக அறவாணன் அவர்களை முன்னர் அமர்த்தியது தெரியும் . மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் தன் தலைவனின் மகனிடம் தன் உதவியாளர் பாசுகரிடம் காட்டிய மொழி வைராக்கியத்தை காட்டியிருப்பாரா ?
மு. க . சுடாலின் என்று அவர் பெயரை சொல்லி , எழுதியிருப்பாரா ?
ஒரு விஷயம் . கருணாநிதி அந்த காலத்தில் மறைந்த தமிழ் குடி மகனை ( அதிமுக விற்கு போவதற்கு முன்னால் ) தனித்தமிழ் சம்பந்தமாக நல்லா செமை கிண்டல் அடிப்பாராம் .தமிழ் குடி மகன் கூழை சிரிப்பு சிரிப்பாராம் .

4 comments:

  1. என்ன‌ இப்ப‌டி வெள்ள‌ந்தியாக‌ எழுதுகிறீர்க‌ள்? கொள்கை, கோட்பாடு எல்லாம் அப்பாவி ம‌னித‌ர்களுக்குதானே? த‌ன‌க்கு ஒரு காரிய‌ம் ஆவ‌த‌ற்காக இந்தியை கூட‌ அவ‌ர்க‌ள் ப‌டித்திருக்கிறார்க‌ள் என்று கேள்விப்ப‌ட்டிருக்கிறேன். பார்த்து உங்க‌ள் வீட்டுக்கு ஏதாவ‌து ஸ்கார்பியோக்க‌ள் ஏதாவ‌து வ‌ந்து தொலைக்க‌ப்போகிற‌து.

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா!
    இந்த இலக்கியம் இதுவெல்லாம் ஒரு மனுச உயிரைக் காக்க ஆவுமா? ஜெயமோகனுக்கும் ஒங்களுக்கும் வித்தியாசமே தெர்யலையே?

    பாரின் சினிமா மூணு பாத்தேன், பாரின் ஸ்காட்சு மூணு குடிச்சேன், பாரின் பொண்ணு மூணு புடிச்சேன் ரேஞ்சிலேயே எழுதினா எப்புடிங்க. இலக்கியவாதி ஆனதெல்லாம் செரிங்க. பக்கத்துல இலங்க தமிழங்க சாவுறாங்க. ஒரு கவித கண்டனம் முடியலையே. நீங்க திருவல்லிக்கேணி லிட்டில் ஆனந்து கணக்குல கன்வேர்ட்டா?

    ReplyDelete
  3. //என்ன‌ இப்ப‌டி வெள்ள‌ந்தியாக‌ எழுதுகிறீர்க‌ள்? கொள்கை, கோட்பாடு எல்லாம் அப்பாவி ம‌னித‌ர்களுக்குதானே? த‌ன‌க்கு ஒரு காரிய‌ம் ஆவ‌த‌ற்காக இந்தியை கூட‌ அவ‌ர்க‌ள் ப‌டித்திருக்கிறார்க‌ள் என்று கேள்விப்ப‌ட்டிருக்கிறேன். பார்த்து உங்க‌ள் வீட்டுக்கு ஏதாவ‌து ஸ்கார்பியோக்க‌ள் ஏதாவ‌து வ‌ந்து தொலைக்க‌ப்போகிற‌து//

    repeatai!!!

    ReplyDelete
  4. முக சுடாலினின் இயற்பெயர் அய்யாதுரை என்று நினைக்கிறேன். கருணாநிதிக்கு அவ்வளவு தனித்தமிழ் வெறியெல்லாம் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.