Share

Oct 18, 2008

ஆதவனின் நினைவில் பாரதி மணி


ராஜநாயஹம்,

நீங்கள் நண்பர் ஆதவனைப்பற்றிய நினைவுகளை ... ராஜநாயஹம், நீங்கள் நண்பர் ஆதவனைப்பற்றிய நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.தில்லியில் என் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்ததால், க.நா.சு.வைப்பார்க்க அடிக்கடி வருவார். He was an intravert. பேசும்போது அவரிடமிருந்து வார்த்தைகளை பிடுங்கவேண்டும். பழக ஆரம்பித்துவிட்டால், சகஜமாக உரையாடுவார். நானும் அவரது Inferiority Complex-ஐ களைவதற்கு மிகுந்த பாடு பட்டேன்.

1982-ல் பாரதியின் நூற்றாண்டுவிழாவை தில்லியில் விமரிசையாகக்கொண்டாடினோம். பாரதி பாலு, நான், ஆதவன், லா.சு. ரங்கராஜன் போன்றோர், பாரதியின் நூறாண்டு பூர்த்தியானதால், ‘பாரதி-200’ என்ற அமைப்பைத்தொடங்கி, குடியரசுத்தலைவர் தொடங்கிவைத்து, சீனி. விசுவநாதன், ரா.அ. பத்மநாபன் மற்றும் பல கலைஞர்கள் கலந்துகொண்டு ஒருவார விழா அமர்க்களமாக நடந்தேறியது.

அதில் ஆதவனுடன் நெருங்கி பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆதவன் ‘புழுதியில் வீணை’ என்ற பெயரில் பாரதியின் வாழ்க்கையை ஒரு சிறந்த நாடகமாக எழுதியிருந்தார். நேரக்குறைவு காரணமாக, அந்த நாடகத்தை என்னால் மேடையேற்ற முடியவில்லை. சனிக்கிழமை தோறும் நடக்கும் ‘பாரதி கூட்டத்தில்’ Play Reading முறையில் நான் அதை வாசித்தேன். பாரதியைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நாடகம் அது. அது புத்தகமாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.’பாரதி’ படப்பிடிப்பின்போது, நாடகப்பிரதியைத்தேடினேன். கிடைக்கவில்லை.அவர் தெற்கே வந்தபிறகு, அவருடனான தொடர்பு குறைந்தது.மனம்விட்டுப்பழகும் நல்ல நண்பர். அவரை நினைவுபடுத்தியதற்கு நன்றி!

பாரதி மணி

.....

பாரதி மணி சார் !

R .P. ராஜநாயஹம் நமஸ்காரம் .

நீங்கள் குறிப்பிடும் ஆதவனின் " புழுதியில் வீணை " பாரதியின் புதுவை வாழ்க்கையை மையமாக கொண்டு எழுதப்பட்டது .( புதுவையில் ஒரு பத்தாண்டு காலம் பாரதி இருந்திருப்பார் தானே .) அந்த நாடகம் ஆதவன் மரணத்திற்கு பின் பிரசுரம் செய்யப்பட்டது .

இ.பா தான் முன்னுரை அதற்கு எழுதியிருந்தார் ' பாரதியை பற்றிய நாடகத்தை அவரை விட ஆறு வருடம் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவன் எழுதிவிட்டதை பற்றி முரண் நகையோடு அதில் குறிப்பிட்டிருந்தார் .

வாழ்க்கையின் புதிர்பாதைகள் !

நர்மதா தான் வெளியிட்டது . என்னிடம் பரண் மேலே தூங்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஆதவனின் ' புழுதியில் வீணை'யும் ஒன்று .இடபிரச்னை காரணமாக ஐந்தாண்டு காலமாக எல்லாம் பரணில் கிடக்கிறது . அவசரத்துக்கு
REFER செய்ய கூட வழியில்லை .

How beautiful the world would be,
If there were a procedure
For moving through labyrinths.

Umberto Eco in ‘The Name of the Rose’

அன்புடன்

R .P. ராஜநாயஹம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.