Share

Oct 27, 2008

ஈஸ்வர அல்லா

ராஜஸ்தான் .பைன்சா என்ற ஊர் .துள்ஜா பாய். அறுபது வயது இந்து பெண் .பக்கத்து வீட்டில் வசிக்கும் சையது உஸ்மான் குடும்பமும் துள்ஜா பாய் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக இருநூறு ஆண்டுகளாக குடும்ப நண்பர்கள் . ஒரு நாள் பக்கத்து வீட்டில் புகை . துள்ஜா பாய் வெளியே வருகிறார் . வெளியே வெறியாட்டம் போடும் குடிகார கலவர கும்பல் . சூழ்நிலை புரிகிறது . சையது வீடு வெளியே பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது . இவர் அந்த கும்பல் செய்யும் அராஜகத்தை எதிர்த்து வீட்டின் கதவை திறந்து விட்டு சையது வின் மனைவி குழந்தைகளை மீட்டு தன் வீட்டில் பாதுக்காப்பாக வைக்கிறார் . சையது குழந்தைகளுக்கு பட்டம் செய்து விற்பவர் . அப்போது வீட்டில் இல்லை . குழந்தைகளுக்காக பட்டங்கள் தீக்கிரையாகின்றன . துள்ஜா பாய் தன் முயற்சியில் கடுமையாக அந்த குடிகார கலவர கும்பலை எதிர்க்க வேண்டியுள்ளது . ஆனால் இவர் கொஞ்சமும் பயப்படாமல் அவர்களை சமாளிக்கிறார் . கும்பல் நகை பணம் என்று சையதுவின் ஆயுட்கால சேமிப்பை கொள்ளையடித்து விட்டு ஓடிவிடுகிறது . மனைவி குழந்தைகள் காப்பாற்றப்பட்டதே போதும் என்ற சந்தோசம் சையதுக்கு போதுமாயிருக்கிறது . துள்ஜா பாய் வாழ்க !

பட்டங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன . சையது குழந்தைகள் விளையாட தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த பட்டங்கள் ! பாவம் பைன்சா நகர குழந்தைகளும் ..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.