Share

Oct 23, 2008

கிரா என்னும் ஊற்று

கரிசல் இலக்கிய மன்னர் கிரா விடம் நேரில் பேசுவது மட்டுமல்ல தொலை பேசியில் பேசுவது கூட சுகமான சமாச்சாரம் .
நான் கவலையோடு சொன்னேன் . 'ஆடு புழுக்கை போடற மாதிரி கவிதையை அப்பப்ப மொத்தமா போடுராங்கே . அதோட நம்மையும் அத மோந்து பார்க்க சொல்றானுங்க'
அவரிடம் இப்படி லேசா எடுத்து கொடுத்துட்டா போதும் .
கிரா சொன்னார் . இப்போ புகைப்படம் எடுத்து பிரபலமாகி விட்ட இளவேனில் முதன் முதலாக ஒரு கவிதை தொகுப்பை போட்டு கொண்டு வந்து கிரா விடம் ஒரு முன்னுரை கேட்டாராம் .
'கவிதை தொகுப்பு போட பணம் எப்படி கிடைத்தது?'
'என்னோட அம்மாவோட சிறுவாட்டு பணம் . அந்த பணத்தை திருடி கவிதை தொகுப்புக்கு சிலவு பண்ணேன் '
கிரா சொன்னாராம் " நீ கவிதை எழுதியது முதல் தப்பு . அம்மாவோட சிறுவாட்டு பணத்தை திருடி அதை புத்தகமா போட்டது இரண்டாவது தப்பு .என்னிடம் முன்னுரை கேட்டது மூணாவது தப்பு "
.......
கிரா விடம் அளவளாவும்போது அவ்வப்போது டி கே சி பிரசன்னமாகி (ரத்தமும் சதையுமாக ஜீவனோடு, சிரிக்கும் கண்கள் ,மூக்கு ,மீசையோடு )விடுவார் . அந்த அளவுக்கு கிராவோடு டிகேசி ஒன்று கலந்து விட்டார் !
கிரா அப்படி சொன்ன சுவை நிகழ்வு
டி கே சி யோடு குற்றாலத்துக்கு கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி சந்தோசமாக ரயிலில் போய்கொண்டிருக்கும்போது தன் சந்தேகம் ஒன்றை கேட்டாளாம்
" தாத்தா தாத்தா ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தால் ஏன் குலைக்குது ?"
டி கே சி சொன்னாராம் " எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."

4 comments:

  1. கிரா , டிகேசி அனுபவங்களை/ பேச்சுக்களை எழுதி மகிழ்வித்தமைக்கு நன்றி.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. //" எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."//

    சூப்பர். சான்ஸே இல்லை :-)))))

    ReplyDelete
  3. சிறுவாட்டு பணம் னா என்ன?

    ReplyDelete
  4. வீட்டில் பெண்கள் சிறுகசிறுக சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.அப்படி அம்மாமார் சேர்க்கும் பணம் சிறுவாட்டு பணம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.