Share

Oct 1, 2008

எனவே தான் ஆஸ்பத்திரி மற்றும் ....

பெரிய குளத்தில் தென்கரை பஜாரில் அப்போது என் நண்பர் மறைந்த சர்புதின் அவர்களின் கடைக்கு போவேன் . அங்கே அந்த பரபரப்பான பஜார் பல காட்சியை விரிக்கும்

அப்போது மன நிலை பாதித்த ஒருவர் நடவடிக்கை . சில சமயம் நாள் முழுதும் வேக வேகமாக ஏதோ இப்போது அவசரமாக முடிக்க வேண்டிய ஒரு முக்கிய வேலைக்காக அலைவது போல அரக்க பறக்க பஜாரின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நடப்பார் .சமயத்தில் ஊரை சுற்றியும் அவசர நடை .இருபத்திநாலு மணி நேரமும் நடை . செகண்ட் ஷோ படம் விட்டு போகும் போகிறவர்கள் கூட அப்போதும் ஊர் சாலைகளில் சாரங்கன் அவசரமாக நடை போடுவதை காண முடியும் .

சில சமயம் உறைந்த நிலையில் பஜாரில் ஒரு கடை முன் நின்று விடுவார் .

அப்படி உறைந்த நிலையில் சர்புதின் கடை முன் எதோ பிரசங்கம் செய்கிற தோரணையில் கைவிரலை மட்டும் அசைத்து கொண்டு சிலை போல . சர்புதினின் சிறு வயது தோழர் . திடீரென்று ஒரு அரைமணி நேரம் சென்றவுடன் உரத்த குரலில் வாய் திறந்தார் .

" எனவே தான் ஆஸ்பத்திரி மற்றும் சுகாதார நிலையங்கள் அனைத்தையுமே சீர் திருத்துவதோடு மட்டுமல்லாமல் , அதோடு கூட ....." நிறுத்தி விட்டார் .

சர்புதின் ' டே சாரங்கா , நீ என்ன ஒரு மணி நேரம் பேசி கிழிச்சிட்டே . எனவே தான் ன்னு ஆரம்பிக்கிறே . அதுல மட்டுமல்லாமல் , அதோடு கூட ன்னு அந்தரத்திலே நிறுத்திட்டே .' என கேட்டார் .

உள்ளே ஆழ் மனதில் சாரங்கன் பெரிய பிரசங்கம் அதிலும் சப்ஜெக்ட் 'சுகாதாரம் , ஆரோக்கியம் ,மருத்துவம்' பற்றிய தீவிர ஆராய்ச்சி , அலசல் ..... திடீரென்று லீக் ஆகி வாய் வழி “OverFlow”

அப்புறம் சாரங்கன் மனதிற்குள் மீண்டும் பிரசங்கம் தொடர்ந்து விட்டது !

1 comment:

  1. Your last few lines were thought provoking to me.

    Who knows? He might have thought about some really good things on that topic. If so, what a loss? Had he been acclaimatized with the normal world, he could have been a great contributor.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.