Rev.Fr VICTOR S.J. வலைப்பதிவிற்கு பாரதி மணி எழுதிய பின்னூட்டம்
பாரதி மணி said...
ராஜநாயஹம்:
பிரபலமானவன் யார்? அதற்கு ஏதாவது அளவுகோல்கள் இருக்கின்றனவா? அதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம்? பணமும் புகழும் சாசுவதமா? அப்படியொன்றால் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த நடிகர் தியாகராஜ பாகவதர் ஏன் கடைசிக்காலத்தில் ரசிகரான ஒரு ரிக்ஷாக்காரர் பராமரிப்பில் இறந்தார்?என்னைப்பொறுத்தவரையில், நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நல்லவனாக வாழ முயற்சி செய்தாலே நாம் பெரியவர்கள் தாம்! நாம் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் தான்.ஐம்பதுகளில் தில்லிக்குப்போனபோது, அங்கு என் தூரத்து உறவினர் IAS பாஸ் பண்ணிவிட்டு பெரிய வேலையில் இருந்தார். அழைப்பின் பேரில் அவர் வீட்டு விசேஷத்துக்கு போய்விட்டு, அவர் வீட்டார் காட்டிய அலட்சியத்தால், பரிசைக் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் வந்திருக்கிறேன். பிறகு என்னிடமும் கார் பங்களா வசதிகள், தில்லி தமிழ்ச்சமூகத்தில் அங்கீகாரம் வந்தபோது, என் நட்புக்காக விழைந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை அவருக்கு நினைவூட்டினேன் -- அதுவும் ஐம்பதுபேர் இருந்த சபையில்.இப்போது என்னிடம் Inferiority Complex சுத்தமாக இல்லை. நான் தான் உலகத்திலேயே உயர்ந்த மனிதன்! இப்படி நான் நினைப்பதை யார் தடுக்கமுடியும்?நாம் எல்லோருமே உயர்ந்த மனிதர்கள், நல்ல மனிதர்கள்!
பாரதி மணி
Monday, 13 October, 2008
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.