Share

Oct 14, 2008

முதல் மேக்கப்


பிரசாத் கலர் லேப் ல் ஷூட்டிங் . டிரைவ் இன் ஹோட்டல் போல செட். சினிமாவில் எனக்கு முதல் மேக்கப்.
சி ஐ டி சகுந்தலாவின் அண்ணன் தனகோடி மேக்கப் மேன் .என்னிடம் தட்சனை (சம்பிரதாயம் )வாங்கி விட்டு மேக்கப் செய்ய ஆரம்பிக்கிறார். பேன் கேக் எடுத்து முகத்தில் பூசி விடுகிறார். தொடர்ந்து ராமாச்சாரி மேக்கப் முடித்துவிடுகிறார்.

இந்த ராமாச்சாரி ஊமை பட காலத்தில் இருந்து மேக்கப் மேன்.
சிவாஜி கணேசனின் பால்ய நண்பர். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இவரும் சிவாஜியும் சேர்ந்து ' தாஜ் ' என்ற இந்தி படத்தை நூறு தடவை பார்த்திருக்கிறார்கள். ராமாச்சாரி மகன் இறந்த போது துக்கம் விசாரிக்க வந்த சிவாஜி இவரை கட்டிபிடித்து கண்ணீர் விட்டார்.


ராமாச்சாரி தன் இரு கன்னத்திலும் இரு கைகளையும் வைத்து விட்டு மலைப்பாக சொல்கிறார்.
"என் அறுபது வருட அனுபவத்தில் மேக்கப் ஒரு முகத்தில் இவ்வளவு அழகாக,நேர்த்தியாக செட் ஆகி நான் பார்த்ததே இல்லை.இப்போது தான் பார்க்கிறேன்."
தனகோடி யும் பார்த்து விட்டு "ஆமாண்ணே !" என அதிசயப்படுகிறார்.
நான் காட்சி பொருள் ஆகிறேன்.

இயக்குனர், கதாநாயகி எல்லோரும் கவனித்து என்னை பாராட்டுகிறார்கள் .
ஷூட்டிங் வந்திருந்த துணை நடிகைகள் அனைவரும் என்னிடம் கூட்டமாக வருகிறார்கள்.
"நீங்க ஏன் அசிஸ்டன்ட் டைரெக்டர் வேலை செய்கிறீர்கள் சார். ஆக்டிங் சான்ஸ் ட்ரை பண்ணுங்க சார். ஹீரோ மாதிரி இருக்கிறீங்க. சொன்னா கேளுங்க. சீரியஸ் ஆ ட்ரை பண்ணுங்க "
தினத்தந்தி நிருபர் அதி வீர ராம பாண்டியன் அந்த பட இயக்குனரிடம் " சார் உங்க அசிஸ்டன்ட் டைரெக்டர் ஹீரோ மாதிரி இருக்கார் சார் "
இயக்குனர் " ஆமா என் அடுத்த படத்திலே நிஜமாவே இவன் தான் ஹீரோ. போதும் இப்போ உள்ள ஹீரோக்கள் தொல்லை சகிக்கலே "
...............

2 comments:

  1. திரும்ப வழி மொழிகிறேன். தமிழ்த் திரை ஒரு அழகான, அறிவான கதையின் நாயகனை இழந்து விட்டதோ?
    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. Lucky we miss u as an actor.

    Otherwise we can't get such person now.

    :-))

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.