Share

Oct 18, 2008

கர்ணன்

அடையாள சிக்கல் - Identity Crisis . இதன் குறியீடு கர்ணன் . மனித துயரங்களில் அடையாள சிக்கல் எனும் அவலம் பிரதானமானது.
கிரா கேட்டார் என்னிடம்
"கர்ணன் செய்யாத தர்மம் என்ன தெரியுமா ?"
சொல்லுங்க அய்யா - நான் திரும்ப கேட்டேன்.
" பசித்த வயிறுக்கு சோறு '"
'ஏன் தெரியுமா .கர்ணன் பொண்டாட்டி அவனுக்கே சோறு போட மாட்டாள் . தேரோட்டி மகன் என்ற பூர்வீகம் பட்டத்தரசிக்கு தெரிந்த விஷயம் என்பதால் கர்ணன் மீது அலட்சியம் .அவனுக்கே சோறு கிடைக்காத போது அவன் மற்ற பசித்த வயிறுகளுக்கு எப்படி சோறு போடுவான் .'

கவிஞர் சுகுமாரன் ஒரு கட்டுரையில் கர்ணன் பற்றி அபூர்வ தகவல்கள் கொடுத்திருந்தார் .
கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான் . அவனுடைய வளர்ப்பு பெற்றோர் அதிரதன் , ராதை இருவரும் அவனுக்கு சூட்டிய பெயர் வசுஷேணன் . கர்ணனுக்கு இரண்டு மனைவியர் . வ்ருஷாலி , சுப்ரியை . மூன்று புத்திரர்கள் . இரண்டு பேர் மூத்த தாரத்து பிள்ளைகள் . சுப்ரியை யின் ஒரு மகன் .
கவிஞர் சுகுமாரன் ' மகாபாரதத்தின் இலக்கிய மேன்மை - இதிலுள்ளது வேறு பல இடங்களில் இருக்கலாம் . ஆனால் இதில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது ' என்கிறார் .
வாஸ்தவம் தானே !

அருந்ததி ராய் The God of small things நாவலில் கர்ணனை பற்றி சொல்வது இப்படி !
A brilliant Clown in a bankrupt circus!

கர்ணனின் தோல்வி தோல்வியே அல்ல .
In his miserable defeat lies Karna’s supreme triumph!


அடையாள சிக்கல் என்பதின் முழு அவஸ்தையை அனுபவித்தவன் கர்ணன்.

3 comments:

  1. பசுபதி ஈயை பார்த்து பேசும் வசனம் நினைவிக்கு வருகிறது..
    அடையாள சிக்கல் மிக கொடுமையானது.... ( ஈ படம் பார்த்தீர்களா? )

    ReplyDelete
  2. கர்ணன் எனக்கு மிகவும் பிடித்த வரலாற்றுக் கதாபாத்திரங்களுள் ஒன்று. அவரைப் பற்றிய சுவையான தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.


    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  3. மிகச் சரியாகச் சொன்னீர்கள்! கர்ணன் என்னும் பாத்திரம் மிக வசீகரம். பல்வேறு கோணங்களில் அலசப்படவேண்டிய முக்கிய மனிதன். ஆயினும் பிரதான அடையாளம் - ironically அடையாளமின்மை. ஒவ்வொருமுறையும் தன்னையும், தன் வித்தையையும் மீள் நிருபணம் செய்யவேண்டிய அவலம்.

    எனக்கு உங்களிடம் ஒரு சிறு வருத்தம். இன்னும் கொஞ்சம் ஆழமாக நீங்கள் அலசலாம் - கண்ணதாசன் முதல், சிவகுமார், சூர்யா, மஹாபாரதம், coetzee, Kafka என்று. விடய அறிவும், சுவாரஸ்ய எழுத்தும் வெகு சிலருக்கே அமையும். இரண்டு மூன்று பதிவுகள் என்றாலும் படிக்கும் எங்களுக்கு ஒ.கே. செய்வீர்களா?

    அனுஜன்யா

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.