Share

Oct 6, 2008

ததாஸ்து

உலக யுத்தங்களை கருவாக கொண்டு நிறைய ஹாலிவுட் படங்கள் வெளிவந்தன . இரண்டாம் உலக யுத்தத்தில் நடந்த சம்பவங்களை கருவாக கொண்டு வெளி வந்த "த கிரேட் எஸ்கேப் " (1963 )ஒரு அசாதாரண படம் . ஸ்டீவ் மக்வின் கலக்கிய படம் . இந்த படத்தில் இவர் செய்த கதா பாத்திரம் அவருக்கு மீண்டும் "பாப்பில்யான் " ( 1973 )படத்திலும் அதையொத்த கதா பாத்திரம் கிடைக்க காரணமானது .
காந்தி படத்து இயக்குனர் ரிச்சர்ட் ஆட்டேன்பரோ , ஜேம்ஸ் கோபர்ன், சார்லஸ் பிரான்சன் , டேவிட் மக்கெல்லம் ஆகியோர் நடித்த த்ரில்லெர்.

சார்லஸ் பிரான்சன்- இந்த படத்தின் தயாரிப்பின் போது மற்றொரு நடிகர் டேவிட் மக்கெல்லம் கூட வந்த அவர் மனைவி "ஜில் அயர்லாந்து "- நடிகை தான் . இந்த படத்தில் நடிக்கவில்லை . ஜில் யை பார்த்து அசந்து போனார் பிரான்சன் . டேவிட் மக்கெல்லம் மிடமே " உங்கள் மனைவி ஜில் ஐ நான் திருடி கொண்டு போக போகிறேன் பாருங்கள் !" என்று சார்லஸ் பிரான்சன் ஜோக் அடித்திருக்கிறார் .

வானத்தில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் நெருக்கியடித்து கொண்டு ' ததாஸ்து ' என கூவி விட்டனர் !

1967 ஆண்டு டேவிட் மக்கெல்லம் அவர்களும் ஜில் அயர்லாந்து இம் விவாகரத்து செய்து விட்டனர் .

1968ல் சார்லஸ் பிரான்சன் - ஜில் அயர்லாந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .

வானத்தில் இருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் நெருக்கியடித்துக்கொண்டு (அவ்வளவு புழுக்கத்திலும் கூட ) பூமாரி பொழிந்தனர் !




4 comments:

  1. ததாஸ்து என்ற வார்த்தையை அழகாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.


    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. என்னா அநியாயமா இருக்கு!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. இதில் என்ன அநியாயம் இருக்கிறது?

    "பிறன் மனை நோக்கா பேராண்மை" என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறியிருந்தாலும் இந்த உலகில் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படாதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் யதார்த்தம். இதில் தவறு ஒன்றும் இல்லை. இது இயல்பான விஷயம்.

    பெண்களும் அப்படித்தான். அடுத்தவள் புருஷன் மீது ஆசைப்படுவார்கள். என்ன ஒன்று, அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவுதான்.

    ReplyDelete
  4. சினிமா நடிகர் என்பவர் அடுத்தவரின் கணவர் இல்லையா? சினிமா நடிகை என்பவர் அடுத்தவரின் மனைவி இல்லையா? நாம் அவர்களை திரையில் கண்டு ரசிப்பது "பிறன்மனை நோக்குதலில்" சேராதா?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.