Share

Oct 30, 2008

Carnal Thoughts-12

இச்சையும் வேட்கையும்
வேறு வழியே இல்லை . அவளிடம் விழுந்து விட்டான் . மிக அந்தரங்கமாக அவளிடம் கலவி பழகும்போது அப்படி நடக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை . அதிர்ந்து விட்டான் .
அவளுடைய 12வயது மகள் நடந்ததனைத்தையுமே முழு நிகழ்வையும் அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்து விட்டாள். கலவி முடிந்த நிலையில் அவள் மேல் படுத்த நிலையில் நிமிர்ந்து சாகவாசமாக பார்த்தபோது தான் தெரிந்தது .சிறுமி சற்று பதுங்கிய நிலையில் தன் தாயை புணர்ந்தவனை கண்ணோடு கண் பார்த்து விட்டு சன்னலை விட்டிறங்கி ஓடி விட்டாள்.இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது .
அவன் நடந்த விஷயத்தை அந்த பெண்ணிடம் சொல்லவில்லை . சொன்னால்நொந்து விடுவாள் .தன் கள்ளபுனர்ச்சியை பெற்ற மகள் பார்த்து விட்டாள் என்பதை எந்த தாயுள்ளம் தான் சகிக்கும் . இவன் மறைத்து விட்டான் .
ஆனால் அந்த சிறுமி அடுத்த இரண்டு வருடங்களும் இவனை தனித்து பார்க்க நேர்ந்தால் கெட்ட கேள்வி ஒன்றை கேட்க துவங்கியது தான் சிரமபடுத்தியது .
தனித்து என்று இல்லை . நான்கு பேர் இருக்கும்போதோ அல்லது ஒரு குடும்ப நிகழ்விலோ இவனிடம் நெருங்கி கள்ளகுரலில்
"எங்க அம்மாவை அன்னைக்கி என்ன செஞ்சீங்க ?"
அவள் அப்படி கேட்கும்போதே அந்த சிறுமியிடம் வேட்கையின் சாயல் மிகுந்திருந்தது என்பதை உணர முடிந்தது .
அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு நாள் . சிறுமியின் பாட்டி வீட்டில் இவன் விருந்தாளி . அம்மாவின் அம்மா வீடு.மாடியில் இவன் குளித்து விட்டு இறங்கும் முன் சிறுமி மாடிக்கு காபி கொண்டு வந்து தந்து " வீட்டில் யாரும் இல்லை .பாட்டி கோவில் போய் இருக்கிறாள் . எங்க அம்மாவை நீங்க அன்னைக்கி என்ன செஞ்சீங்க . யாரும் இப்ப வர மாட்டாங்க . என்னையும் செய்யுங்க " என்று அவளே இச்சை சம்பந்தமான சல்லாபங்களில் .....
ஆணின் உடற்கூறு ,மனகூறு பெண் இயங்க ஆரம்பித்து விட்ட பின் 'முடியாது ' என மறுக்க முடியாது . அவளுடைய அம்மா கூட இவன் காதில் முதல் கலவியின் போது சொன்னது இப்படித்தானே - ' திட்டமிட்டு தான் உங்களை கவிழ்த்தேன் '
பத்தே நாளில் அவள் சமைந்து பெரிய மனுஷி ஆகியதும் நடந்தது .
பூப்புனித நீராட்டு விழாவில் இவன் அவளுக்கு திருநீர் பூசினான் .அவள் கண்கள் இவனுடைய கண்களை பார்த்த நிலையில் அவள் குறும் சிரிப்பு .
My salad days!
When I was green in Judgement and cold in blood!!
- Cleopatra in Shakespeare’s Antony and Cleopatra
மேற்கண்ட வரிகள் கிளியோபத்ரா தான் சிறுமியாய் இருந்த காலத்தில் சீசர் உடன் தான் கொண்ட பிள்ளைக்காதல் பற்றி சொல்வது . ஜூலியஸ் சீசர் அவளிடம் உடல் உறவு கொண்ட போது She was mentally and bodily immatured!

பாசுகரும் முக சுடாலினும்

திஜாகருத்தரங்கம் சம்பந்தமாக அப்போதைய புதுவை தமிழ் துறை தலைவர் க ப அறவாணன் அவருடைய உதவியாளர் ஒருவரை அனுப்பியிருந்தார் .. 'பாசுகர்'என அவர் பெயரை குறிப்பிட்டு அவரை அனுப்பிய விஷயம் குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது . பாசுகர் என்ற பெயர் விசித்திரம் ஆக தெரிந்ததால் கடிதம் கொண்டு வந்தவரிடம் 'உங்கள் பெயர் என்ன , விசித்திரமாக தெரிகிறதே ' - வினாவினேன் .
அவர் சொன்னார் " பாஸ்கர் ! அய்யா என்னை கூப்பிடுவது , எழுதுவது எல்லாம் 'பாசுகர் ' என்று தான் "
சமீபத்தில் கருணாநிதி அவர் மருமகன் மாறன் நினைவுநாளில் அவர் சிலைக்கு மாலை மரியாதை செய்த விழாவை டிவி யில் கண்டேன் .க ப அறவாணன் நின்றுகொண்டிருந்ததை அவர் சபாரி டிரஸ் , தொப்பி மூலம் அறிய முடிந்தது .
அவருடைய வகுப்பு தோழர் லக்ஷ்மி நாராயண அய்யங்கார் அவர்களையும் தூய தமிழில் பெயரை மாற்றிக்கொள்ள சொல்லி(திரு மாலவன் ) அந்த காலத்தில் அறவாணன் வற்புறுத்தினார் என்பதை மறைந்த லக்ஷ்மி நாராயண அய்யங்கார்( பரமகல்யாணி கல்லூரி முன்னாள் முதல்வர் ) என்னிடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் என் பக்கத்து வீட்டுக்காரராய் பத்து வருடம் முன் இருந்த போது என்னிடம் வருத்தப்பட்டு சொன்னது என் நினைவிற்கு வந்தது .
அவருடைய தலைவர் கருணாநிதி துணைவேந்தராக அறவாணன் அவர்களை முன்னர் அமர்த்தியது தெரியும் . மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் தன் தலைவனின் மகனிடம் தன் உதவியாளர் பாசுகரிடம் காட்டிய மொழி வைராக்கியத்தை காட்டியிருப்பாரா ?
மு. க . சுடாலின் என்று அவர் பெயரை சொல்லி , எழுதியிருப்பாரா ?
ஒரு விஷயம் . கருணாநிதி அந்த காலத்தில் மறைந்த தமிழ் குடி மகனை ( அதிமுக விற்கு போவதற்கு முன்னால் ) தனித்தமிழ் சம்பந்தமாக நல்லா செமை கிண்டல் அடிப்பாராம் .தமிழ் குடி மகன் கூழை சிரிப்பு சிரிப்பாராம் .

Oct 29, 2008

எந்தரோ மஹானுபாவுலு

புதுவை பல்கலைக்கழக "திஜானகிராமன் " கருத்தரங்கம் காலையில் ஆரம்பித்து முடிந்த பின்னால் மாலை இந்திரா பார்த்த சாரதி தன் வீட்டுக்கு என்னை கூப்பிட்டார் .

இந்திரா மாமி முகம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது . அவர் வீட்டில் இரு முறை எனக்கு அந்த காலத்தில் நல்ல சுவையான பட்சணங்கள் கிடைத்தன . பாதாம் அல்வா சாப்பிட்டதை மறக்கவே முடியாது . பின்னால் அடுத்த வருடம் இ பா சாகித்திய அகாதேமிக்காக திஜா பற்றி ஒரு நூல் எழுத வேண்டி என்னிடம் உள்ள அனைத்து திஜா நூல்களையும் வாங்கினார் .புத்தகங்கள் கொடுத்து நான் சில மாதங்களில் ஊரை விட்டு செல்லவேண்டி வந்த போது புத்தகங்களை இபா திருப்பி கொடுத்தார் .'மரப்பசு' நாவல் மட்டும் எங்கோ எப்படியோ தவறி விட்டது .கிடைக்கவில்லை . அதற்காக மாமி என்னிடம் மிகவும் வருந்தியதுடன் மன்னிப்பும் கேட்டார் . 'ஐயோ ஒன்னும் இல்லே மாமி . அது கிடைக்க கூடிய புத்தகம் .நான் விலை கொடுத்து வாங்க முடியும் . நீங்கள் கவலையே படாதீர்கள் ' என்றேன் நான் அப்போது .

விஷயத்துக்கு வருவோம்.திஜாநிகழ்வு முடிந்து அவர் வீட்டுக்கு போய் பேசிகொண்டிருந்தேன் .திஜா விடம் பள்ளிகூடத்தில் படித்த மாணவர் இ பா . இபா விடம் படித்த கல்லூரி மாணவர்கள் ஆதவனும் சம்பத்தும் . இபா சாகித்ய அகாடெமி விருது 'குருதிப்புனல்' நாவலுக்காக வாங்கிய பின்னால் தான் ' சக்தி வைத்தியம் ' சிறுகதைநூலுக்காக சாகித்திய அகாடெமி விருது ஜானகி ராமன் வாங்கினார் .குருவுக்கு முந்தி சீடனுக்கு விருது !

இலக்கிய அரசியல் பற்றி பேச்சு திரும்பியது . அப்போது அந்த காலத்தில் டெல்லியில் இ பா வுக்கும் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி .

மாமி கணவர் மீது பரிவுடன் பேசுவது இயல்பான விஷயம் .' உங்க மீது வெங்கட் சாமிநாதனுக்கு பொறாமை . நீங்க சாகித்திய அகாடமி அவார்ட் வாங்கியதுனால பொறாமை தான் உங்க மேல கோபத்துக்கும் காரணம் ' - சத்தமாக சொன்னார் .

சாதாரணமாக புருஷன் இப்படி பொஞ்சாதி பேசும்போது தலையாட்டி தானே பார்க்க முடியும் . ஆனால் !

உடனே இ பா அதை மறுத்து சொன்னார் " ச்சே ச்சே .. அதெல்லாம் வெங்கட் சாமி நாதன் விருது க்கு ஏங்குகிற ஆள் இல்லே . அப்படி ஆசை அவனுக்கு கிடையவே கிடையாது . ரொம்ப நேர்மையான ஆள் . நீ சும்மா இரு "

உடம்பில் எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது .

அந்த நேரத்தில் இந்திரா பார்த்த சாரதி , வெங்கட் சாமி நாதன் இருவரும் என்னில் உயர்ந்து விசுவரூபம் எடுத்தார்கள் !

"எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு"

தியாக பிரும்மத்தின் ஸ்ரீ ராக கீர்த்தனை என்னுள் வியாபித்த தருணங்களில் இதுவும் ஒன்று !

புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்


அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.

'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.

விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார். கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார். தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.

பூனைக்கு யார் மணி கட்டுவது ? நான் எதற்கு இருக்கிறேன் ! பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் !
பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில்.
நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை. I broke the ice!



" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம் - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.
அவ்வளவு தான்! தனி தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் ' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '

தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம். உங்களை கையெடுத்து கும்பிட்டு மன்றாடி கேட்டுகொள்கிறேன் '

விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள் !
"தமிழ் துறை நடத்திய விழா வில் ஒருவன் தமிழை பழிக்கிறான். எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "

டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.
"சாணி உலகம் ! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும் "
..............

பின் குறிப்பு : தி.ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.
ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேவங்குடியில் பிறந்தார்.  1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி (ஒரு நல்ல வெய்யில் போதில்) அவரது மரணம் நிகழ்ந்தது.

முத்துலிங்கத்தையே பார்த்த மீன்

மாதா மாதம் .23 சதத்துக்கு ஒரு மாதாந்திர கணக்கு பத்திரம் என்னை தேடி வந்தது...
ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான ஒரு பெண்ணின் மாதவிடாய் போல இதுதபாலில் வந்தது ..
.......
பொன் நிறத்தில் வதக்கப்பட்ட முழு நீள மீன் மரத்தட்டில் வைத்து பரிமாறபட்டது .என்னை பார்க்கும் ஒன்றையும் நான் உண்பதில்லை .உணவகம் மூடும் வரை க்கும் இந்த மீன் என்னையே பார்த்து கொண்டிருந்தது .
......
பனிச்சேற்றில் ஒரு முறை விழுந்து கால் சுளுக்கி விட்டது . அப்பொழுது கூட சிரமம் பாராட்டாமல் "அந்த காலத்து " 'லையன்னா ' போல தவழ்ந்து தவழ்ந்து போய் தொலைபேசியில் செய்தி விட்டேன் .

அமுத்துலிங்கம் " 23 சதம் "சிறுகதையில்

I cannot Suffer Fools !

யதார்த்த வாதி வெகு ஜன விரோதி . இது எனக்கு ரொம்ப பொருந்தும் .
இந்த கலாச்சார காவலர்கள் ஏதோ ஒரு பெண்டோகோஷ்த் மீட்டிங் போகலாம் . என் ப்ளாக் உங்களுக்கான இடமல்ல .தமிழ் பண்பாடு காப்பவர்கள் தமிழர் ப்ளாக் களோடு உறவாடலாம் .
Do not be too moral.You may cheat yourself out much of life.
Aim above morality.
- Thoreau

ஏழையாய் இருக்கலாம் .தப்பே இல்லை . ஆனால் மனிதனாய் பிறந்தவன் முட்டாளாய் இருக்க உரிமையில்லை .

I cannot suffer Fools.

Oct 27, 2008

Willa Cather ‘s My Antonia’

வில்லா கேதர் அமெரிக்க நாவலாசிரியர் . அவருடைய " மை அன்டோனியா " பற்றி அந்த பெண் வில்லா சொன்னாள். அதை ஆங்கிலத்தில் அப்படியே தந்து விட விரும்புகிறேன் . மொழிபெயர்த்து சொல்லும்போது சில வாக்கியங்கள் வழுவிழந்து விடுகின்றன .
‘The Best thing I have done is” My Antonia.” I feel I have made a contribution to American Letters with that Book.’

இந்த நாவல் பற்றி ஒரு கமெண்ட்.

No Romantic novel ever written in America, by man or woman is one half so beautiful as “My Antonia”
-H.L.Mencken.
சில புத்தகங்கள் பற்றி அதிகம் பேசி அறிமுகபடுத்த தேவையில்லை .அப்படிப்பட்ட நாவல் 'மை அன்டோனியா '

தொடர்ந்து இப்படி நான் சில நூல்களை பற்றி ஆசிரியர்கள் பற்றி முன்னும் இதற்கு பின்னும் அவ்வப்போது குறிப்பிடுவது என் வழக்கம் . அவற்றை கவனித்து தேவையானவர்கள் அந்த ஆசிரியர்களை படிக்கலாம் . பின்னால்போனால் பழைய பதிவுகளில் பார்க்கலாம் . தமிழிலும் அவ்வப்போது குறிப்பிட்டே வருகிறேன் . சாமர்செட் மாம் இப்போது சிபாரிசு செய்ய மாட்டேன் . ஏனென்றால் மனித ஆயுள் மிகவும் குறைவு .அதற்குள் படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன . ஒருவேளை நூறு வயதுக்கு மேல் உயிரோடு இருந்தால் சாமர்செட் மாம் படியுங்கள் . இப்போது அவரை விட முக்கியமான பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் .
Sylvia Plath’s The Bell Jar
Kathy Acker’s Blood and Guts in High school
Manuel Puig’s Kiss of the Spider Woman
George Bataille’s Stoty of the Eye
JM Coetzee’s Disgrace
Jean Genet’s Thief Journal
Robert Pirzig’s Zen and the art of Motor cycle maintanance
Joestein Gaarder’s Sophie’s world.
Albert Camus The Outsider, The Fall
Umberto Eco The name of the rose
Italo Calvino On a winter’s Night, a traveler
Gabriel Carcia Marques One hundred years of Solitude.
Joseph Conrad Heart of Darkness
Thomas Mann The Magic Mountain
Lerman Tov Hero of our Times
Kazantzakis Zorba the Greek
Marcel Proust In search of Lost Time
James Joyce Ulysses, Dubliners
Vladimir Nabakov Lolita
William Faukner The Sound and the Fury
Leo Tolstoy Anna Karinina
Dostoyevsky Crime and Punishment, Karamazav Brothers
Paulo Coelho The Alchemist
Stephen Crane The Redbadge of Courage
Yann Martel Life of Pi
Borges short stories.

Jacques Derrida’s Of Grammatology
Michel Faucoult History of the Sexuality
Nietzsche Thus spoke Zarathustra


இவற்றை தேடி படியுங்கள் .

கண்கள்

கண்கள் ..கண்கள் .. கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை . ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை , வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டி விடுகின்றன . அந்த மனிதனின் மனத்தையே காட்டி விடுகின்றன . கண்களை பார்த்தால் தான் இதெல்லாம் தெரியும் . கண்களையே பார்க்காமல் இருந்தால் இழப்பு தான் . இழப்பென்று தெரிந்தும் சிலரை பார்க்கவேண்டாமே என்று தான் தோன்றுகிறது .

- அசோகமித்திரன் "கண்கள் " சிறுகதையில்

ஈஸ்வர அல்லா

ராஜஸ்தான் .பைன்சா என்ற ஊர் .துள்ஜா பாய். அறுபது வயது இந்து பெண் .பக்கத்து வீட்டில் வசிக்கும் சையது உஸ்மான் குடும்பமும் துள்ஜா பாய் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக இருநூறு ஆண்டுகளாக குடும்ப நண்பர்கள் . ஒரு நாள் பக்கத்து வீட்டில் புகை . துள்ஜா பாய் வெளியே வருகிறார் . வெளியே வெறியாட்டம் போடும் குடிகார கலவர கும்பல் . சூழ்நிலை புரிகிறது . சையது வீடு வெளியே பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது . இவர் அந்த கும்பல் செய்யும் அராஜகத்தை எதிர்த்து வீட்டின் கதவை திறந்து விட்டு சையது வின் மனைவி குழந்தைகளை மீட்டு தன் வீட்டில் பாதுக்காப்பாக வைக்கிறார் . சையது குழந்தைகளுக்கு பட்டம் செய்து விற்பவர் . அப்போது வீட்டில் இல்லை . குழந்தைகளுக்காக பட்டங்கள் தீக்கிரையாகின்றன . துள்ஜா பாய் தன் முயற்சியில் கடுமையாக அந்த குடிகார கலவர கும்பலை எதிர்க்க வேண்டியுள்ளது . ஆனால் இவர் கொஞ்சமும் பயப்படாமல் அவர்களை சமாளிக்கிறார் . கும்பல் நகை பணம் என்று சையதுவின் ஆயுட்கால சேமிப்பை கொள்ளையடித்து விட்டு ஓடிவிடுகிறது . மனைவி குழந்தைகள் காப்பாற்றப்பட்டதே போதும் என்ற சந்தோசம் சையதுக்கு போதுமாயிருக்கிறது . துள்ஜா பாய் வாழ்க !

பட்டங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன . சையது குழந்தைகள் விளையாட தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த பட்டங்கள் ! பாவம் பைன்சா நகர குழந்தைகளும் ..

Oct 25, 2008

கவிஞர் கே டி சந்தானம்


'என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம் ' பாட்டில் 'அங்கே என்னம்மா சத்தம் ' என கேட்டு கடைசியில் தானும் ' ஆஹா என்ன பொருத்தம்' எனபரவசமாகும் பெரியவரை யாரோ துணை நடிகர் என்று தான் எல்லோரும் நினைப்பர். ஆனால் அவர் ஒரு கவிஞர் . கவிஞர் கே .டி . சந்தானம் .
'காவேரி ஓரம் கவி சொன்ன பாடல் கதை சொல்லி நான் பாடவா,
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா '
என்ற சுசிலா பாடிய ' ஆடிபெருக்கு ' படப்பாடலை ஏ .எம் .ராஜா இசைக்கு எழுதியவர் .

'கண்காட்சி 'என்ற ஏ பி நாகராஜன் படத்தில் குன்னக்குடிவைத்யநாதன் இசையில் கே .டி .சந்தானம் எழுதிய பாடல் தொகையறா ஏபிநாகராஜனே தன் மென்மையான குரலில் சொல்வார் .
'வெண்ணிலவை குடை பிடித்து , வீசு தென்றல் தேர் ஏறி
மென் குயில் தான் இசை முழங்க ,மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி , கனகமணி பொற்பாவை
அன்னநடை ரதியுடனே , அழகு மதன் வில்லேந்தி
தன்முல்லை , மா , தனிநீலம் , அசோகம் எனும்
வண்ண மலர் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே !'
ஏ பி நாகராஜன் முடித்ததும் சந்தபாடல் ஆரம்பிக்கும் .
"அனங்கன் அங்கஜ்ஜன் , அன்பன் , வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா , மன்னுயிர்க்கின்பம் வழங்கும் உன் கதை சொல்லவா ?
கதம்பம் , செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயற்கண்ணியே , அன்பெழுந்தங்கம்  கலந்தின்பம் தரும் கன்னியே !"

கவிஞர் கே டி சந்தானம் பாசமலர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் . தர்ம சங்கடம் என்ற உணர்வை அழகாக பாசமலரில் வெளிப்படுத்துவார் .
இவரை கதாநாயகியின் தந்தையாக இரண்டு காட்சிக்கு நடிக்க தேர்ந்தெடுத்திருந்தார்கள் . முருகாலயா ஸ்டூடியோ வில் ஷூட்டிங் .நான் அந்த படத்தின் உதவி இயக்குனர்.
அவருக்கு மேக்கப் போடும்போது நான் அவரிடம் சென்று அவர் பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தேன் .
அந்த நேரத்தில் மற்றொரு உதவி இயக்குனர் வந்து ' உங்கள் பேர் என்ன சார் ?' என பேடை வைத்துக்கொண்டு எழுத நின்றான் . அவர் பதில் சொல்லுமுன் நான் ' கவிஞர் கே டி சந்தானம் ' என்றவுடன் அவன் மண் மாதிரி எழுதிக்கொண்டு திரும்பி போனான் .
தொடர்ந்து அவர் சொன்னார் . ' இந்த தலைமுறைக்கு என்னை யாரென்று தெரியாது . நீ தெரிந்து வைத்து என் பாடல்கள் பற்றி பேசுவது ஆச்சரியாமாய் இருக்கிறது . இதே மாதிரி பல வருடங்களுக்கு முன் நீ பேசுவது போலவே என் பாடல்கள் பற்றி 'அம்பிகாபதி ' படத்தின் போது ஒரு பையன் என்னிடம் பேசினான். கண்ணதாசனின் அண்ணன் மகன் . ' அப்புச்சி பாட்டில் கூட உங்கள் சந்தம் மாதிரி வருவதில்லையே ' - ஆச்சரியபட்டான். அந்த பையன் பஞ்சு அருணாசலம் மாதிரி நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவாய் ' -
என்னை ஆசிர்வதித்து இப்படி சொன்னார்.

அவரிடம் பேசிய போது மேலும் பல விஷயங்கள் பற்றி சொன்னார்.
'அந்த காலத்தில் நாடக கம்பெனியில் சேர சிவாஜி கணேசன் , காக்கா ராதாகிருஷ்ணன் இருவரையும் பாலகர்களாக அவர்கள் இருவரின் தாயார்கள் கூட்டி வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது' என்றார்.
’பி டி சம்பந்தம் தான் எல்லோருக்குமே ஆசிரியர். அவர் ரொம்ப கண்டிப்பானவர். என் .எஸ் .கிருஷ்ணனுக்கே அவர் தான் ஆசிரியர்’ என்ற இந்த செய்தியை அவர் தான் என்னிடம் முதலில் சொன்னார்.

எம்ஜியார் படம் ரகசிய போலிஸ் 115 ல் நடித்த பின் அந்த காலத்தில் இவர் மார்கெட் காய்கறி வாங்க போனால் இவரை பின்தொடர்ந்து சிறு பிள்ளைகள் கூட்டமாக " என்ன பொருத்தம் , ஆஹா என்ன பொருத்தம் " என்று பாடிகொண்டே வருவார்களாம்!
.............

ஸ்ரீதரும் கல்யாண் குமாரும்

ஸ்ரீதர் இறந்தது எல்லா தமிழர்களையும் பாதித்திருக்கிறது . அவர் "நானும் ஒரு தொழிலாளி" படம் இயக்கும்போது பார்த்திருக்கிறேன் .( ஆரம்பமே பிசிறு தட்டுகிறதா ? ஸ்ரீதரை பற்றி பேச இந்தப்படம் தான் கிடைத்ததா ?) அவர் சிகரெட் ஊதும் ஸ்டைல் , அந்த பெண்மையான பாவனைகள் , நகத்தை கடிப்பது ( தெய்வ மகனில் சிவாஜி யின் ஒரு கதாபாத்திரம் ஸ்ரீதரை இமிடேட் செய்ததை அறிவீர்கள் . இரண்டாவது மகன் ). ஷூட்டிங் போதுசிந்தித்து கொண்டே திடீரென்று " டே சக்கி !" என்று கூப்பிடுவது ....( என்.சி . சக்கரவர்த்தி - இவர் 'உத்தரவின்றி உள்ளே வா 'இயக்குனர் . சி வி ராஜேந்திரனுக்கு பிறகு ஸ்ரீதரின் வலது கரம் . )

' நெஞ்சில் ஓர் ஆலயம் ' 'நெஞ்சம் மறப்பதில்லை ' இரண்டு ஸ்ரீதர் படத்தின் கதா நாயகர் கல்யாண் குமார் . இவரிடம் நான் பேசும்போது ஸ்ரீதர் பற்றி நிறைய கேட்பேன் . தேவ சேனா புகைப்படம் ஸ்ரீதர் காட்டிய போது ' இந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ' என்று கல்யாண் குமார் பாசிடிவ் ஆக அவரிடம் சொன்னதை என்னிடம் சொன்னார் .
'சரி . அந்த இரு படத்தில் வேலை பார்த்த பிறகு பிற்காலத்தில் அவரை எப்போதெல்லாம் சந்தித்தீர்கள் ?'- என் கேள்வி !
கல்யாண் குமார் பதில் " சந்தித்ததே இல்லை "
'சந்தித்ததே இல்லை . அவரும் என்னை சந்தித்ததில்லை . நானும் தேடிபோய் சந்தித்ததில்லை '
கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .
அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார்.

சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் .




எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி"

'நெடுங்குருதி' நாவலை நான் தான் திருப்பூரில் அறிமுகம் செய்து பேசினேன் . எஸ் .ராமகிருஷ்ணனை சென்னையில் இருந்து இந்த நாவல் பற்றிய கருத்தரங்கத்திற்கு அழைத்து அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்தேன் . என் நண்பர் எம் .சரவணனை அதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டேன் . சந்தோசமாக முன்வந்தார் . எனக்காக கூட இப்படி நான் யாரிடமும் எதுவும் கேட்டதே இல்லை .இப்படி நான் சாதாரணமாக யாரையும் கேட்டதில்லை . அதற்கு முன்னும் பின்னும் . எப்படியோ இந்த நாவல் பற்றி அப்படி நான் ஒரு நிகழ்வு நடத்த நினைத்தேன் .
நாவல் அத்தியாயம் மொத்தம் 99 . பெரிய நாவல் 469 பக்கங்கள் கொண்டது .
கோடை காலம் ,காற்றடி காலம் , மழைக்காலம் , பனிக்காலம் என நான்கு பாகங்கள் .
நாகு , ரத்னாவதி , வேணி , திருமா , வசந்தா , ஜெயக்கொடி , வடுவார்பட்டி குறவர்கள் லட்சுமணன் , ஈரத்துணி கள்ளன் சீனி ,லயோனல் , ஜெசிந்தா , துந்தனா வாசிக்கும் பரதேசிகள் , வேல்சிதுரை , சிங்கி கிழவன் , பண்டார மகள் , தேவானை ஜெயராணி ,மல்லிகா, சேது .வசந்தா , சங்கு ,கிட்நா , நாகுவின் தாத்தா , நாகுவின் அய்யா , அம்மா , அம்மாவோட மயினி ,பக்கிர் , பக்கிரின் மனைவி , ஆதி லட்சுமி , மரக்கடை வியாபாரி அஷ்ரப் , ரத்னாவதியின் அத்தை ,என்று நிறைய கதாபாத்திரங்கள் .
"மழை நீண்ட உரையாடலை ப்போல நகரோடு பேசி ஓய்ந்தது . மழை வெறித்த பிறகு தெருவில் இறங்கிப்போகின்றவர்களின் பேச்சு கூட நனைந்திருந்தது ." எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து நடை !
ஒரு பானை சோற்றில் இருந்து ஒரு சோறு இங்கே வைக்கிறேன் : "சிங்கிகிழவன் ஒரு திருடன் . செத்துப்போன சிங்கியுடன் ஆடு புலி ஆடுபவன் . சிங்கி கிழவன் குழந்தைகள் கழுத்தில் அணிந்த நகைகளை கழட்ட மாட்டான் . குழந்தைகள் ஏங்கிபோய் விடுவார்கள் என விட்டு ப்போய் விடுவான் !"
நெடுங்குருதி கருத்தரங்கம் பற்றி என் உரை பற்றி உயிர்மையில் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள் . கோவையில் இருந்து கூட வாசகர்கள் வந்திருந்தார்கள் .
நான் ஆரம்பமாக நாவலை அறிமுகப்படுத்தினேன் . தொடர்ந்து எஸ்.ராமகிருஷ்ணன் தன் படைப்பை பற்றி பேசிய பின் நானும் மீண்டும் நாவல் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன் . வாசகர்கள் கேள்வி பதில் என நிகழ்வு விரிந்தது .

2004 ல் நடந்த நிகழ்ச்சி . அதற்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து கோவை நண்பர் கவிஞர் தென் பாண்டியன் சொன்னார் . " நீங்கள் பேசிய விஷயங்கள் தான் பின்னர் நான் நெடுங்குருதி நாவல் படிக்கும்போது அதனை புரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருந்தது . இன்றும் நெடுங்குருதி பற்றிய உங்கள் உரையை என்னால் மறக்க முடியவில்லை ."
திருப்பூரில் முகம் தெரியாத சிலர் என்னுடைய 'நெடுங்குருதி ' பேச்சு பற்றி இது போல அடிக்கடி குறிப்பிட்டார்கள் .
அந்த உரை மட்டுமல்ல .திருச்சியில் நான்காண்டுகள் தமிழ் இலக்கிய கழகத்தில் மணிக்கணக்கில் நான் பேசியதைகூட நான் எழுத்தில் கொண்டு வர முயற்சித்ததில்லை .
திருப்பூரில் கவிஞர் காயாதவன் ,நான் ஹெமிங்க்வே யின் கிழவனும் கடலும் நாவல் பற்றி நிகழ்த்திய உரை பற்றி தென் பாண்டியன் சொன்னதை போல அடிக்கடி குறிப்பிடுவார் .
திருச்சியில் ஒரு பேராசிரியர் தான் உரை நிகழ்த்தும் முன் சொல்வார்

"R P ராஜநாயஹம் போல என்னால் பேசமுடியாது .மணிக்கணக்கில் பேசினாலும் சுவாரசியம் குறையாமல் பேசுவார் . கேட்பவர்கள் ரசிக்கும்படியாக பேசுவார் "
நான் குறிக்கிட்டு சொல்வேன் “ I feel flattered!”
உடனே அவர் " flattery கிடையாது . இது தான் fact. எல்லோருக்கும் தெரிந்த உண்மை " என்பார் .
என் நண்பர் திருச்சி பேராசிரியர் காசியப்பன் சொல்வார் " உங்கள் ஆற்றல் எல்லாம் காற்றில் வீணாகிறது . எழுதாமலே !"

Oct 24, 2008

விஷாதம்

மனக்குழப்பம் !
மனிதனோடு எப்போதும் இருப்பது .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷாதம் . அதனால் விசாரம் . வித்தையுள்ளவனுக்கும் விசாரமுள்ளவனுக்கும் தூக்கம் ஏது ?
'கவலையில்லாத மனிதன் 'என்ற பெயரில் சந்தோசமாக படம் எடுக்க ஆரம்பித்த கண்ணதாசன் அந்த படத்தின் கதாநாயகன் சந்திர பாபு செய்த அடாவடியால் படம் முடிவதற்குள்ளும் , முடிந்த பின்னும் ரொம்ப கவலைக்குள்ளானார்.

ஒரு நாள் சிட்டி மகன் விஷ்வேஷ்வரம் அவர்களின் முதிர்ந்த நண்பர்குழுவுக்கு ஒரு விஷாதம் .
"சாமியாருக்கும் போலி சாமியாருக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?"
விஷ்வேஷ்வரம் தான் தீர்வு சொல்லியிருக்கிறார் .
" முதல்ல சாமியார் ! மாட்டிகிட்டா போலி சாமியார் !!"

ஒரு பிரஞ்சு படம் .படத்தின் ஆங்கில தலைப்பு “For the life of a cop”. அதில் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் .
கடத்தியவர்கள் அந்த பெண்ணை கற்பழித்து , பின் சித்திரவதையை தொடர்ந்து அவளை கொலை செய்யுமுன் அவளை காப்பாற்றிவிடுவார்கள் . காப்பாற்றியவர்களில் ஒருவனுக்கு ஒரு மனகுழப்பம் . அவன் அந்த பெண்ணை பார்த்து கேட்பான் .
“I think we were in time?”
நொந்து நூலாகிப்போன அந்த பெண் ஈன ஸ்வரத்தில் சொல்வாள் .
“Rapewise, you were not in time”

மனக்குழப்பத்திற்கு காரணம் என்ன ?
ரஸ்ஸல் க்ரொவ் நடித்த “A beautiful Mind” படத்தில் பதில் சொல்லப்படுகிறது .
Everybody is haunted by their Past!
.......

Yann Martel’s Life of Pi

Why do people Move? What makes them uproot and leave everything they have known for a great unknown beyond the horizon ?

The answer is the same the world over: People move in the hope of a better life.




Oct 23, 2008

என்னுடைய பதிவுகள்

நான் இங்கே ஆராய்ச்சி கட்டுரை எதுவும் எழுதவே மாட்டேன் . என்னுடைய வகை பத்தி எழுத்து . இன்னும் விரிவாக விரிவாகஆழமாக என அடிக்கடி இங்கே பின்னூட்டங்கள் வருகின்றன . விரிவா.....க எழுத நான் தயாரில்லை . அதற்கென்றே இங்கே பலர் இருக்கிறார்கள் . செக்கு மாட்டு விமர்சனம் !
நான் தெளிவாக எழுதுவதால் விரிவாக எழுத தேவை இல்லை !
இவர்கள் தாமதமாக வந்தவர்கள் என தெரிகிறது .
நான் ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது .என்னுடைய பதிவுகள் நான்கை இணைத்து பார்த்தால் அழகான ‘Column writing’. நூறு பதிவுகளை இணைத்தால் நாவல் .
கவிதை பத்து வரியில் இருக்கிறது , ஐந்து வரியில் இருக்கும்போது உரைநடை அப்படி இருக்கக்கூடாதா . இது என் பாணி என எண்ணிக்கொள்ளுங்கள் .
நான் எழுதும் பல பதிவுகள் பிற எழுத்தாளர்கள் பக்கம் பக்கம் பக்கமாக வள வள என்று சிறுகதை , கட்டுரை என எழுத வாய்ப்பானவை . என் எழுத்து அந்த எழுத்தாளர்களுக்கு எதிரான பகடி . என்னுடைய ப்ளாக் படித்துவிட்டு 'அடேடே இதை அருமையான கவிதையாய் எழுதலாமே , அடடே இதை சிறுகதையாய் எழுதலாமே அடடே இந்த புள்ளியில் துவங்கி நீளமா ஒரு நெடுங்கட்டுரை எழுதலாமே , நாவல் சமாச்சாரமாச்சே .இதை அருமையான ஒரு குறும்படமா எடுக்கலாமே 'என்று தவிக்கிறவர்கள் நிறைய பேர் .

பாலமுரளி கிருஷ்ணா கச்சேரி யில் சீட்டுகள் மேடைக்கு பறக்கும் .

பாலமுரளி புன்னகையுடன் தொண்டையை செருமி சொல்வார் .

"Lend thy ears!
This is Balamurali Krishna’s music
Do not ask for this and that.
Lend thy ears!"

கிரா என்னும் ஊற்று

கரிசல் இலக்கிய மன்னர் கிரா விடம் நேரில் பேசுவது மட்டுமல்ல தொலை பேசியில் பேசுவது கூட சுகமான சமாச்சாரம் .
நான் கவலையோடு சொன்னேன் . 'ஆடு புழுக்கை போடற மாதிரி கவிதையை அப்பப்ப மொத்தமா போடுராங்கே . அதோட நம்மையும் அத மோந்து பார்க்க சொல்றானுங்க'
அவரிடம் இப்படி லேசா எடுத்து கொடுத்துட்டா போதும் .
கிரா சொன்னார் . இப்போ புகைப்படம் எடுத்து பிரபலமாகி விட்ட இளவேனில் முதன் முதலாக ஒரு கவிதை தொகுப்பை போட்டு கொண்டு வந்து கிரா விடம் ஒரு முன்னுரை கேட்டாராம் .
'கவிதை தொகுப்பு போட பணம் எப்படி கிடைத்தது?'
'என்னோட அம்மாவோட சிறுவாட்டு பணம் . அந்த பணத்தை திருடி கவிதை தொகுப்புக்கு சிலவு பண்ணேன் '
கிரா சொன்னாராம் " நீ கவிதை எழுதியது முதல் தப்பு . அம்மாவோட சிறுவாட்டு பணத்தை திருடி அதை புத்தகமா போட்டது இரண்டாவது தப்பு .என்னிடம் முன்னுரை கேட்டது மூணாவது தப்பு "
.......
கிரா விடம் அளவளாவும்போது அவ்வப்போது டி கே சி பிரசன்னமாகி (ரத்தமும் சதையுமாக ஜீவனோடு, சிரிக்கும் கண்கள் ,மூக்கு ,மீசையோடு )விடுவார் . அந்த அளவுக்கு கிராவோடு டிகேசி ஒன்று கலந்து விட்டார் !
கிரா அப்படி சொன்ன சுவை நிகழ்வு
டி கே சி யோடு குற்றாலத்துக்கு கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி சந்தோசமாக ரயிலில் போய்கொண்டிருக்கும்போது தன் சந்தேகம் ஒன்றை கேட்டாளாம்
" தாத்தா தாத்தா ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தால் ஏன் குலைக்குது ?"
டி கே சி சொன்னாராம் " எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."

Albert Camus’s ‘The Fall’

ஜெகம் பிராடு எழுத்தாளன் இருக்கானே , அவன் சுந்தர ராமசாமி செத்தப்ப சாப்பிடாம தூங்காம பேலாம எழுதின புத்தகத்திலே 'அல்பெர் காம்யுவை எனக்கு பிடிக்காது 'ன்னு எழுதியிருக்கான் .
அதை படிச்சப்ப எனக்கு ஒரு ஞாபகம் வந்துச்சு . மௌன்ட் ரோட்டில் அந்த காலத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒக்கார்ந்திருப்பான் . அடிக்கடி அவன் சத்தம் போட்டு சொல்வான் ' ஸ்விட்சர்லாந்து எனக்கு பிடிக்காது . அங்கே நான் போக மாட்டேன் . போகவே மாட்டேன் '
பாவம் ஜெகம் பிராடு கூட இந்த பிச்சைக்காரன் மாதிரி தான் .

ஆல்பெர் காம்யு வின் " வீழ்ச்சி " நாவலில் ஒரு காட்சி .

"சுவர்களால் கட்டப்பட்ட ஒரு பெட்டி போன்ற ஒன்று . அதற்குள் சிறைகைதிகள் ஆடாமல் அசையாமல் நிற்பது மட்டுமே சாத்தியம் . கைதிகளின் முகங்கள் மேலே காணும்படி கதவின் உயரம் தாழ உள்ளது . அந்த பாதையில் செல்லும் சிறை அதிகாரிகள் கைதியின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு போவார்கள் . சங்கிலியால் நன்கு பிணைக்கப்பட்ட கைதி தன் முகத்தில் வழியும் எச்சிலை துடைக்க வழியேதும் கிடையாது . ஆனால் அதிகாரிகள் காறி உமிழும்போது கைதிகள் தங்கள் கண்களை மூடிக்கொள்ள அனுமதிக்கபட்டிருந்தார்கள் ."

இந்த நாவல் மனிதவியல் ,உளவியல் பற்றி முன் வைத்த கேள்விகள் முழுமையாக அதிக பட்சமாக இருக்கிறது .
போப் தன் சிம்மாசனத்தை விட்டு , வாடிகனை விட்டு கிளம்பி அயோக்கியர்கள் இடையில் வாழவேண்டும் . நாம் சீக்கிரமாக ஒரு புது போப் தேர்ந்தெடுக்க வேண்டும் .
பரிசுத்தம் , நீதி இரண்டுமே ஒன்று சேர முடியாத படி பிரித்து வைக்கப்பட்டுள்ளன . பரிசுத்தம் சிலுவையில் அறையப்பட்டும் நீதி என்பது அலமாரியிலும் தெரியகிடைக்கின்றது .

ஒரு மனிதன் தன் பொய்களை பற்றி ஒப்புக்கொள்ளாமல் மரணமடைய கூடாது .

சந்தோசம் உள்ளவனாக இருக்க வேண்டுமானால் அடுத்தவர்களை பற்றி ரொம்ப பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் .


க்லமன்ஸ் சொல்கிறான் " தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை நான் ஒதுக்கியிருப்பேன் . அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன் ."

மண்வாசனை பாண்டியன் .

நேற்று விஜய் டிவி யில் ஏதோ போட்டிக்காக ஒரு இளைஞரும் பெண்ணும் பாடிய பாடலை கவனிக்க நேர்ந்தது . 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு , பூத்திருச்சி வெட்கத்தை விட்டு '

உடனே மறைந்த நடிகர் பாண்டியன் பற்றி நினைவலை .

அப்போது மண்வாசனை படம் தயாரிப்பில் இருந்தது .படம் ரிலீஸ் ஆகவில்லை .மதுரையில் மீனாக்ஷி யம்மன் கோவில் எதிரே என் நண்பர்கள் சவ்வாஸ் சகோதரர்கள் கடையில் பேசிகொண்டிருந்தேன் . அப்போது நடிகர் பாண்டியன் வந்தார் . சவ்வாஸ் நிஜாம் அறிமுகபடுத்தினான் . ' பாரதி ராஜா வின் புது படத்தின் ஹீரோ .'

நான் சொன்னேன் பாண்டியனிடம் ' பாரதி ராஜாவின் ஹீரோ என்பது சரி . ஆனால் நடிகர் சுதாகர் மாதிரி ( தமிழ் சினிமாவிலிருந்து )காணாமல் போய்விடாதீர்கள் . ' என்றேன் .

இன்று

உலகத்திலிருந்தே காணாமல் போய்விட்டார் . பாவம் .

க நா சு நினைவோடை பற்றி பாரதி மணி



நீங்கள் சொல்வது தான் சரி.

க.நா.சு.வின் தந்தை சிதம்பரத்தில் போஸ்ட் மாஸ்டராகத்தான் இருந்தார். அதே தெருவில் வசித்த தன் நண்பர் வக்கீலின் மகளை தன் மகன் க.நா.சு.வுக்கு மணமுடித்துவைத்தார். சுராவின் ‘கநாசு நினைவோடை’யில் பல தகவல் பிழைகளுண்டு. ஆனால் நான் திருத்த விழையவில்லை.அவருக்கு கடவுள் நம்பிக்கையிருந்ததேயொழிய சடங்குகளில் விருப்பமில்லை. அதனால் தான் புரோகிதர், மந்திரம் தீச்சட்டியில்லாமல் அவர் உடலை நிகம்போத் மின்சார மயானத்தில் எரித்தேன்.இதை ஓர் உயிர்மை கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன்.

பாரதி மணி

Oct 22, 2008

கநாசு நினைவோடை

கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது .
கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன . கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும் . நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன் . இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு . Jealous Mistress ! ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி !!
கநாசு எதையும் தொழ மறுத்தவர் . புனிதம் என புல்லரிப்பு எதுவும் அவருக்கு கிடையாது . நடராஜர் சிலை பற்றி அவர் சொன்ன ஒரு கமெண்ட் . ' ஒற்றை காலை அவர் தூக்கி நிற்பதற்கு கொசுகடி கூட காரணமாயிருக்கலாம் .'
நான் இங்கே குறிப்பிட வந்த விஷயம் சுந்தர ராமசாமி ' கநாசு நினைவோடை ' நூலில் செய்துள்ள தகவல் பிழை பற்றி .
கநாசு வின் தகப்பனார் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண சப் போஸ்ட் மாஸ்டர் தான் . ஆனால் சுராவின் முதுமை மறதி காரணமாக ' கநாசு' வின் தகப்பனார் தென் ஆப்பிரிக்காவிலே 'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' பதவி வகித்தவர் என்று ரொம்ப விசித்திரமாக குறிப்பிட்டுள்ளார் .
தபால் துறை யில் போஸ்ட் மாஸ்டர் என்பது பொதுவான வார்த்தை . பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் , சப் போஸ்ட் மாஸ்டர் , ஹெட் போஸ்ட் மாஸ்டர் என்று பல பிரிவு தபால் துறை யின் உள்வட்டத்தில் உண்டு . ஒரு மாவட்டத்துக்கு அந்த காலத்தில் ஒரு ஹெட் போஸ்ட் மாஸ்டர் தான் . பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் Extra department எனப்படும் கீழ்நிலை ஊழியர் . அதாவது தபால்துறையின் உள் ஊழியர்களான Postman , Class 4 இவர்களுக்கும் கீழ் .ஜனங்கள் எல்லோரையுமே போஸ்ட் மாஸ்டர் என்று தான் நினைப்பார்கள் .
' போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ' என்பது தபால் துறை யில் மாநிலத்திலேயே உயர் அதிகாரி .
நான் இந்த நினைவோடையை படித்தவுடன் சுந்தர ராமசாமிக்கே தொலைபேசியில் தெரிவித்தேன் . அதிர்ந்து விட்டார் .அவருக்கு தான் எழுதியுள்ளபடி தான் ஞாபகமாம் . காலச்சுவடு கண்ணனுக்கும் ,நினைவோடை தொகுப்பாளர் அரவிந்தனுக்கும் தொலை பேசியில் தவறை சுட்டி காட்டினேன் . அதோடு திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்த காலச்சுவடு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி கவிதை வாசிக்க வந்திருந்தார் . அந்த இலக்கிய கூட்டத்தில் நான் தான் அதிக நேரம் பேசினேன். அந்த கூட்டத்தில் பகீரங்கமாக 'இந்த தவறை அடுத்த பதிப்பில் திருத்த வேண்டும்'என நான் பேசினேன் .

Carnal Thoughts -11

'ஊளை' சிவன்காளை மட்டன் கடை நுணுக்கம் கற்றவன் . ஆட்டுகறி விற்பனை யில் விற்பனன் . பாய் கடை , தங்கபல் தங்காத்துகடை இப்படி அவ்வப்போது தனக்கு மாறுதல் செய்து கொள்வான் . ஆனால் இரண்டில் ஒரு கடையில் உதவியாளாய் வேலை செய்து கொண்டிருப்பான் .
ஊளை என்பதற்கு சொத்தை என அர்த்தம் .
ஆடு அறுப்பதிலிருந்து,ஆட்டுகறியை சவ்வு ,கொழுப்பு , எலும்பு எல்லாம் கலந்து சில்லறையாக முழு ஆட்டுகறியையும், கொஞ்சம் பழசையும் சேர்த்துdispose செய்வதில் மன்னன் .ஆனால் ஆளு சொத்தை ஆதலால் 'ஊளை' சிவன்காளை.
கறி வாங்க வரும் பெண்களிடம் கொஞ்சம் அவர்களுக்கு புரியாதபடி பேசிவிட்டு அருகில் நிற்கும் கம்புகூட்டனிடம் , ஒத்தகாதனிடம் பார்வையால்
' இது எப்படிஇருக்கு ! ' என பெருமையாக பார்த்து கண்ணடிப்பான் .
'அரைகிலோ கொடுப்பா ' என்றால்
அந்த பெண்ணை பார்த்து
' நெஞ்சிலே வைக்கவா ? தொடையிலே வைக்கவா ?' என்பான் .
ஒரு கிழவி கறி வாங்க வந்தவளிடம் ' நெஞ்சில வைக்கவா தொடையிலே வைக்கவா ' என்றான் ஊளை . கிழவி சூட்சுமம் அறிந்து உடனே " ங்கொம்மா கூதியிலே வச்சுக்க " என்று பகர்ந்தாள் .
...
மட்டன் கடை வேலை தங்காத்து , பாய் கடும் கோபம் ,மனஸ்தாபம் காரணமாக தடைபடும் வேளையில்,
இந்த ஊளை பயல் முறுக்கு வியாபாரம் தட்டில் வைத்து செய்த போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிக்கிய ஒரு தாட்டியை முறுக்கு கொடுத்து செட் அப் செய்து சுவரொன்றில் சாய்த்து நிற்க வைத்து தாட்டியின் சேலையை தூக்கி ,தானும் நின்றநிலையில் உடனே இயங்கினான்.
மதுரை பாஷைலே ஜாரி ,மசை, தாட்டி போன்ற வார்த்தைகள் பெண்ணை குறிக்கும்.
Rooster Fuck
ஆளு அரவம் கேட்கும் முன் முடிக்கவேண்டி 'எக்ஸ்பிரஸ் சாட்' சேவல் போல முடித்தான் . Pre-Mature Ejaculation! தாட்டி உடனே நழுவி அவசரமாக ஓட, இவன் தாட்டியை சாத்திய சுவற்றில் விந்து வடிய கண்டு, அடடா ஏமாந்து விட்டேனே என மனம் நொந்து ,தான் இழந்த முறுக்குகளை எண்ணி வருந்தினான். அந்தோ !

Oct 21, 2008

J.M.Coetzee

ஜே எம் கூட்சீ எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . இரண்டு முறை புக்கர் பரிசு வாங்கினார் . 2003 ல் நோபல் பரிசு வாங்கிவிட்டார் .
Great writers are the saints for the godless !
இவருடைய Disgrace நாவல் படித்தது என் வாழ்வின் முக்கிய அனுபவம் . கீழே வைக்க முடியாத பிரதியின்பம் தரக்கூடிய நூல்கள் சில . அவற்றில் இந்த நாவல் முதல் வரிசையில் வைக்கப்பட வேண்டியது . The Master of Petersburg நாவல் நெஞ்சை பிழிந்து விடக்கூடிய துயரத்தை சாரமாக கொண்டது . கதை நாயகன் ரஷ்ய எழுத்தாளர் Dostoevsky யின் புத்திர சோகம் பற்றியது . என்றாலும் கூட்சீ இதை எழுதியதற்கு காரணம் கூட்சீ யின் மகன் 23 வயதில் ஒரு விபத்தில் இறந்ததால் தன்னுடைய புத்திர சோகத்தையே எழுதினார் .
தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் . ஆஸ்ட்ரேலியா வில் இப்போது வாழ்கிறார் .
சிகரெட் கிடையாது . குடிபழக்கம் இல்லாதவர் . ஆச்சரியமாக மாமிசம் சாப்பிடுவது கூட கிடையாது . இப்படி ஒரு வெள்ளை எழுத்தாளர் !
இவருடைய நுட்பமான பார்வை ரொம்ப அபூர்வமானது .
வண்டியிழுக்கும் குதிரை யின் பார்வையை கூட்சீ அனுமாநிப்பதை உதாரணமாக சொல்லலாம் . ' வண்டிகளை இழுப்பதற்காக இவ்வுலகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதே குதிரைக்கு தெரியாது .அதற்கு அந்த புரிதல் இல்லை . ஏதோ சவுக்கடி படுவதற்காக தான் பிறந்திருக்கிறோம் என்று அது நம்புகிறது . அடி தன் மேல் கடுமையாக விழும்போது தான் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக தான் கட்டப்பட்டுள்ள மாபெரும் பளு தான் வண்டி என்றே தான் குதிரை நம்பிகொண்டிருக்கிறது .'
Dostoevskyயை நாம் உயிருடன் தரிசிக்கும் பிரமையை The Master of Petersburg நாவல் ஏற்படுத்திவிடுகிறது . அவருடைய படைப்புகளை படித்தவர்களுக்கு இந்த நாவல் முழு அனுபவம் ஏற்படுத்துவதுடன் அவரை படிக்காதவர்களுக்கு Dostoevskyயை அறிமுகம் செய்கிறார் கூட்சீ ! இந்த நாவல் தமிழில் சா . தேவதாஸ் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது .
Disgrace நாவல் தெனாப்பிரிக்க சூழல் . இந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் இங்கே கூட்சீ யார் என நன்கறிய முடியும் . ஆங்கிலத்திலேயே படிக்க கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் .
கவிஞர் பைரன் பற்றி இந்த நாவலில் கூட்சீ பேசுமிடங்கள் மறக்க முடியாது .
டேவிட் லூரி என்ற ஒரு ஆங்கில பேராசிரியர் தான் கதை நாயகன் .
லூரி , லூசி , பீட்ராஸ் ,ரோசலின் , எல்லோரும் இன்னும் நினைவில் ஜீவனோடு நிற்கிறார்கள் .
Disgrace நாவலில்
' ஒரு ஆண் நாய் . பெண் நாய் வாடையை உணரும்போது , அண்மையில் பெண் நாய் வந்திருப்பதை தன் மோப்ப சக்தியால் உணரும்போதேல்லாம் அந்த ஆண் நாய் அதன் சொந்தக்காரர்களால் கடுமையாக அடிக்கப்படுகிறது . செக்ஸ் அதற்கு மறுக்கப்படுகிறது . இது போல அந்த வில்லாவின் வெளியே பெண் நாய் வரும்போதெல்லாம் தொடர்ந்து கடுமையாக நாய்க்கு அடி . என்ன செய்வதென்றே அந்த நாய்க்கு தெரியவில்லை . ஒரு கட்டத்தில் பெண் நாய் வாடை இதற்கு உணர கிடைத்தவுடன் தன் காதுகளை விரைத்து,அதன் வால் அதன் பின்னங்கால்களுக்கு இடையில் வைத்து தன் குறி மறைத்து ,ஊளையிட்டு அழுதுகொண்டே தன்னை அடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தோட்டத்தில் ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடும் . அந்த நாய் ,பெண் நாய் மீது தனக்கு ஏற்படும் இயற்கையான இச்சையையே வெறுக்க ஆரம்பித்து விடுகிறது .'

சிவகுமாரும் குமாரர்களும்

"ஒரு நடிகன் அவனோட கேரியரில் அஞ்சு படமாவது பெயர் சொல்லும்படியா பண்ணனும்டா " ன்னு அப்பா சொல்வார் ! இப்படி மே மாத ஆனந்த விகடனொன்றில் சிவகுமாரின் சின்ன மகன் பருத்தி வீரன் கார்த்தி சொல்லியிருந்தார் .
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?

'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .

பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .

சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை  அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!

ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.

இரண்டு பின்னூட்டங்கள்

சுரேஷ் கண்ணன் said...


//There are obvious dangers in the pleasure of Blog writing! //இணையத்தால் ஏற்படும் சங்கடங்களில் இந்த மாதிரியான பின்னூட்ட சமாச்சாரமும் ஒன்று. உங்கள் பதிவுகளின் மூலம் பல பழைய விஷயங்களை சுவாரசியமான எழுத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே பின்னூட்டங்களின் மூலம் ஒருவேளை மனம் நொந்து எழுதுவதைப் புறக்கணித்து விடாதீர்கள். அவற்றைப் புறக்கணியுங்கள்.
Monday, 20 October, 2008


அண்ணே!

உங்க பதிவுகள் அனைத்தையும் விடாது படித்து வருகிறேன். உங்களைப் போன்ற அருமையான விரிவான படிப்பாளியின் எழுத்தை நன்று என்றோ அல்லது ம்றுத்தோ சொல்லுகின்ற தகுதியில்லாத எளியவன் நான் என்பதனால் பெரும்பாலும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆனால் கண்ணதாசன் பற்றிய இந்தப் பதிவு அழகு என்று என்னை சொல்ல வைக்கின்றது :-0)

(புதுகை.அப்துல்லா)
10/20/08

ஆதவன் பற்றி கூபாவிலிருந்து விஜய்


வருடம் 1974 -இறுதிப்பகுதி.

நான் ஆதவனை முதலில் பார்த்தது என் அண்ணாவின் வீட்டில் (சரோஜினி நகர், புது டில்லி). ஏதோ புத்தகம் கொடுக்கவோ, வாங்கவோ வந்திருந்தார். சில நிமிடங்களே இருந்துவிட்டுப் போனதாக ஞாபகம். என் அண்ணாவின் நண்பர். அவருடன் ரயில்வே மினிஸ்ட்ரியில் வேலை செய்துகொண்டிருந்தார் அப்பொழுது. அண்ணாவின் மூலம் அவர் எழுத்து பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். {அவருடைய ‘இரவுக்கு முன் வருவது மாலை' (if I remember the title right) பற்றி (சிறுகதைத் தொகுப்பு?) - என் அண்ணா சிலாகித்ததாக நினைவு.} அவருடைய கட்டுரை ஒன்று (சாகித்ய அகாதமி விருது பற்றி என்பதாக நினைவு)கணையாழியில் படித்திருந்தேன். கடைசி முறையாக அவரைப் பார்த்தது டில்லி மௌளங்கர் ஆடிட்டோரியத்தில்,'பாரதி 200'விழாவின் போது. அவர் அதில் பேசினார். அவ்வப்போது கையில் வைத்திருந்த குறிப்புகளைப்பார்வையிட்டபடி, பாரதியின் எழுத்துக்கள், கருத்துக்கள் பற்றி ஒரு unorthodox சொற்பொழிவாற்றினார். மென்மையான, sensitive-ஆன மனிதர் எனத் தோன்றியது.அவருடைய அகால மறைவு பற்றி, சோமாலியாவில் நான் இருந்தபோது கேள்விப்பட்டு சோர்வுற்றேன்.ஆதவனின் ‘காகித மலர்கள்' நாவலைக் கடந்த வருடம்தான் படிக்க நேர்ந்தது. இன்னும் நிறைய இவர் எழுதியிருக்கக் கூடாதா என ஏங்க வைத்த எழுத்து. இந்தியா திரும்பியவுடன் படிக்கவிரும்பும் நாவல்கள் முக்கியமாக இரண்டு: ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', மற்றும் சாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி'.உங்களுடைய வலைப்பதிவுகளை கொஞ்ச நாளாகப் படித்துவருகிறேன். நன்றி : சாரு நிவேதிதாவுக்கு, உங்கள் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்காக.

அன்புடன், -

விஜய் (ஹவானா, கூபா).

Oct 20, 2008

A joke is a very serious thing!

அவ்வப்போது ஜோக்ஸ் படிக்கிறோம் அதில் மனதில் நிற்பது எத்தனை . குமுதம் ஆனந்த விகடன் அங்கே இங்கே கிடைத்த ஜோக்ஸ் தான் .யார் எப்போ எழுதினது .தெரியாது .

1 . என்னம்மா சமையல் இது . சாம்பார் லே உப்பே இல்லை . ரசத்துலே புளி இல்லே .

போதும் நிறுத்துங்கப்பா . இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும் .

2 . என் மாமியார் தங்கமானவங்க

இப்போ அவங்க எங்கே

என் புருஷன் குழந்தையா இருக்கறப்பவே இறந்துட்டாங்க

3.தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு .. நம்ப முடியல

சாராயம் வித்ததா சொல்றதையா

இல்ல . எட்டாவது படிச்சதா சொல்றதை !

4 .இது வரை ஒரு புறம்போக்கு நிலத்தை கூட தலைவர் தனக்குன்னு வச்சுகிட்டதில்லை

அப்படியா

ஆமாம் . எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாரு !

5. பேரிச்சம்பழ வியாபாரியோட நெருங்கிபழகினது தப்பா போச்சுடி

ஏன் ?

டேட்ஸ் தள்ளி போயிடுச்சிடி .

6. தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே .

எப்படி

காவிரி பிரச்சனையிகன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !

7.ஐயோ மன்னா தப்பா புரிஞ்சிகிட்டீங்க . முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்காக யுத்தத்தில் condom எல்லாம் பயன் படுத்த முடியாது .

8.மின்னலை பார்த்தா கண்ணு போய்டும் .பார்க்கலைன்னா மின்னல் போய்டும் .

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை ,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் .
திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி " அவனை நினைத்தே நானிருந்தேன் . அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் . இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை . அண்ணன் காட்டிய வழியம்மா . " -படித்தால் மட்டும் போதுமா .
தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி . என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி .' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம் .
இப்படி பல பாடல்கள் பற்றி அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான வுலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால் .
பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள் .
நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை .
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள் .
அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது . கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ் . என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார் . காமராஜர் மேல் அளவு கடந்த பற்று . திமுக உக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ் . திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை .( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)
திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது . நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார் . திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார் .
திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர் . அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர் . மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள் . உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள் . பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார் .
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது . ( கருணாநிதி , அன்பில் தர்மலிங்கம் )
திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி . ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம் . இந்திரா காங்கிரஸ் நான்காமிடம் .
'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது . எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன் . எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்
" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "
தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார் .
தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார் . எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார் .
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி
ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே ?
கண்ணதாசன் பதில்
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன் . உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள் ; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '
கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார் . உடனே கண்ணதாசன் சொன்னார் !
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "
கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது .
ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதி யின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது ?
அரசு பதில் : 'வன வாசம்' தான் . ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது .

Oct 18, 2008

Franz Kafka’s “First Sorrow”

சில கதைகள் படித்தால் மனதில் உட்கார்ந்து விடும் .

Kafka வின் கதை “First Sorrow”

Kafka வுக்கும் Nietzsche வுக்கும் திருமண வாழ்க்கை கொடுத்து வைக்கவில்லை பாருங்கள் . இரண்டு பேருக்குமே நிச்சயம் நடந்து கல்யாணம் நடக்கவில்லை .

'முதல் துயரம்' என்ற Kafka வின் கதை தமிழில் கூட ஆர் .சிவகுமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 'தொனி' eன்ற சிற்றிதழில் வெளிவந்தது .

பார் விளையாட்டு கலைஞன் பற்றிய கதை .

பார் விளையாட்டு என்பது அடைவதற்கரிய மனித சாதனைகளில் ஒன்று .

இந்த பார் கலைஞன் ஒற்றை பாரில் விளையாடுபவன் . அவனுக்கு திடீரென்று ' இனி எப்போதும் எதிர் எதிராக இருக்கும்படியாக இரண்டு பார் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் தேவை என்று தோன்றி விடுகிறது . ஒற்றை பாருக்கு பதிலாக இரண்டு பார் இருப்பது நிகழ்ச்சியை இன்னும் பிராமாண்டமாக்கும் . அதன் விறுவிறுப்பு , கணம் , சுவை கூடிவிடும் என அவனுக்கு நிச்சயமாகி ஒரு நிலையற்ற தன்மையை அவனுக்குள் உருவாக்குகிறது .

'என் கைகளில் ஒரே ஒரு பார் . நான் எப்படி இனி தொடர்ந்து வாழ முடியும் ?'

“Sense of incompleteness”

இப்படி அவனுக்கு மனதில் பட்டு விட்ட பிறகு அவனை அந்த எண்ணம் அமைதியாக இருக்க விடுமா ?

அவனுடைய' இருப்பு 'அச்சுறுத்தலுக்கு இனி உள்ளாவதை தவிர வேறு வழியேது .

துயரத்தின் முதல் ரேகைகள் !

கர்ணன்

அடையாள சிக்கல் - Identity Crisis . இதன் குறியீடு கர்ணன் . மனித துயரங்களில் அடையாள சிக்கல் எனும் அவலம் பிரதானமானது.
கிரா கேட்டார் என்னிடம்
"கர்ணன் செய்யாத தர்மம் என்ன தெரியுமா ?"
சொல்லுங்க அய்யா - நான் திரும்ப கேட்டேன்.
" பசித்த வயிறுக்கு சோறு '"
'ஏன் தெரியுமா .கர்ணன் பொண்டாட்டி அவனுக்கே சோறு போட மாட்டாள் . தேரோட்டி மகன் என்ற பூர்வீகம் பட்டத்தரசிக்கு தெரிந்த விஷயம் என்பதால் கர்ணன் மீது அலட்சியம் .அவனுக்கே சோறு கிடைக்காத போது அவன் மற்ற பசித்த வயிறுகளுக்கு எப்படி சோறு போடுவான் .'

கவிஞர் சுகுமாரன் ஒரு கட்டுரையில் கர்ணன் பற்றி அபூர்வ தகவல்கள் கொடுத்திருந்தார் .
கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான் . அவனுடைய வளர்ப்பு பெற்றோர் அதிரதன் , ராதை இருவரும் அவனுக்கு சூட்டிய பெயர் வசுஷேணன் . கர்ணனுக்கு இரண்டு மனைவியர் . வ்ருஷாலி , சுப்ரியை . மூன்று புத்திரர்கள் . இரண்டு பேர் மூத்த தாரத்து பிள்ளைகள் . சுப்ரியை யின் ஒரு மகன் .
கவிஞர் சுகுமாரன் ' மகாபாரதத்தின் இலக்கிய மேன்மை - இதிலுள்ளது வேறு பல இடங்களில் இருக்கலாம் . ஆனால் இதில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது ' என்கிறார் .
வாஸ்தவம் தானே !

அருந்ததி ராய் The God of small things நாவலில் கர்ணனை பற்றி சொல்வது இப்படி !
A brilliant Clown in a bankrupt circus!

கர்ணனின் தோல்வி தோல்வியே அல்ல .
In his miserable defeat lies Karna’s supreme triumph!


அடையாள சிக்கல் என்பதின் முழு அவஸ்தையை அனுபவித்தவன் கர்ணன்.

அஜாடிகள்

அஜாடிகள் - அதாவது ஜாடை தெரியாதவர்கள் கச்சேரியில் முன் வரிசையில் உட்கார்ந்து விடக்கூடாது என்று விளாத்திகுளம் சுவாமிகள் சொல்வாராம் . கி.ரா சொன்னார் என்னிடம் .


டி.என் .ராஜரத்தினம் பிள்ளை சுவாமி புறப்பாட்டின் போது நடந்து கொண்டே வாசிக்கும் போது ஒருவன் முன்னால் அவர் பார்க்கும்படியாக பிரமாதமாக சொடக்கு போட்டு தலையை ஆட்டி கொண்டே வந்தானாம் . தோடி இவருடைய பிரத்யேக ராகம் . அரைமணி நேரம் நடந்து கொண்டே இவர் வாசித்து முடித்தவுடன் , அவரிடம் அந்த பிரமாதமாக ஆகாகாரம் போட்டு ரசித்துகொண்டே வந்த அந்த ஆள் ' அடுத்த படியாக தோடி வாசிங்கோ ' என சத்தமாக சொல்லியிருக்கிறான் . ராஜரத்தினம் தன் பக்கத்தில் ஒத்து ஊதி கொண்டு வந்தவன் முதுகில் ஒரு போடு போட்டாராம் .
" எங்கேடா அந்த தோடி வாசிக்கிற நாகஸ்வரம் . எடுத்துட்டு வரலையா "
எந்த கலைஞனுக்கும் இந்த அஜாடிகள் அலர்ஜி தான் .

புதுமைபித்தனின் ' சிற்பியின் நரகம் ' கதையில் வரும் சிற்பிக்கு இந்த உளைச்சல் தானே .
எதற்கு சொல்கிறேன் என்றால் எழுத்துக்கும் இது பொருந்தும் .
தத்து பித்து என்று பல பின்னூட்டங்களை பார்க்கும்போது இந்த அஜாடிகளை என்ன செய்ய என்று தோன்றும் . வடிகட்டி தான் போடவேண்டும் .அப்படி நிர்த்தட்சன்யமாக புறக்கணித்து விட வேண்டியிருக்கிறது .

There are obvious dangers in the pleasure of Blog writing!

ஆதவனின் நினைவில் பாரதி மணி


ராஜநாயஹம்,

நீங்கள் நண்பர் ஆதவனைப்பற்றிய நினைவுகளை ... ராஜநாயஹம், நீங்கள் நண்பர் ஆதவனைப்பற்றிய நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டீர்கள்.தில்லியில் என் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்ததால், க.நா.சு.வைப்பார்க்க அடிக்கடி வருவார். He was an intravert. பேசும்போது அவரிடமிருந்து வார்த்தைகளை பிடுங்கவேண்டும். பழக ஆரம்பித்துவிட்டால், சகஜமாக உரையாடுவார். நானும் அவரது Inferiority Complex-ஐ களைவதற்கு மிகுந்த பாடு பட்டேன்.

1982-ல் பாரதியின் நூற்றாண்டுவிழாவை தில்லியில் விமரிசையாகக்கொண்டாடினோம். பாரதி பாலு, நான், ஆதவன், லா.சு. ரங்கராஜன் போன்றோர், பாரதியின் நூறாண்டு பூர்த்தியானதால், ‘பாரதி-200’ என்ற அமைப்பைத்தொடங்கி, குடியரசுத்தலைவர் தொடங்கிவைத்து, சீனி. விசுவநாதன், ரா.அ. பத்மநாபன் மற்றும் பல கலைஞர்கள் கலந்துகொண்டு ஒருவார விழா அமர்க்களமாக நடந்தேறியது.

அதில் ஆதவனுடன் நெருங்கி பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆதவன் ‘புழுதியில் வீணை’ என்ற பெயரில் பாரதியின் வாழ்க்கையை ஒரு சிறந்த நாடகமாக எழுதியிருந்தார். நேரக்குறைவு காரணமாக, அந்த நாடகத்தை என்னால் மேடையேற்ற முடியவில்லை. சனிக்கிழமை தோறும் நடக்கும் ‘பாரதி கூட்டத்தில்’ Play Reading முறையில் நான் அதை வாசித்தேன். பாரதியைப்பற்றி ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நாடகம் அது. அது புத்தகமாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.’பாரதி’ படப்பிடிப்பின்போது, நாடகப்பிரதியைத்தேடினேன். கிடைக்கவில்லை.அவர் தெற்கே வந்தபிறகு, அவருடனான தொடர்பு குறைந்தது.மனம்விட்டுப்பழகும் நல்ல நண்பர். அவரை நினைவுபடுத்தியதற்கு நன்றி!

பாரதி மணி

.....

பாரதி மணி சார் !

R .P. ராஜநாயஹம் நமஸ்காரம் .

நீங்கள் குறிப்பிடும் ஆதவனின் " புழுதியில் வீணை " பாரதியின் புதுவை வாழ்க்கையை மையமாக கொண்டு எழுதப்பட்டது .( புதுவையில் ஒரு பத்தாண்டு காலம் பாரதி இருந்திருப்பார் தானே .) அந்த நாடகம் ஆதவன் மரணத்திற்கு பின் பிரசுரம் செய்யப்பட்டது .

இ.பா தான் முன்னுரை அதற்கு எழுதியிருந்தார் ' பாரதியை பற்றிய நாடகத்தை அவரை விட ஆறு வருடம் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவன் எழுதிவிட்டதை பற்றி முரண் நகையோடு அதில் குறிப்பிட்டிருந்தார் .

வாழ்க்கையின் புதிர்பாதைகள் !

நர்மதா தான் வெளியிட்டது . என்னிடம் பரண் மேலே தூங்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஆதவனின் ' புழுதியில் வீணை'யும் ஒன்று .இடபிரச்னை காரணமாக ஐந்தாண்டு காலமாக எல்லாம் பரணில் கிடக்கிறது . அவசரத்துக்கு
REFER செய்ய கூட வழியில்லை .

How beautiful the world would be,
If there were a procedure
For moving through labyrinths.

Umberto Eco in ‘The Name of the Rose’

அன்புடன்

R .P. ராஜநாயஹம்

ஆதவன் தானா ?

யாரையாவது பார்த்து ' நீங்கள் தானே '
கேட்டால் அவர் முகம் இறுக்கமாகி பதில் சொல்வார் ' இல்லே . நான் வேறே ' .
எனக்கு இது போல அனுபவம் அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது .
அப்போது டெல்லியில் இருந்து ஆதவன் பெங்களூர் வந்து விட்டார் என தெரியும் . வருடம் 1986. சென்னையில் ஒரு வேலையாய் சென்று விட்டு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி திரும்பிகொண்டிருந்தேன். ரயிலில் பிரயாணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . பஸ் பிரயாணம் கொஞ்சம் கூட பிடிக்காது . ரயிலில் ஜாலியாய் வரும்போது கேன்டீன் போக எழுந்தேன் . நான் இருந்த பெட்டியிலே நான்கைந்து வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த ஒருவர் எழுத்தாளர் ஆதவன் மாதிரியே இருந்தார் . எனக்கு உடனே சிலிர்ப்பாய் இருந்தது . ஆதவனை நேரில் பார்த்ததில்லை . அவ்வப்போது பத்திரிகை, அவருடைய சிறுகதை நூல் நர்மதா வெளியிட்டதில் பார்த்திருக்கிறேன் .இமயபதிப்பகம் அவர் படத்தை அட்டையில் போட்டார்களா ? இல்லை என்று தான் தோன்றுகிறது . குமுதத்தில் ஒரு கதை அவர் எழுதியிருந்தார் . அப்போது அவர் ஸ்டைலாக கையை சுவரிலோ , கதவிலோ வைத்து நிற்கிறார்போல போட்டிருந்தார்கள் . அப்படி அவரை புகைப்படங்களில் பார்த்ததை ஒப்பிட்டு பார்த்தால் அவர் போல இருந்தது . ஆனால் குழப்பமாய் இருந்தது . ஒரு பரவசம் எனக்கு ஏற்படவும் செய்தது .
இவர் ஆதவனாய் மட்டும் இருந்து விட்டால் ! காகித மலர்கள் , என் பெயர் ராம சேஷன் ஆகிய இரு நாவல்களையும் மூன்று முறை படித்திருந்தேன் . அவருடைய சிறுகதைகளையும் முழுமையாக படித்திருந்தேன் . என்னவெல்லாம் அவரிடம் பேச முடியும் . தி.ஜா பற்றி , ஆதவனின் எழுத்து பற்றி , அசோகமித்திரனின் பற்றி , இடைவெளி சம்பத் பற்றி , இ .பா பற்றி .. நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது . கேன்டீன் போய்விட்டு திரும்பி வரும்போதும் பார்த்தேன் .
அவர் மாதிரி தான் தெரிந்தது . ஆனால் வேறு ஆளாய் இருந்தால் ? கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது .
கேட்டு இல்லை என பதில் வந்தால் அசடு வழியவேண்டுமே . கடைசி வரை கேட்கவே இல்லை . கையில்' ஹிந்து 'பேப்பர் .படித்துகொண்டிருந்தார் .
ஆள் பார்த்தால் பிராமணர் என்பதும் தெளிவாய் தெரிந்தது .ஆனால் ஆதவன் தானா ?
கடைசியில் அவர் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கினார் . அவர் பிளாட் பார்மில் நடந்து போவதை பார்த்து கொண்டே இருந்தேன் .
அடுத்த வருடம் ஆதவனின் அகால மரணம் பற்றி அறிந்த போது அவருக்கு ஏற்பட்ட கதியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதேன் .
ரயிலில் பார்த்த அந்த மனிதரிடம் பேசியிருந்திருக்கலாமே என இப்போது ஒரு பெரிய உறுத்தலாக இருக்கிறது .
புதுவை சென்ற பின் கி.ரா விடம் சொன்னேன் . கி.ரா வுக்கு ஆதங்கம் .' நீங்க பேசியிருக்கனும் . இனி அந்த வாய்ப்பே கிடையாதேய்யா ' என்றார் .

உயிர்மையில் பாரதிமணி ஆதவன் சொன்னதாக குறிப்பிட்ட விஷயம் போல என் அப்பா வும் அடிக்கடி சொல்வார் .
தெற்கே இந்தியா குறுகி இருப்பது போல மனிதர்களும் குறுகிய மனம் உடையவர்கள் .மதுரை , திருநெல்வேலி ,நாகர்கோவில் பக்கம் பெரும்பாலும் அப்படி தான் . பிரயாணத்தில் கூட பரந்த மனசு சுருங்குவதைபற்றி பாரதி மணி சொன்ன போது ஆதவன் பதில் ரொம்ப விஷேசமானது .

தெற்கே இனி அமைதி இருக்குமா ? ஜாதியை வைத்து தான் அரசியல் என்று இப்போது ஆகியிருப்பதே பாரதி மணியிடம் ஆதவன் சொன்னது சரி தான் என்பதை நிரூபிக்கிறது . மதம் , ஜாதி, ஏன்தமிழ் சினிமா கூட அங்குள்ள மக்களுக்கு இது எல்லாமே ஒரு Obsession ஆகி விட்டது .

Oct 17, 2008

ஷார்ல் பாதலேர்


நிறைய விபச்சாரிகளிடம் ஷார்ல்பாதலேர் உறவுகொண்டான் . சாரா என்ற செக்ஸ் தொழிலாளி தான் அவனுக்கு வாழ்க்கை துணை . கொனோரியா , சிபிலிஸ் வியாதிகள் அவனுக்கு கிடைத்தன . சிபிலிஸ் வியாதி முற்றி அம்மா மடியில் உயிர் விட்டான் .

ஷார்ல் பாதலேர் நாற்பத்தி ஆறு வயது வரைவாழ்ந்தவன் . ஆடைகளை நேர்த்தியாக உடுத்துவதில் பாதலேர் ரசிகன் . நிறைய செலவாளி . அதனால் கடனாளி .
ரைம்போ சொல்வான் ' பாதலேர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞன் !'
அவனுடைய 'துன்ப மலர்கள் ' கவிதைத்தொகுதி யில் ஆறு பகுதியை சென்சார் செய்தார்கள் .
அவற்றை தேடி பிடித்து நான் படித்தேன் .
பிரஞ்சு கவிதையுலகின் மிகப்பெரிய சாதனையாளன் .
நாகார்ஜுனன் கொடுத்து வைத்தவர் . நேரடியாக ரைம்போ , பாதலேர் இருவர் மட்டுமல்ல எல்லோரையும் நேரடியாக பிரஞ்சு மொழியிலேயே படித்து விட்டவர் .
ரைம்போ , பாதலேர் இருவரையும் நான் ஆங்கிலத்திலேயே படித்தேன் . இருவர் பற்றி மட்டும் ஒரு நோட் புக் தனியாக குறிப்பெடுத்தேன் அந்த காலத்தில் .

இப்போது என் நினைவிலிருந்தே அவன் கவிதை வரிகள் சில யோசித்து தருகிறேன் .
Get Drunk
One should always get drunk.
You must get drunk without cease.

இந்த கவிதை படித்த போதே பாதலேர் எழுதியவை Dark poetry வகை தான் என தெரிந்தது .
Jeane Duval என்ற பெண்ணோடு தான் ரொம்ப நாள் வாழ்ந்திருக்கிறான் . அவளுக்கு தான் கீழ் கண்ட கவிதைகளை எழுதியிருப்பானோ ?
Hymn to Beauty
….
Who cares if you come from Paradise or Hell
…….
Come from Satan, come from God- who cares!


அவளை வரைய ஆசைப்பட்டிருக்கிறான் .

The desire to paint
I am burning to paint her

She is Lovely, more than Lovely:
…..
I would compare her to a black sun,
…..
But it is the moon , rather, to which
She is more readily likened.


கஞ்சா , குடி என்றே வாழ்ந்திருக்கிறான் . அவன் அம்மா பாதலேர் இறந்த பின் அவன் கடன்களை தீர்த்திருக்கிறாள் .
46 வயதில் தன் மகன் இறந்த போது தன்னை எப்படி தேற்றிகொள்ளமுடிந்தது .
“I see that my son, for all his faults, has his place in Literature.”

பெரும்பாலான அவன் எழுத்து அவன் மறைவிற்கு பிறகே பிரசுரிக்கப்பட்டது .

பாதேலேருக்கு அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ மீது ,ரிச்சர்ட் வாக்னர் இசை மீது மிகுந்த மரியாதையும் ஆர்வமும் இருந்தது .

அவன் எந்த அளவுக்கு செலவாளி என்றால் அவனுடைய வசதிக்கு மேல் வாங்க புத்தகம் , ஓவியம் ,புராதன பொருட்கள் இப்படி வாங்கி சேர்க்க ஆசைப்பட்டவன் .

கல்யாணம் என்பது பற்றி அவன் சொன்னான் .

“Unable to suppress love, the church wanted atleast to disinfect it and created Marriage.”

தன்னை பற்றி அவன் சொன்னது

“I have no convictions, because I have no ambitions. However I have some convictions, in a nobler sense, which cannot be understood by the men of my time.”

காங்கோ - தமிழக ரவிச்சந்திரன்

வருடம் 1983. காங்கோ அரசரடி யில் ஏ ஏ ரோடு முடியும் இடத்தில் நிற்கிறான் . நாற்பது வயது . சுற்றிலும் விடலை பையன்கள் . " டே' ட்ட்ரம்பி 'லைபரேசன்' மூவி பார்த்தியாடா " 'தம்பி' என்பதை இங்க்லிஷ் அக்சென்ட் ல்' ட்ட்ரம்பி ' என்று தான் காங்கோ சொல்வார் . லிபெரேசன் தான் லைபரேசன் . இப்படி தான் அமேரிக்காவில் உச்சரிப்பார்களாம்.

காங்கோ இங்கே என் வலைதளத்தில் அறிமுகமானவர் தான். கோழி களவாணி யை போலீசில் பிடித்துகொடுக்கும் முயற்சியில் தானே விதி வசத்தால் லாக் அப் பில் மாட்டியவர் .

சிகரெட் குடிக்கும்போது காங்கோவுக்கு விரல்கள் நடுங்கும் .

அங்கு காங்கோவை சூழ்ந்து நின்ற வாலிபர்களில் ஒருவன் " அண்ணே ! குடையில ஓட்டை இருக்கலாம் . ஆனா படகிலே ஓட்டை இருக்ககூடாதுன்னே " என தத்துவம் பேசினான் .

காங்கோ " டே ட்ட்ரம்பி யார்ரா இவன் . என்னையே மிரட்டுறான் ."

இந்த நேரத்தில் ஏ ஏ ரோட்டில் தமிழக ரவிச்சந்திரன் ஸ்டைல் நடை நடந்து வந்து கொண்டிருந்தான் .

இந்த பாலு காங்கோவின் பால்ய நண்பன் . நாற்பது வயது . இவன் வீட்டில் அப்போது ஜப்தி நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது . கொஞ்ச நாளாய் ஆளை ஏரியாவில் காணோம் . இவனுக்கு 'தமிழக ரவிச்சந்திரன் ' என்பது பட்டப்பெயர் .

நடிகர் ரவிச்சந்திரன் 'ஸ்டாப் லிசன் ப்ரோசீட் ' என்ற பாட்டில் அந்த காலத்தில் தோள்பட்டை யை ஒரு பக்கமாக இறக்கி நடக்க ஆரம்பித்து எல்லா படத்திலும் அப்படியே நடப்பதை பார்த்து அப்படியே நடக்க ஆரம்பித்தான் இந்த பாலு . ரவிச்சந்திரன் ஏதோ பெரிய ஹாலிவுட் ஆக்டர் என்பது போல வகை பிரித்து இவனுக்கு ' தமிழக ரவிச்சந்திரன் ' என்று ஆரப்பாளையம் சல்லிகள் பெயர் வைத்து விட்டார்கள் .

'டே இந்த பிராடு எங்கேடா இங்கே ?' காங்கோ ஆச்சரியப்படும்போதே பாலு பக்கத்தில் வந்து விட்டான் . காங்கோ வின் இயற் பெயர் சேகர் .

'ஹாய் சேகர்!' - தமிழக ரவிச்சந்திரன்

ஹாய் பாலு ! - காங்கோ

‘How are you ‘ காங்கோ கேட்கிராப்லே

‘I,m fine ‘ தமிழக ரவிச்சந்திரன்

‘And what are you’
‘I,m doing business’

‘How much you have invested’ -காங்கோ
‘Fifty ‘
‘Fifty thousands ?‘ - காங்கோ
No no . fifty lakhs!- தமிழக ரவிச்சந்திரன் !

ஐம்பது லக்ஷம் முதலீடில் பிசினஸ் என்று சொல்லி விட்டு தமிழக ரவிச்சந்திரன் தோள்பட்டை இறக்கி ஸ்டைல் நடை நடந்து போய்கொண்டே சொன்னான் !

Ok, Sekar I’m very busy now . see you . I miss you a lot!

வருடம் 1983. தமிழக ரவிச்சந்திரன் வீட்டு கதவில் ஜப்தி நோட்டீஸ் !

காங்கோவுக்கு கை விரல்கள் மிகவும் நடுங்கி சிகரெட் கீழே விழுந்து விட்டது .

டே ற்றம்பி !

I have to commit suicide . டே என்னடா . இந்த பிராடு என்கிட்டேயே அளந்துட்டு போறான் . என்னை கேனை பயல் ஆக்கிட்டானே !


Oct 16, 2008

ஆம்புலன்சும் ஆலமரத்தானும்

குடித்துவிட்டால் ஆலமரத்தானுக்கு என்ன வார்த்தை என்று கிடையாது . ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கூப்பாடு .

எல்லாம் கடுமையான வசவுகள் . Incest, zoophilia எல்லாமே சகட்டுமேனிக்கு!

" டே உங்க மாமன் மச்சான் எல்லாம் கழுதையை ஓக்க

உங்க அண்ணன் தம்பியெல்லாம் அக்கா தங்கச்சிய ஓக்க

டே நானெல்லாம் ஆளையும் ஓத்து நிழலையும் ஒக்கறவன்டா டே "

அந்த நேரத்தில் தான் கரு நீலமாய் இருந்த போலீஸ் வேன்களின் நிறத்தை வெள்ளை நிறமாக்கியிருந்தார்கள். ஆலமரத்தானுக்கு General knowledge கொஞ்சம் கம்மி .

ஏ ஏ ரோட்டில் இருந்து வளைந்து வெள்ளையாக ஒரு வேன் திரும்பியது .

ஆலமரத்தான் " நிறுத்துடா சுன்னி , வண்டியை நிறுத்துடா என் வெண்ணை !"

-கத்தியால் வேன் பேநெட் மீது குத்தினான் .

சிங்கத்தின் குகையில வாலாட்டினால் ? இறங்கிய போலீசாருக்கு ஏக குசி !

ஆலமரத்தானுக்கு அடி விழுந்ததுமே புரிந்து விட்டது ?

"ஏட்டையா ! சத்தியமா ஆம்புலன்ஸ் நு நினைச்சி தான் தெரியாம கத்தியை சொருகினேன் " - Excuse!

"சத்தியமா போலீஸ் வேன் நு தெரியாதுங்க . தெரியாம சலம்பிட்டேன் ஏட்டையா , மன்னிச்சிக்கங்க , சத்தியமா வெள்ளையா இருக்கவும் ஆம்புலன்சுன்னு நினைச்சிட்டேன் .ஐயோ அடிக்காதிங்க ஏட்டையா "

சும்மா பொறித்து எடுத்து வேனுக்குள் ஆலமரத்தான் வீசப்பட்டான் .

பாரதிமணியின் பின்னூட்டம்

Rev.Fr VICTOR S.J. வலைப்பதிவிற்கு பாரதி மணி எழுதிய பின்னூட்டம்

பாரதி மணி said...
ராஜநாயஹம்:
பிரபலமானவன் யார்? அதற்கு ஏதாவது அளவுகோல்கள் இருக்கின்றனவா? அதற்கு நாம் என்ன விலை கொடுக்கிறோம்? பணமும் புகழும் சாசுவதமா? அப்படியொன்றால் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த நடிகர் தியாகராஜ பாகவதர் ஏன் கடைசிக்காலத்தில் ரசிகரான ஒரு ரிக்‌ஷாக்காரர் பராமரிப்பில் இறந்தார்?என்னைப்பொறுத்தவரையில், நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நல்லவனாக வாழ முயற்சி செய்தாலே நாம் பெரியவர்கள் தாம்! நாம் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் தான்.ஐம்பதுகளில் தில்லிக்குப்போனபோது, அங்கு என் தூரத்து உறவினர் IAS பாஸ் பண்ணிவிட்டு பெரிய வேலையில் இருந்தார். அழைப்பின் பேரில் அவர் வீட்டு விசேஷத்துக்கு போய்விட்டு, அவர் வீட்டார் காட்டிய அலட்சியத்தால், பரிசைக் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் வந்திருக்கிறேன். பிறகு என்னிடமும் கார் பங்களா வசதிகள், தில்லி தமிழ்ச்சமூகத்தில் அங்கீகாரம் வந்தபோது, என் நட்புக்காக விழைந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை அவருக்கு நினைவூட்டினேன் -- அதுவும் ஐம்பதுபேர் இருந்த சபையில்.இப்போது என்னிடம் Inferiority Complex சுத்தமாக இல்லை. நான் தான் உலகத்திலேயே உயர்ந்த மனிதன்! இப்படி நான் நினைப்பதை யார் தடுக்கமுடியும்?நாம் எல்லோருமே உயர்ந்த மனிதர்கள், நல்ல மனிதர்கள்!

பாரதி மணி
Monday, 13 October, 2008

தி .ஜா மரணிப்பதற்கு சற்று முன்..


வரலாறு நிகழ்வுகளை சரியாக பதிகிறதா ? சமீபத்திய மரணங்கள் பற்றியே கூட உண்மையை அறிவதில் குழப்பங்கள் நேர்கிறது .எனும்போது பல நூற்றாண்டு சம்பவங்களின் நம்பகத்தன்மை என்ன ?
தளையசிங்கம் மரணம் பற்றி ஜெகம் பிராடு ஜெயமோகன் பெரிய பொய்யை சொல்லி அதனை கேள்விக்கு நான் உள்ளாக்கி சு.ரா களமிறங்கி மு .பொன்னம்பலம் சு.ரா எழுதிய தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் கட்டுரையில் தளைய சிங்கம் மரணம் பற்றி தகவல் பிழை எதுவும் இல்லை என்று ஜெகம் பிராடு வின் முகத்திரை கிழித்தார் . சமீபத்தில் சாரு நிவேதிதா வின் Mummy returns – part 3 யில் ஜெகம் பிராடு எனக்கு தளையசிங்கம் மரணம் பற்றி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ஜெய மோகன் முழுசா அம்மனகுண்டியாநிக்கும்படி பண்ணியாச்சு . இதிலே காஞ்ச காட்டான் நாஞ்சில் நாட்டான் 'அய்யோயோ நான் உண்மையின் பக்கம் நின்னு வெள்ளவேட்டியிலே புல்லழுக்கு, புடுக்குலே சொறி சொரங்காயிடுச்சி' ன்னு புலம்புறான் .

ப்ருனோ லத்தூர் அறிவியல் உண்மைகளை விஞ்ஞாந விஷயங்களையே இப்போது கேள்விக்குள்ளாக்கி விட்டார் . இதை விட பெரிய சாதனை என்ன இருக்கிறது!
1973 ல் நடந்த தளைய சிங்கம் மரணம் பற்றி இவ்வளவு போராட வேண்டி வந்துச்சு .

1982 ல் நடந்த தி .ஜானகிராமனின் மரணம் பற்றி ஒரு விஷயத்தை நான் பேசி விடுகிறேன் .
'ஜானகிராமனை மருத்துவமனையில் ஒரு நர்ஸ் அவமானப்படுத்தி விட்டார் . சில மணி நேரத்தில் அவர் மரணம் நிகழ்ந்தது . இது ஜானகிராமனுக்கு மட்டுமல்ல சாதாரணமாக யாருக்குமே நடந்திருக்க கூடாது ' என்கிற அர்த்தத்தில் அப்போது கணையாழியில் அசோகமித்திரன் எழுதியிருந்தார் .
வாசகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி ! ஜீரணிக்க மிகவும் கஷ்டமாய் இருந்தது . ஜானகிராமனுக்கு மரணமடையும்போது இப்படி ஒரு அவமானமா ?

இப்போது இந்த ஜானகிராமன் பற்றிய செய்தி அசோகமித்திரனின் கட்டுரைகளில் உள்ளது .

1988 ல் சிட்டியிடம் நான் இந்த விஷயம் பற்றி பிரஸ்தாபித்த போது ' இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ' என உறுதியாக மறுத்தார் . வேதனை பட்டார் . அப்படி எந்த அவமானமும் ஜானகிரமானுக்கு நடக்கவில்லை .
எனக்கு ஆச்சரியாமாக இருந்தது .

1989 ல் மார்ச் மாதம் சென்னை சென்றிருந்த போது ஜானகிராமனை கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டிருந்த மணிக்கொடி சிட்டியின் மகன்களில் ஒருவரான சங்கரை சந்திக்க விரும்பினேன் .இவர் தான் ஜானகிராமன் இறந்த நேரத்தில் அவர் அருகில் இருந்தவர் . தூர்தர்சனில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் . சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம் தான் என்னை சங்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார் . சங்கரிடம் கேட்டேன் . ஜானகிராமனுக்கு இறப்பதற்கு முன் அவமானம் ஏதும் யாராலும் நடக்கவில்லை என்பதை சங்கர் உறுதிபட சொன்னார் .

இதில் அசோகமித்திரனுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து அவர் கொஞ்சம் அவசரப்பட்டு கணையாழியில் அப்படி எழுதியிருக்கிறார் என்றே அனுமானிக்க வேண்டியிருக்கிறது .

அசோகமித்திரனிடம் அவரை புதுவையில் சந்தித்த போதும் பின் என் முயற்சி காரணமாக அவர் ஸ்ரீவில்லி புத்தூர் வந்து பென்னிங்க்டன் நூலகம் நடத்திய விழாவில் (எழுத்தாளர் அறிமுகம் ) அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி நான் பேசிய பின் மறு நாள் அவரை வழியனுப்பும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலும் அவரிடம் சொல்லிவிட்டேன் .

Oct 15, 2008

முரட்டம்பத்திரி வீரத்தாய்

மதுரையில் என் நண்பன் முரட்டம்பத்திரியில் உள்ள கருப்பையாவை பார்க்க போயிருந்தேன் அன்றொரு நாள் .
அவனுடைய தாயார் அவனை பற்றி என்னிடம் பிராது செய்தார் .

" என்னடா டே ஏலே அப்பு .. தொரை! இவன்ஒன் ஆளு பொலைக்கத்தெரியாத பயலாய் இருக்கான் . கஞ்சா விக்க சொன்னா பயபடுரானே அப்பு . இவன்லாம் விருமாண்டி தேவர் மகனாடா .
டே இதே என் தம்பி சொரிக்காம்பட்டியான் என்ன தெகிரியமா கஞ்சா வியாபாரம் செய்கிறான் .
நாய்தாலன்க ரைட் பண்ணாலும் பயபடுரானா பாருடா ஏலே .. ஒருக்கா சொரிக்காம்பட்டியான கையை ஏத்தி கட்டி டேசன்லே வச்சி நாய் தாலனுக ( போலீஸ் என்று அர்த்தம் ) இவன் முன் பல்லு நாலு கீழ் பல்லு நாலை ஒடைச்சி எடுத்தானுக . பயப்பட்டானா ..பொக்கவாயோட சிரிச்சிகிட்டே கஞ்சா விக்கிறான் . அவன் சொரிக்காம்பட்டியான் மூத்திரத்தை இவனை குடிக்கச்சொல்லுப்பு .. இவன்லேம் விருமாண்டிதேவருக்கு பொறந்தவன் . தூ .. பெத்த வைத்திலே பிரண்டை யை தான் வச்சுகட்டனும் "

Carnal thoughts-10


உன்னை முதல் முதலாக பார்த்த போது !



நடிகைகளின் கணவர்கள் பற்றி அவ்வளவு சிலாக்கியமான அபிப்ராயம் பெரும்பாலும் கிடையாது . கூஜா , மாமாக்காரன் என்ற கொச்சையான பிம்பங்கள் தான் . மேலும் நடிகையின் பணம் , சொத்து தான் நடிகையை மணப்பவரின் இலக்கு என்பதும் உண்மை என்றே நிரூபணமாகியிருக்கிறது .
அதனை நிரூபிப்பது போன்ற நடவடிக்கைகளை நிறைய காண முடியும் .

நடிகை விவாகரத்து பெறும்போது பல திடுக்கிடும் ரகசியங்களை அவர்களின் கணவர் வெளிப்படுத்தி தன் மீதே சேறு அள்ளி வீசிகொள்வார்.

நடிகை ஸ்ரீவித்யா வின் வாழ்வு பரிதாபமானது . எம் எல் வசந்தகுமாரி யின் மகள் . வசந்தகுமாரி Gentleman GNB யின் பிரதான சிஷ்யை . ஜி என் பாலசுப்ரமணியத்தின் பெயரை காப்பாற்றிய அற்புதமான பாடகி . அவருக்கும் கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் ஒத்து போனதே இல்லை . இவர்களுக்கு மகளாக பிறந்த ஸ்ரீவித்யாவுக்கு மாலை பொருத்தம் அமையவில்லை .
ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கும்போதே நடிக்க வந்து விட்டார் . "மூன்றெழுத்து "- (இந்த படத்திலேயே அசோகன் கோமாளியாகி விட்டார் . கொனஷ்டைகள் பார்க்க சகிக்காது .இந்த படத்தில் வில்லன் என்னத்தை கண்ணையா ! ஏதோ அசோகன் பின்னாலே கடைசி காலத்தில் தான் கோமாளியாகி விட்டதாக பலர் இப்போது நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.), "நூற்றுக்கு நூறு ", "நான்கு சுவர்கள் "என ஆரம்பித்து "சொல்லத்தான் நினைக்கிறேன் " தாண்டி "அபூர்வ ராகங்களில்" பிரபலமானார் .
தன் முதல் காதல் பற்றி அவர் தெருவில் ஒரு வீட்டில் இருந்த பையனோடு ஏற்பட்ட Infatuation அனுபவம் பற்றி துணிச்சலாக அந்த காலத்தில் பேட்டியில் சொன்னார் .
அதன் பின் கமல் ஹாசன் பிரபலமாகாத காலத்திலிருந்து ( அன்னை வேளாங்கண்ணி படத்தில் ஸ்ரீவித்யா நடிக்கும் போது கமல் உதவி இயக்குனர் ) அவரை காதலித்தார் .
கமல் ஹாசனின் Promiscuous nature என்பது உள்ளங்கை நெல்லிக்கனி . காதல் ரொம்ப நாள் நிலைக்கவில்லை .

பின்னால் ஜார்ஜ் என்ற மலையாள தயாரிப்பாளர் (!) ஒருவரை காதல் (!) திருமணம் செய்துகொண்டு விட்டார் .

இருவருக்கும் விவாகரத்து ஆனபோது சண்டை நாறிவிட்டது .
கோபமாக ஜார்ஜ் குமுதத்திற்கு ஒரு பேட்டி கொடுத்தார் . அதில் அவர் ஸ்ரீவித்யாவை பற்றி முன் வைத்த ஒரு குற்றச்சாட்டு இவர் எத்தகைய இழிய மனிதர் என்பதை மிக அழகாக வெளிப்படுத்தியது .

ஜார்ஜ் சொன்ன அந்த குற்றச்சாட்டு

"இந்த ஸ்ரீவித்யாவை முதல்முதலாக நான் பார்த்தது எங்கே எப்படி தெரியுமா ?

மலையாள நடிகர் மது வின் படுக்கை அறையில் அவருடன் முழு போதையில்!"


Oct 14, 2008

Carnal thoughts-9

நடிகை ஜெயந்தி பெக்கட்டி சிவராமின் இரண்டாவது மனைவி . இவர் கன்னட டைரெக்டர் . பெக்கட்டி சிவராம் முதல் மனைவியின் மகள் இப்போதைய நடிகர் பிரசாந்தின் தாயார் .நடிகர் திர்யாகரஜனின் மனைவி .
நடிகை ஜெயந்தி இருவர் உள்ளம் ' பறவைகள் பலவிதம் ' பாடல் காட்சியிலேயே வருவார் . பின்னர் தமிழில் நீர்க்குமிழி ,பாமா விஜயம் , எதிர் நீச்சல் போன்ற படங்களில் நாகேஷின் ஜோடி . இருகோடுகள் , கண்ணா நலமா ,புன்னகை போன்ற படங்களில் ஜெமினி யின் ஜோடி . இந்த படங்கள் கே பாலச்சந்தர் இயக்கியவை என்பதை சொல்ல தேவையில்லை .
அந்த ஸ்டூடியோ வில்
மேக்கப் அறையில் தனியே இருக்கும் ஜெயந்தியிடம் டி .எஸ் . பாலையா வருகிறார் .
"உன் மீது எனக்கு வெறியாய் இருக்கிறது . உடனே என் கூட வா ."
ஜெயந்தி மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு தப்பியோடி போய் அதே ஸ்டூடியோ வில் வேறு தளத்தில் இருக்கும் பெக்கட்டி சிவராமிடம் ஓடிபோய் சொல்கிறார் .
டி எஸ் பாலையாவை இவரால் என்ன கேட்க முடியும் . ஜெயந்தியை சமாதான படுத்துகிறார்!
....
ஜெயந்திக்கும் பெக்கட்டி சிவராமுக்கும் மணமுறிவு பின்னால் ஏற்பட்ட போது
ஜெயந்தி தன் வயதில் பாதி வயதேயான இருபத்திநாலு வயது இளைஞருடன் உறவு கொண்டிருந்தார் .

முதல் மேக்கப்


பிரசாத் கலர் லேப் ல் ஷூட்டிங் . டிரைவ் இன் ஹோட்டல் போல செட். சினிமாவில் எனக்கு முதல் மேக்கப்.
சி ஐ டி சகுந்தலாவின் அண்ணன் தனகோடி மேக்கப் மேன் .என்னிடம் தட்சனை (சம்பிரதாயம் )வாங்கி விட்டு மேக்கப் செய்ய ஆரம்பிக்கிறார். பேன் கேக் எடுத்து முகத்தில் பூசி விடுகிறார். தொடர்ந்து ராமாச்சாரி மேக்கப் முடித்துவிடுகிறார்.

இந்த ராமாச்சாரி ஊமை பட காலத்தில் இருந்து மேக்கப் மேன்.
சிவாஜி கணேசனின் பால்ய நண்பர். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இவரும் சிவாஜியும் சேர்ந்து ' தாஜ் ' என்ற இந்தி படத்தை நூறு தடவை பார்த்திருக்கிறார்கள். ராமாச்சாரி மகன் இறந்த போது துக்கம் விசாரிக்க வந்த சிவாஜி இவரை கட்டிபிடித்து கண்ணீர் விட்டார்.


ராமாச்சாரி தன் இரு கன்னத்திலும் இரு கைகளையும் வைத்து விட்டு மலைப்பாக சொல்கிறார்.
"என் அறுபது வருட அனுபவத்தில் மேக்கப் ஒரு முகத்தில் இவ்வளவு அழகாக,நேர்த்தியாக செட் ஆகி நான் பார்த்ததே இல்லை.இப்போது தான் பார்க்கிறேன்."
தனகோடி யும் பார்த்து விட்டு "ஆமாண்ணே !" என அதிசயப்படுகிறார்.
நான் காட்சி பொருள் ஆகிறேன்.

இயக்குனர், கதாநாயகி எல்லோரும் கவனித்து என்னை பாராட்டுகிறார்கள் .
ஷூட்டிங் வந்திருந்த துணை நடிகைகள் அனைவரும் என்னிடம் கூட்டமாக வருகிறார்கள்.
"நீங்க ஏன் அசிஸ்டன்ட் டைரெக்டர் வேலை செய்கிறீர்கள் சார். ஆக்டிங் சான்ஸ் ட்ரை பண்ணுங்க சார். ஹீரோ மாதிரி இருக்கிறீங்க. சொன்னா கேளுங்க. சீரியஸ் ஆ ட்ரை பண்ணுங்க "
தினத்தந்தி நிருபர் அதி வீர ராம பாண்டியன் அந்த பட இயக்குனரிடம் " சார் உங்க அசிஸ்டன்ட் டைரெக்டர் ஹீரோ மாதிரி இருக்கார் சார் "
இயக்குனர் " ஆமா என் அடுத்த படத்திலே நிஜமாவே இவன் தான் ஹீரோ. போதும் இப்போ உள்ள ஹீரோக்கள் தொல்லை சகிக்கலே "
...............

Oct 13, 2008

வித்வத் வேறு பிராபல்யம் வேறு

முதல் முதலாக 'அழைத்தால் வருவேன் 'படத்திற்காக வெளிப்புற படபிடிப்புக்காக பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் . நாங்கள் டெக்னிசியன்கள் ஒரு நாற்பது பேர் ரயிலில் . நான் உதவி இயக்குனர் . திரையுலகில் என் முதல் பயணம் . ஒரு மூன்று பேர் எங்கள் முன் அமர்ந்திருக்கிறார்கள் . எங்களிடம் பேசவே இல்லை. ஏழுமணி நேரம் ஆகும் போது பெங்களூர் கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வந்த போது ஒருவர் எங்களிடம் கேட்கிறார் ' நீங்கள் எல்லோரும் சினிமாக்காரர்களா ?'
மற்றவர்களில் ஸ்டில் போடோக்ரபர் ' ஆமாம் ' என்கிறார் . ஒரு அசோசியட் இயக்குனர் ' ஏன் என்ன விசயம் ? ' என்கிறார் . அந்த மூவரில் ஒருவர் ' நான் ஒரு ஜோஷியம் சொல்லட்டுமா
எல்லோரும் ஆர்வமாகி விட்டனர் .
ஹேர் ட்ரெசர் " சொல்லுங்க சொல்லுங்க "
அவர் சொல்கிறார் ' நாங்க முசல்மான்கள் . சாயபுமார் . திருவல்லிகேணியிலே மட்டன் கடை வைத்திருக்கிற கசாயு தான் நான் . ஆனாலும் சொல்றேன் .' என்றவர் என்னை சுட்டினார்
' இந்த பையன் சினிமாலே பெரிய ஆளா வருவான்.
பெரிய ஹீரோ நடிகரா வருவான். இன்ஷா அல்லா !'
'எப்படி சொல்றீங்க '
'நான் ஒரு ஏழுமணி நேரமா கவனிச்சேன் . ஏனோ எனக்கு உறுதியாக தோன்றுகிறது '

என்னிடம் பிரியத்துடனும் கனிவுடனும் சொல்கிறார் .
' நீ பெரிய ஆளா வரும்போது இந்த கசாயுவை ஒரு தடவையாவது நினைப்பாய். இன்ஷா அல்லா !'

Rev.Fr விக்டர் S.J.

Trichi St.Joseph’s ல் பள்ளிபடிப்பு. Madurai American Collegeல் கல்லூரி படிப்பு .

படிக்கிற காலத்தில் நான் ரொம்ப பாபுலர் .
Rev.Fr விக்டர் பள்ளியில் என்னிடம் அடிக்கடி கேட்பார் . ' நீ பின்னால் ரொம்ப பிரபலமான ஆளாய் வருவாய் . பிரபலமான மனிதராய் இருக்கும்போது என்னை நினைப்பாயா . எப்போதாவது நினைத்து பார்ப்பாய் .'
பாட்டு , நடிப்பு , வாசிப்பு , எழுத்து என எல்லா துறையிலும் பேர் வாங்கியவன் என்பதால் இப்படி என்னைப்பற்றி நம்பினார் .
Rev.Fr விக்டர் அன்பே உருவானவர் . கோபமே பட மாட்டார் .பல நல்ல நூல்களை எனக்கு படிக்க கொடுத்தவர் . ஜெயகாந்தனின் 'உன்னை போல் ஒருவன் ' படம் லாலி ஹாலில் திரையிட்டார்கள் . அந்த படம் நானும் பார்க்க ஆசைப்பட்ட போது ' வேண்டாம்டா .உனக்கு இந்த வயதில் அந்த படம் புரியாது .நீ இப்போது சிறுவன் . கல்லூரியில் படிக்கும்போது கட்டாயம் நீ பார்க்கலாம் ' என்றவர் .

பின்னால் இவர் பாளையங்கோட்டை St.Xavier’s Collegeக்கு Rector. இப்போது சென்னை லயோலா கல்லூரியில் இருக்கிறார் .

Father! நான் பிரபலமாவேன் என்ற நம்பிக்கை இன்று பொய்யாகி விட்டது .
கொஞ்சம் கூட நான் பிரபலம் ஆகவில்லை . அந்தஸ்து , கெளரவம் , வாழ்க்கை வசதி எதுவும் இல்லை .

நான் உங்களை ஏமாற்றி விட்டேன் பார்த்தீர்களா !
My life is entirely different now from what You would have liked it to be.

ஆனால் உங்களை எப்போதும் வணக்கத்துடன் நினைத்து கொண்டே இருக்கிறேன் !

இந்த வஞ்சக உலகத்தின் கோர முகங்களை கண்டு மிரண்டு தவித்து போன எனக்கு உங்களை போன்ற புனிதரை நினைப்பது தான் ஒரே ஆறுதல் .

தலைமையாசிரியர் மறைந்த Rev Fr மச்சாடோ ,
Rev Fr தம்புராஜ் , ( லோயோலா காலேஜ் இல் முன்னாள் ரெக்டர் )
மறைந்த Rev Fr கஷ்மீர் ஞானதிக்கம் ( அப்போது திருச்சி ஜோசெப்ஸ் ரெக்டர் , பின்னால் ஆர்ச் பிஷப் )
Rev Fr கேப்ரியல் லாரன்ஸ், Rev Fr லூயிஸ்
ஆகியோரையும் உங்கள் சேசு சபையை விட்டு வெளியேறிவிட்ட சாமிதுரை , அருள் இருதயம் , ஜேசுராஜா ஆகியோரையும் வணக்கத்துடன் நினைவு கூர்கிறேன் .

Oct 12, 2008

மனைவி அமைவதெல்லாம்

ஷேக்ஸ்பியர் மனைவி ஆன்னி ஹாத்தவே அவரை விட எட்டு வயது மூத்தவர் .
டாக்டர் சாமுவேல் ஜான்சன் திருமணம் செய்த பெண் எலிசபெத் டெட்டி போர்ட்டர். இவர் ஜான்சனை விட 21 வயது மூத்தவர் .
டெண்டுல்கர் தன்னை விட ஆறு வயதுமூத்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டார் .இம்ரான்கான் இப்போது விவாகரத்து செய்த பெண் ( அல்லது அந்த பெண் விவாக ரத்து செய்தாரா ?) அவரைவிட 25வயதிற்கு இளையவர் .
அந்த காலத்தில் ஹிந்தி நடிகர் திலிப் குமார் 44 வயதில் 22 வயது சாய்ரா பானு என்ற நடிகையை திருமணம் செய்தார் . தன் வயதை இரண்டால் வகுத்து பெண்ணை மணந்து கொண்டார் . இன்னும் அவரோடு தான் வாழ்கிறார் .

என்னுடைய சிநேகிதி சங்கரி லக்ஷ்மி பிரமாதமாக பரத நாட்டியம் ஆடுபவர் .அருமையாக பாடுவார் . தன்னை விட ஆறு வயது இளையவரை திருமணம் செய்தார் . இப்போது லண்டனில் இருக்கிறார் .என் இரண்டாவதுமகன் அஷ்வத் தான் கல்யாணத்தில் மாப்பிள்ளை தோழன்!

சரி சரி இப்ப என்ன ?

எங்க தாத்தாவை விட ஆச்சி ( அப்பத்தா) 35 வயது இளையவராம் . முதல் மனைவி இறந்து போனதால் இரண்டாவது திருமணம் . 45 வருட தாம்பத்யம் . ஐந்து பிள்ளைகள் பெற்றார்கள். தாத்தா இறக்கும்போது அவருக்கு 101 வயது ! ஆச்சி அடுத்த நான்காவது வருடம் இறந்து போய் விட்டார் .
இதை எண்ணி வியந்தேன் . சிந்தனை பலவாறு ஓடிவிட்டது !

Repentance! Transformation!!

தசரா பண்டிகை .

ஜார்கண்ட் மாநிலம் . சிபு சோரன் அவர்களை ராவணனை எரிப்பதற்கு அழைத்திருக்கிறார்கள் .

சென்ற பலமுறை இந்நிகழ்ச்சியில் குதுகலமாக கலந்துகொண்டு ராவணனை எரித்திருக்கிறார் .

இந்த முறை சிபு சோரன் மறுத்துவிட்டாராம் . ஏன் ?

" ராவணன் நம் குல குரு. கற்றறிந்த ஞானி . அவரை எரிக்க நான் வர மாட்டேன் ."

மத்ய பிரேதேசம் -

ராவணனுக்கு பதிலாக பின் லாடன் உருவத்தை எரிக்கிறார்களாம் .

Carnal thoughts - 8

சினிமாவில் சில டான்ஸ் மாஸ்டர்கள் பெண் தன்மையுடன் இருப்பார்கள்.அதே நேரம் பெண் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா ஆண் தன்மையுடன் இருப்பார். நடை விறைப்பாய் ஆண் போல. பேச்சில் சகஜமாக முரட்டு தனம் வெளிப்படும்.
கமல் ஹாசனை மருமகனே என்பார். அவர் அத்தை என்பார்.
இரவு குடித்துவிட்டு , விபத்தில் இறந்து போன தன் ஒரே மகனை நினைத்து அழுவார்.
பாடல் காட்சி படம் பிடிக்கும்போது அந்த இடம் புலியூர் சரோஜாவால் கலகலப்பாக இருக்கும்.
அதிகாலை ஒரு நாள் ஷூட்டிங் கிளம்ப காரில் ஏறுகிறார் மேட்டூரில்.
கூட அவர் டான்ஸ் அசிஸ்டன்ட். இவன் கார் கதவை சாத்துகிறான். டிரைவர் கார் பாக்டோர்சரியாக சாத்தவில்லை என்கிறார். இவன் மீண்டும் சாத்துகிறான். டிரைவர் இப்போதும் கதவு சரியாக சாத்தப்படவில்லை என்கிறார்.
புலியூர் சரோஜா தன் அசிஸ்டன்ட்டிடம்  சொல்கிறார்.
"வண்டியில் ஏறும்போதும் குண்டியில் ஏறும்போதும் அழுத்தி சாத்தனும்டா... "

Oct 11, 2008

கவிஞர் கம்ப தாசன்

கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரை என்று தங்களைப்பற்றி அடையாளப்படுத்தி கொள்பவர்கள் உண்டு .
தி.ஜானகிராமன் , எம்.வி. வெங்கட்ராம் , கரிச்சான் குஞ்சு ,சுவாமினாத ஆத்ரேயன் , கவிஞர் கம்பதாசன் போன்றவர்கள் .

கவிஞர் கம்ப தாசன் . அழகானவர் . ரோமன் முக அமைப்பு கொண்டவர் .
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜி கணேசனுக்கு சந்திர பாபு ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார் . " Jolly life! Jolly Life!! தாலி கட்டினால் Jolly life! " என்ற அந்த பாடலை எழுதியவர் இந்த கம்ப தாசன் !
'மல்லிகா ' படத்தில் " வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே , ஏனோ அவசரமே , என்னை அழைக்கும் வானுலகே " என்ற பாடலையும் கம்ப தாசன் தான் எழுதினார் .
பல டப்பிங் படங்களுக்கு பாடல்கள் எழுதினார் .

சோற்றில் ரசம் ஊற்றுவதற்கு பதிலாக பிராந்தியை ஊற்றி சாப்பிடும் அளவுக்கு போதை மன்னன் . பாரதிமணி யின் மாமனார் க.நா .சு இதை நேரில் பார்த்திருக்கிறார் .

பல நல்ல கலைஞர்கள் போல இவர் வாழ்க்கையும் வறுமை துயரில் முடிந்தது .
கம்ப தாசன் பற்றி சிலோன் விஜயேந்திரன் (இவர் இப்போது மறைந்து விட்டார் )ஒரு நூல் எழுதி வெளிவந்தது .

புரடக்சன் அசிஸ்டன்ட்ஸ்

சினிமாவில் இந்த புரடக்சன் அசிஸ்டன்ட்ஸ் நிலை பற்றி சொல்லவேண்டும் . ஷூட்டிங் சமயங்களில் ,டப்பிங், எடிட்டிங் என்று எல்லா முக்கிய கட்டங்களிலும் படக்குழுவினருக்கு இவர்கள் தான் பெட் காபி துவங்கி இரவு உணவு வரை கொடுப்பவர்கள் .
இரவு எல்லோருக்கும் பின் உறங்கி அதி காலை மூன்று மணிக்கு எழுந்து வேலையை ஆரம்பிப்பவர்கள் .
கதா நாயகி சோழா ஸ்டார் ஓட்டல் பட்டர் சிக்கன் கேட்டால் ஒரு தடவை சோழா போய் பத்து சோழா கவர் வாங்கி அடுத்த ஒன்பது முறை வேலு மெஸ்ஸில் கோழி பார்சல் வாங்கி சோழா கவரில் போட்டு கொடுத்து விடுவார்கள் .
சினிமா கிசுகிசுக்கள் இவர்களுக்கு அத்துப்படி .
உழைக்கிற நேரத்தில் முழு போதையில் இவர்களில் பலர் இருப்பார்கள் . உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் பழக்கங்கள் நிறைய இவர்களிடம் உண்டு
இருபது வயதில் ஆரம்பிக்கும் இவர்கள் புரடக்சன் அசிஸ்டன்ட் வாழ்க்கை முப்பத்தைந்து வயதிற்குள் முடியும் . கிழவனாகி விடுவார்கள் . அந்த அளவுக்கு ஆன பின் இவர்களை

படக்கம்பனிகள் ஒதுக்கி விடுவார்கள் . எதிர்காலம் கேள்விக்குறி ?

மன உளைச்சல் கடைசி ஐந்து வருடங்களில் அதிகமாகி புரடக்சன் அசிஸ்டன்ட்ஸ் புலம்பி தவிப்பார்கள் .

பேசும்போது பல அபூர்வ தகவல்கள் இவர்களிடம் இருந்து கிடைக்கும் .

ஒரு புரடக்சன் அசிஸ்டன்ட் என்னிடம் சொன்ன ஒரு தகவல்

"கம்ப தாசன் எனக்கு ஒரு ரூபா கடன் தர வேண்டும் . அவர் மகள் இப்போ ஒரு டான்ஸ் மாஸ்டர் கிட்ட டான்ஸ் அசிஸ்டன்ட் ."

Carnal thoughts – 7

இன்றைக்கு முப்பத்தைந்து வருடம் முன் நடந்த சம்பவம் .
அந்த படத்திற்கு ஐந்து தயாரிப்பாளர்கள் . தயாரிப்பாளர்கள் என்றால் பூர்ஷ்வா வர்க்கம் என நினைக்க கூடாது . பெரிய கம்பனி முதலாளிகளை தவிர மற்றபடி தயாரிப்பாளர்கள் பரிதாபமானவர்கள் தான் . அதிலும் ஐந்து தயாரிப்பாளர்கள் நிலை கேட்கவே வேண்டாம் .
ரொம்ப சிரமப்பட்டு படம் ஷூட்டிங் ,எடிட்டிங் வேலைகள் நடந்த படம் . ஒரு செட்யுல் முடிந்து அடுத்த செட்யுல் ஷூட்டிங் ஆரம்பித்த போது தொழிலாளர்களுக்கு டெக்னிசியன் களுக்கு 'பேய்மென்ட் ' பாக்கி . சினிமாவில் எப்போதும் கதாநாயகன் , கதாநாயகி , இயக்குனர் போன்ற மேல் மூடிகளை தவிர மற்றவர் பாடு பண விஷயத்தில் திண்டாட்டம் தான் .. மேல்மூடிகள் பணத்தை கறந்து விட்டு படபிடிப்பு தளம் வருவார்கள் .
டெக்னிசியன் சம்பள பாக்கி காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் டெக்னிசியன் களுக்கும் வாய்த்தகராறு முற்றிவிட்டது .
தயாரிப்பாளர்களில் ஒருவர் ' இதான் , இவனுங்க தொல்லை பிடிச்சவனுங்க . ஜோலி பார்க்க புண்டை இல்லேன்னு புலம்புவானுங்க . புண்டைய கொடுத்தா புண்டை பூரா மசுரா இருக்குன்னு சலிப்பானுங்க " என்று கத்தினார் .
உடனே ,உடனே ஒரு டெக்னிசியன் " நீ ஏன் புண்டைய காட்டுறே , உன் வாய காட்டு " என பாய்ந்தார் .
ஒரு வழியாக சமாதானமாகி ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது இந்த கனல் தெறிக்கும் வசனங்கள் நடிகர் முத்துராமனிடம் தயாரிப்பாளர்களில் ஒருவர் சொல்லிவிட்டார் . நடிகர் முத்துராமன் தன் வெடிசிரிப்பை ஆரம்பித்தார் . சிரிப்பை அவரால் அடக்க முடியவில்லை . ஷூட்டிங் வந்த நடிகை கே .ஆர் .விஜயாவிடம் இந்த ஜோக் நடிகர் முத்துராமன் அவர்களால் சொல்லப்பட்டது . நடிகைக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் .

அன்று முதல் இரவு காட்சி பாலை வெட்கப்பட்டு கொண்டே கே .ஆர் விஜயா கதாநாயகன் முத்துராமனிடம் தருவதை படம் பிடிக்க வேண்டும் . கேமரா ஓட துவங்கி நடிகை பாலை முத்து ராமனிடம் கொடுக்கும்போது இந்த டெக்னிசியன் கோப வசனம் ஞாபகம் வந்து பர்ர்ர்ர்ர்ர்ர் என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார் .முத்து ராமனும் தன் பிரத்யேக வெடி சிரிப்பை வெளிப்படுத்தினார் . கட் சொல்லிவிட்டு மீண்டும் இயக்குனர் அடுத்த டேக் போனால் சரியாக வெட்கப்பட வேண்டிய நேரத்தில் கே . ஆர் . விஜயா சிரித்து சொதப்பி விட்டார் . இப்படி பல டேக் ஆகியிருக்கிறது .
இயக்குனர் எரிச்சலாகி முத்துராமனிடம் " யோவ் முதலியாரே ( முத்து ராமனுக்கு பட்ட பெயர் முதலியார் . எம்ஜியாருக்கு " சின்னவர் " என்பது போல .ஒரு நாடகத்தில் முதலியாராக நடித்ததிலிருந்து முத்துராமனுக்கு முதலியார் என்ற பட்ட பெயர் .) என்னையா . பொம்பளை கிட்ட போய் இதைஎல்ல்லாம் சொல்லலாமா .விவஸ்தை கெட்ட ஆளுய்யா நீ . இப்ப பாரு ஷூட்டிங் பண்ண முடியலே " என்று கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் .
ஒரு வழியாக அன்று இந்த ஒரு காட்சியை படம் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .
பெண்கள் சாதாரண ஜோக் கேட்டாலே விழுந்து விழுந்து சிரிப்பார்கள் . இப்படி செக்சி சமாச்சாரங்களுக்கு கேட்கவே வேண்டாம் .

Oct 10, 2008

பெங்களூர் இரவிச்சந்திரன்

பிரதாப் போத்தன் நடிக்க வந்த புதிதில் குமுதம் அரசு கேள்வி பதில்

கேள்வி :பிரதாப் போத்தன் ?

அரசு பதில் : பத்து கமல் ஹாசனுக்கு சமம் .


கமல் ஹாசன் அப்போது எப்படி புண் பட்டிருப்பார் .

இது போல தான் இந்த எழுத்தாளர் பற்றியும் -
பெங்களூர் இரவிச்சந்திரன் !
சிலர் அப்போது சொன்னார்கள் . சுஜாதாவையே இவர் மிஞ்சி விடுவார் .
நம்புங்கள் .
என்னிடமே ஒருவர் இப்படி சொன்னார் . சுஜாதாவை இமிடேட் செய்த எழுத்தை பற்றி !! ' இவருடைய எழுத்து நடை சுஜாதாவை விட விறுவிறுப்பானது'



அந்த அளவுக்கு இவரது எழுத்து நடை ! விறுவிறுப்பு மிக்க எழுத்து !

சுஜாதாவின் நண்பர் என அறியப்பட்டார் . அவருடைய 'இந்திய பாஸ்போர்ட் ' சிறுகதை தொகுப்பை "இந்த புத்தகம் மட்டுமல்ல .இனி நான் எழுதி எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அத்தனையும் சுஜாதாவுக்கே சமர்ப்பணம் " என்று எழுதி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவர். சுஜாதா தான்
அதற்கு முன்னுரை . ரொம்ப சுவாரசியமான எழுத்து .
" பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள் . தன்னுடைய காதலன் யார் என்பதை தன் கணவனிடம் கூட சொல்ல மாட்டார்கள் ."

சுஜாதா தன் நண்பர் என இரவிச்சந்திரனை பெருமையுடன் எழுத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் .
இரவிச்ச்சந்திரன் தன்னை " கவிஞர் புவியரசின் மாணவர் "என பெருமையுடன் குறிப்பிட்டு கொள்வார் .
அடுத்து "சிந்துவெளி நாகரீகம்" என சிறுகதை தொகுப்பு . அடுத்து" இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் " சிறுகதை தொகுப்பை பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு சமர்ப்பணம் செய்து விட்டார் . அப்புறம் ' இனி ஒரு சதி செய்வோம் ' என ஒரு தொகுப்பு .
இவர் கையெழுத்து மிக அழகாக இருக்கும் .
சுஜாதா இவரால் ரொம்ப பட்ட பிறகு ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டார்
" என்னுடைய அனுபவத்தில் கையெழுத்து அழகாய் உள்ள அயோக்கியனை பார்த்திருக்கிறேன்"
பண மோசடி இவரது பலவீனம் . ஏமாற்றி யாரிடமும் பெரும் தொகையை பறித்து விடுவார் .
இவருடைய இந்திய பாஸ்போர்ட் , சுயம்வரம் , பார்சல் போன்ற கதைகள் அதிசயிக்க தக்க தரமானவை .

ஒரு கட்டத்தில் இவரை எல்லோரும் புரிந்து கொண்டார்கள் .எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் .
என்ன ஆனார் என யாருக்கும் தெரியவில்லை .
சுஜாதா பலரிடமும் இவர் என்ன ஆனார் தெரியுமா என விசாரித்துகொண்டிருந்தார் .
இவரை அறிந்த எல்லோருமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விசாரித்துகொன்டார்கள் .
"இரவிச்சந்திரனை பற்றி ஏதாவது தெரியுமா ?" " எங்கே இருக்கிறார் தெரியுமா "

பதிலே கிடைக்கவில்லை .


இப்போது சுரேஷ் கண்ணன் இவரை பற்றி "தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டதாக இங்கே முந்திய பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார் .




ரவிச்சந்திரன்

திருச்சி பீமநகர் ராஜா காலனி வீடு .நான் குடியிருந்த போது ( இந்த வீடு தான் சிலவருடம் கழித்து கார்கில் தியாகி மேஜர் சரவணன் குடும்பம் குடியேறி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து பின்னால் அவர் மேஜர் ஆகி உயிர் துறந்த போது பிரபலமானது ) எதிரே கணபதி புரத்தின் பின் பகுதி . அங்கே குடியிருந்த மாமிக்கு என் ஒரு வயது மகன் கீர்த்தியின் மீது மிகவும் பிரியம் . எந்நேரமும் குழந்தை அவர் வீட்டில் தான் . குழந்தை கீர்த்தியை அவர் சீராட்டினார் . அப்போது அங்கே உள்ளவர்கள் சொல்வார்கள் . சென்ற வருடம் வரை அந்த மாமி அந்த தெருவில் குடியிருந்த நடிகர் ரவிச்சந்திரன் ( காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்தான் ) அவர்களின் இரண்டாவது மகன் ஹம்சவர்த்தனை தான் கொஞ்சி சீராட்டிகொண்டிருந்தார் . ரவிச்சந்திரன் குடும்பம் எதிரே யானை கட்டி மைதானம் தெருவில் குடி புகுந்தது . அதன் பின் அந்த மாமிக்கு சீராட்டி பாராட்ட கிடைத்த குழந்தை தான் கீர்த்தி . மாமியும் 'எப்படியோ ரவிச்சந்திரன் குடும்பம் எதிர் தெரு போன பின் குழந்தை ஹம்சவர்தன் போய்விட்டானே என தவித்து போய் இருந்த போது ராஜநாயஹம் மகன் கீர்த்தி வந்து கவலையை தீர்த்து விட்டான் 'என சொல்வார்கள் .
பீம நகரில் கிருஷ்ணன் கோவிலுக்கு போனால் 'இப்போ தான் ரவிச்சந்திரன் வந்து பகவானை சேவிச்சிட்டு போறார் .' என அய்யர் சொல்வார் . மெயின் கார்ட் கெட் போனால் பர்மா பஜாரில்' இப்போ தான் நடிகர் ரவிச்சந்திரன் வந்துட்டு போனார் 'என்பார்கள் . நான் பார்த்ததில்லை .
ஆனால் நான் சிறுவனாய் இருக்கும்போது( 14 வயது )கரூரில் ஒரு நாடகமொன்றிற்கு தலைமை தாங்கினார் நடிகர் ரவிச்சந்திரன் . சரியான கூட்டம் . அந்த நாடகம் பார்க்க ரவிச்சந்திரன் உட்கார்ந்த போது அவருக்கு பக்கத்தில் நான் தான் உட்கார்ந்தேன் .உட்கார வைக்கப்பட்டேன் .ஒரு இரண்டு மணி நேரம் அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தும் நடிகர் ரவிச்சந்திரன் என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை . ' 'என்ன தம்பி , என்ன படிக்கிறே , உன் பேர் என்ன '-இப்படி கேட்பார் என சிறுவனாய் இருந்த நான் ரொம்ப ஏங்கினேன் . ஆனால் ரவிச்சந்திரன் நிறைய சிகரெட் பிடித்துகொண்டே இருந்தார் .என்னிடம் பேசவே இல்லை .

Oct 9, 2008

வில்லன் -தமிழ் திரை

தமிழ் திரை நகைச்சுவை நடிகர்களை உலக தரத்துடன் கண்டது . ஆனால் வில்லன் நடிகர்கள் பற்றி அப்படி சொல்வதற்கில்லை .

காமடி ,வில்லன் நடிப்பு இரண்டிலும் கலக்கு கலக்கு என்று கலக்கிய எம் .ஆர் .ராதா , டி.எஸ் .பாலையா இவர்களை வில்லன் நடிகர் லிஸ்டில் சேர்க்க முடியாது.

ஆனால் ஐம்பதுகளில் வந்த பிற வில்லன்கள்

பி .எஸ் . வீரப்பா சரித்திர படங்களுக்கு பொருத்தமானவர் . நிஜமாகவே அப்படி படங்களில் அவர் பக்கத்தில் யாரும் நிற்க முடியாது .வஞ்சிகோட்டை வாலிபன் , மஹாதேவி , நாடோடி மன்னன் ஆகிய படங்கள் நல்ல உதாரணங்கள் .ஆனால் சமூக படங்களுக்கு சற்றும் பொருந்த மாட்டார் .

நம்பியார் நாற்பதுகளில் காமெடியன் , ஐம்பதுகளிலிருந்து வில்லன் .

மனோகர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து வில்லன் ஆனவர் .

சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின் வில்லனாக நடிக்கும் போதே கதாநாயகனாகவும் நடித்து கடைசியில் கோமாளி யானவர் அசோகன் .

நம்பியார் ,அசோகன் , மனோகர் மூவருமே ரொம்ப stereo டைப் . கொஞ்சமும் நடிப்பு பாணி மாறியதே கிடையாது .

அசோகன் மிகையான பாவ்லா நடிப்பு தான் . காட்டு கத்தல் . கதாநாயகனாக பார்க்க சகிக்காது . குணச்சித்ர நடிப்பில் அசத்தியதாக பலரும் அபிப்பராயபடுவார்கள் ."உயர்ந்த மனிதன்" படம் இப்போது பார்த்தால் அவர் நடிப்பு சிரிப்பை உண்டாக்குகிறது . ஆனால் பாவ்லா வேலை செய்து பெரிதாய் நடிப்பது போல மிரட்டுவார் . பல நல்ல டி .எம்.எஸ் பாடல்கள் இவருக்கு அமைந்தது .ஒரே பாணி யில் நடித்தவர் ." நான்" பட வில்லன் ரோல் தான் பின்னால் இவர் காமெடி பண்ண உதவியது . இரவும் பகலும் படத்தில் சொந்த குரலில் பாடிய" ஏறந்தவனை சுமந்தவனும் எறந்துட்டான் " ஏகாந்தமான சூழலில் கேட்டால் மனதை தொடும் தத்துவபாடல் .

நாடக காவலர் ஆர் .எஸ் . மனோகர் பாவம் தோள்களை குலுக்கிக்கொண்டு வசனம் ஒரே பாணியில் பேசிக்கொண்டு வாழ்நாளை ஓட்டியவர் . ஒ .ஏ .கே . தேவர் கணீரென்ற குரல் .ஆனால் ஜெய் சங்கர் பட வில்லன் ரோல் தான் பெரும்பாலும் . சரித்திர படங்களிலும் பெரிய சாதனை செய்ய முடியாதவர் .எஸ்.வி ராம தாஸ் இரண்டாம் தர கற்பழிப்பு நடிகர்.

பின்னால் வந்த ஸ்ரீகாந்த் பாவம் அவரும் பெரிய வில்லன் கிடையாது .

எம் .ஆர் ராதா தான் தனி பாணியில் வெளுத்து வாங்கியவர் . இவரிடம் ஒரு வக்கிரம் sadismஅது வேறெந்த வில்லனிடமும் அந்த காலத்தில் கிடையாது .

அதனால் தான்இப்போதும் காலத்தை வென்ற கலைஞன் .

தமிழில் எம்.ஆர் .ராதாவுக்கு பின் வந்த உண்மையான வில்லன் சத்யராஜ் .ராதாவிடம் இருந்த வக்கிரம் இவரிடம் மட்டுமே இயல்பாய் அமைந்தது.

நாசர் ஒரு நல்ல வில்லன் தான் . வில்லன் மட்டுமல்ல .நல்ல நடிகர் .

அப்புறம் , ரகுவரன் பிரகாஷ் ராஜ் நல்ல பிரமாதமான வில்லன்கள் .

ரகுவரன் ,பிரகாஷ்ராஜ் போல நம்பியாரோ , அசோகனோ , மனோகரோ திறமை காட்டி நடித்ததே இல்லை .

ரகுவரன் , பிரகாஷ் ராஜ் இருவரும் நல்ல குணசித்திர நடிகர்கள் கூட .

ரகுவரன் பற்றி இன்னும் இரண்டு வார்த்தை .

தமிழ் திரையை பொறுத்தவரை கமல் ஹாசன் , ரகுவரன் நடிப்பில் ஜீனியஸ் வகையை சேர்ந்தவர்கள்.

ரகுவரன் - எம் ஆர் ராதா , எஸ் .வி ரங்கா ராவ் போல Scene stealer!

இந்த வகையிலும் நம்பியார் ,அசோகன் ,மனோகர் அடிபட்டு போகிறார்கள்.

ரகுவரன் , பிரகாஷ் ராஜ் இருவருக்கும் உரை போட காண மாட்டார்கள் இந்த மூன்று அந்த கால வில்லன்களும் .

ராதா பாணியை காமெடியில் விவேக் முயன்று பார்த்து வெற்றி பெற்று விட்டார் .

மணிவண்ணன் கூட ராதா பாணி காமெடி தான் .

ரொம்ப நாளைக்கு பிறகு காமெடி தமிழில் சரியாக இப்போது சில வருடம் முன் அமைந்தது .

வடிவேலு - விவேக் கடந்த பத்து வருடமாக காமெடி வெடி வெடித்ததில் காணாமல் போன சிரிப்பு நடிகர் யார் தெரியுமா .

வடிவேலு விவேக் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போய் விட்ட காமெடியன்

ஜனக ராஜ் !

வில்லனுக்கும் காமெடிக்கும் என்றுமே உதாரண புருஷர்

எம்.ஆர் .ராதா !