குழந்தைகள் பார்க்கும்படியாக சாப்பிடுவது ஒரு வகையான அநீதி .பஸ்ஸில் ,ரயிலில் குழந்தைகள் பார்க்கும்போது சில பெரியவர்கள் விவஸ்தையில்லாமல் ருசியான பலகாரங்கள் சாப்பிடுவார்கள் .
ஆனால் ஒன்று.இந்த காலத்தில் ரயிலில் இப்படி பிஸ்கட் , பழங்கள் , சாக்லெட் மற்றவர்களுக்கு நாம் கொடுத்தால் கூட நம்மை சந்தேக கண் கொண்டு பார்த்துவிடுவார்கள் . மயக்க மருந்து தடவி கொடுக்கும் கொள்ளைக்காரனோ என பயப்படுவார்கள். காலம் கெட்டுப்போச்சி !
வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு சாப்பிடகொடுப்பதை அவர்களிடம் கேட்கக்கூடாது என்று குழந்தைகளை பெற்றவர்கள் மிரட்டி வைப்பார்கள் .
முத்துலிங்கத்தின் சிறுகதை
" முதல் விருந்து , முதல் பூகம்பம் , முதல் மனைவி "
அதில் அவர் இந்த நிகழ்வை விவரிக்கிற அழகு .
" பெரியய்யா கோழியையும் , அது இட உத்தேசித்திருந்த முட்டைகளையும் ருசித்து சாப்பிட்டார் . நாங்கள் ஏழு பேர் அவரைச்சுற்றி வர நின்றோம் . அவருடைய உணவில் யாரும் பங்கு கேட்க கூடாது என்று நாங்கள் அறிவுருத்தப்பட்டிருந்ததால் மறுப்பதற்கு தயாராகவே இருந்தோம். அது அவருக்கு எப்படியோ தெரிந்து விட்டது . அவர் ஒரு வாய் கூட கொடுக்கவில்லை "
யூமா வாசுகியின் 'ரத்த உறவு ' நாவலிலும் இது போல குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு, அவர்கள் முன் சாப்பிடும் பெரியவர்கள் உண்டு.
இந்த வருடம் மார்ச் மாத ஆனந்த விகடன் இதழ் ஒன்றில்
" கழுதைவண்டிசிறுவன் " என்று ஒரு சிறுகதை அமுத்துலிங்கம் எழுதியிருந்தார் . அதை படித்த போது நெஞ்சே உறைந்து விட்டது .
" கழுதைவண்டியை ஒட்டியபடி ஆப்பிரிக்கசிறுவன்.சின்னபையன்.
அவன் கேட்ட பணத்தைக்கொடுத்துப்பாலை வாங்கினேன் .
அடுத்த நாளும் அங்கே தங்குவேணா என்று விசாரித்தான் .
'அப்போ இரண்டு லிட்டர் பால் வாங்கிகொள்ளுங்கள்'
'ஏன் ? '
'நாளைக்கு நான் வர முடியாது .'
'ஏன் ?'
'நாளைக்கு என் அம்மா செத்து விடுவார் .'
'யார் சொன்னது '
'டாக்டர் சொன்னார் '
' அம்மாவை யார் பார்த்துக்கிறது '
' என்னுடைய தங்கச்சி '
அது புத்தாண்டு கொண்டாட்ட நேரம் . அன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டம் !
Happy new year!
Millennium Celebration!
31st Dec 1999 to 1st Jan 2000
..
Millennium Celebration!
31st Dec 1999 to 1st Jan 2000
புத்தாயிரம் கொண்டாட்டம் . 20நூற்றாண்டிலிருந்து 21நூற்றாண்டு . ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது .
.....
என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்ற வாகன ஒட்டி , கடந்த இரவு கடந்த இரவு கழுதை வண்டி சிறுவனின் தாயார் இறந்து போனதைச்சொன்னார் . இப்போது நினைத்து ப்பார்க்கும்போது அந்தத்தாயார் எந்த நூற்றாண்டில் இறந்து போனார் என்பதை நான் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்பது ஞாபகத்திற்கு வருகிறது "
இப்படி முடித்திருக்கிறார் அமுத்துலிங்கம் .
........ ....... ......
New year!
....
Another year ! Another deadly blow!
-Wordsworth
Month follows month with woe,
And year wakes year to sorrow
-Shelley
Considering the legacy the 2008 has left, there is no great reason to feel any cheer
At the beginning of this new year .