புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மறைந்த கி வேங்கட சுப்பிரமணியன் அப்போது என் எதிர் வீட்டுக்காரர் .தி ஜானகிராமன் நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டபோது என்னை அழைத்து பல்கலைக்கழகத்தில் எனக்காக ஒரு தி ஜானகிராமன் கருத்தரங்கம் நடத்த செய்தவர் .
பிரமிள் நூல்களை அவரிடம் பரிசாக தந்தேன் . அவருக்கு ஏதேனும் பல்கலைக்கழகம் மூலம் உதவ முடியுமா என்று கேட்டேன் . நடக்கவில்லை .
ஒரு முறை ஹைதராபாத் நகரில் டி கே சி பற்றி அவர் பேசவேண்டியிருப்பதால் அவர் பற்றிய நூல்களை அவசரமாக கேட்டார் . நான் அவர் காரில் கிளம்பும்போது என்னிடம் உள்ள டி கே சி பற்றிய நூல்களை அவருக்கு கொடுத்தேன் .
அடுத்து என்னை ' பாரதி தாசன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு கட்டுரை எழுதி பேச அழைத்தார் . நான்' பாரதியின் சிஷ்யர்களில் வரா மீதுள்ள வாஞ்சை ,அபிமானம் பாரதி தாசன் மீது எனக்கு கிடையாது ' என்று சொல்லி மறுத்தேன் .அதற்கு கூட என் உணர்வுகளை மதித்து பதில் கடிதம் அனுப்பினார் . பாரதி தாசன் விழா வில் என் எதிர்ப்பு குரலை தைரியமாக பேசினேன் .
ஒரு நாள் இந்திரா பார்த்தசாரதியின் வீட்டிற்கு போய் ' க நா சு வோட 'பித்தப்பூ ' நாவல் வேண்டும் .' என்றாராம் . இந்திரா பார்த்தசாரதி ' உங்கள் எதிர் வீட்டில் ராஜநாயஹம் இருக்கிறார் .கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் நெய்க்கு தவிக்க வேண்டும் . அவரிடம் கேட்டு பாருங்கள் ' என்று சொல்லவும் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய உதவியாளரை என் வீட்டுக்கு அனுப்பினார் . நான் உடனே க நா சு வின் பித்தப்பூ நாவலை வேங்கட சுப்பிரமணியன் அவர்களுக்கு கொடுத்து விட்டேன் .அதை பெற்றுகொண்டவுடன் நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் " அன்பு மிக்க அறிஞர் ராஜநாயஹம் அவர்களுக்கு " என்று என்னை விளித்து நெகிழ்ந்து எழுதியிருந்தார் .
......
புதுவை இலிருந்து திருச்சி வந்த பின்
கையிலிருந்த பணத்தை அப்போது வட்டிக்கு விட்டு விட்டு சும்மா இருக்கக்கூடாதே என்று திருச்சி பெமினா ஸ்டார் ஓட்டலில் ஒரு ஐந்து மாதம் வேலை பார்த்தேன். அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது .ரசித்து வேலை செய்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த ஓட்டல் 'மேல் மட்ட நிர்வாக சூழலின் அபத்தங்கள்' சகிக்க முடியவில்லை .
The Job of a Hotel receptionist is a sweet sorrow.திருச்சி பெமினா ஓட்டலில் நான் வரவேற்பாளர். சார்ட்டில் வேங்கட சுப்பிரமணியன் தங்கியிருப்பதை நான் ஒரு நாள் தெரியவந்தேன்.அப்போது அவர் புதுவையிலிருந்துபதவிக்காலம் முடிந்து சென்னை சென்று விட்டார் . " வேங்கட சுப்பிரமணியன் அறையை காலி செய்துகொண்டு வருகிறார் " என்று ஹோடேலில் ஜெனரல் மேனேஜர் பரபரப்பாக வந்து சொன்னார் . லிப்டில் கீழே இறங்கி வந்த வேங்கட சுப்பிரமணியன் என்னை பார்த்தவுடம் பரவசமாகி விட்டார் .“ Mr. Rao! Rajanayahem is a great literarian for whom I have the greatest regards!!” என்று மேனேஜரிடம் சொன்னார் .“ It’s your great privilage to have my friend Rajanayahem as your receptionist”
மேனேஜர் செயற்கையாக சிரித்தார் .
என்னிடம் கேட்டார் .
How are you ?
How is your wife?
How is your child?
இன்னொரு குழந்தை இரண்டாவதாக பிறந்துள்ள செய்தி அறிந்ததும் எனக்கு ஆறுதலாக This second child will bring you Luck! என்றார் . கை கொடுத்து விட்டு செல்லும்போது என்னை திரும்பி திரும்பி பார்த்துகொண்டே சென்றார் . ஹோட்டல் மேனேஜர் அவருடைய கார் கதவை திறந்து விட்டு அவர் ஏறியதும் டாட்டா காட்டி விட்டு வந்து
எரிச்சலுடன் என் மீது எரிந்து விழுந்தார் .
" யோவ் அந்த சார்ட் எடுய்யா "
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.