மூன்று வருடங்களுக்கு முன் ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளரை ( Supdt of Police)சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது . அவர் தன்னிரக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தார் . பணிஓய்வு அவரை முடக்கியிருந்தது . அவர் ஒரு பிரபலமான வக்கீலிடம் அவருடைய பணியில் உதவியாக இருக்கும்போது நான் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது .
ஓய்வு பெற்ற நிலையில் ஆள் அம்பு சேனை அதிகாரம் இழந்து, அந்த நிலையில் ஒரு டீகடைக்காரன் தன்னை மிகவும் அவமானப்படுத்தி விட்ட நிகழ்வு ஒன்றை விரிவாக என்னிடம் விவரித்தார்.
எனக்கு அப்போது நினைவுக்கு வந்த விஷயம் இது .
பத்து வருடங்களுக்கு முன் அப்போது D.S.P யாயிருந்த இப்போது D.I.G ஆக இருக்கும் ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் பேசும்போது சொன்னார்:
" மாறுதல் உத்தரவு எனக்கு ( Transfer order)வந்து விட்டாலே இந்த ஊர் கான்ஸ்டேபிள் கூட அலட்சியமாகி விடுவான் . ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளை யார் மதிப்பார் . போலீஸ் துறை துவங்கி பொதுமக்கள் வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள் !"
அதிகாரம் என்பது அஷ்டலக்ஷ்மிகளில் கஜலக்ஷ்மியை குறிக்கும் .அதிகாரம் , மக்கள் செல்வாக்கு , சமூக அந்தஸ்து தருபவள் கஜலக்ஷ்மியாம் !!!
சில பெரும் பணக்காரர்கள்-இவர்களை ஊரில் யாருமே மதிக்கமாட்டார்கள் . அவர்களுக்கு கஜலக்ஷ்மி அருள் இல்லை என்று அர்த்தம்!
அரசியல்வாதிகள் பதவியில் இல்லாத போது கஜலக்ஷ்மி அருள் இல்லாத வர்களாகி விடுகிறார்கள் . பதவிக்கு வரும்போது கஜலக்ஷ்மி இவர்களை பின்னி படர்ந்து விடுகிறாள் ! இடுப்புக்கு கீழே எட்டு சுத்து !!
Politicians out of power are the different species from the politicians in power!
அதிகார பதவியில் உள்ள காவல் துறைக்காரர்களுக்கு பணிஓய்வு பெற்றவுடன் கஜலக்ஷ்மி நிரந்தரமாக விடை பெற்று விடுகிறாள் !
எந்த ஒரு உத்தியோக ஓய்வும் சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாக , ஏன் உடல் ரீதியாக கூட மிகவும் பாதித்து விடுகிறது .
பொருளாதார வீழ்ச்சி யடைந்தவர்கள் பாடு கேட்கவே வேண்டாம் .
"வாழ்ந்தவர் கெட்டால் " என்று ஒரு நல்ல நாவல் க நா சு எழுதியிருக்கிறார் .
இந்த"வாழ்ந்தவர் கெட்டால் நாவல் தான் க நா சு நாவல்களில் அசோகமித்திரனுக்கு மிகவும் பிடித்த நாவல் .
எனக்கு கூட "வாழ்ந்தவர் கெட்டால் " நாவல் மிகவும் பிடிக்கும் . கநா சு வின் நடை அப்படி !
ஆனால் க நா சு வின் "பொய்த்தேவு " நாவலும் "ஒரு நாள் " நாவலும் தான் தமிழின் முதல் சாதனை நாவல்கள் !
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.