Share

Dec 2, 2008

கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது .

மாறன் பிள்ளைகள் மீண்டும் இணைந்தது பற்றி.....

அழகிரியும் தயாநிதி மாறனும் பின்னி படர்ந்து விட்டார்கள். இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து.

இனி அழகிரி தும்பிக்கையை தரையில் ஊனி நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா,தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் மரத்திலே வாலை தொங்க போட்டு ஊஞ்சல் ஆடுவாங்கய்யா!

ஜெயலலிதா கட்சியில் மன்னார்குடி அட்டகாசம் என்றால் கருணாநிதி கட்சி குடும்ப படம் . குடும்பம் ஒன்னு சேர்ந்தவுடன் சினிமாலே 'சுபம் 'போட்டுடுவான். Blood is thicker than Water! பாவம் கனிமொழி ! ஓஹோ ! செல்வி இருக்கிற இடம் .கனிமொழி அங்க வரக்கூடாது . பெரிசு சும்மா இல்ல . பிள்ளைங்க ஸ்டாலின் , அழகிரி , பேரன் எல்லோரும் போய் ராஜாத்தியம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும் நு கறாரா சொல்லிட்டாரு . முக முத்து?...


இந்த உட்குடும்ப சண்டையும் சமாதானமும் சுயநல வெறியின் வெளிப்பாடு !

"கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது "

தமிழக முதல்வரின் புதிய Quotation! பேஷ் ! பேஷ் !!

கடந்த முப்பதுக்கு மேற்பட்ட வருடங்களில் இப்படி பலQuotations அடிக்கடி உதிர்த்திருக்கிறார் .
அண்ணா மறைந்த போது ' கடலில் உள்ள முத்தெல்லாம் முத்தல்ல . நான் தானடா முத்து என்று கடற்கரையில் உறங்குதியோ அண்ணா "



" பாவம் அவன் ஒரு இளம் தளிர் " - முக முத்து பற்றி (எம்ஜியார் காரணமாக திமுக உடைந்த போது )

"பார்த்தேன் ,படித்தேன் ,ரசித்தேன் " சர்க்காரியா கமிசன் முன் எம்ஜியார் ,கல்யாணசுந்தரம் கொடுத்த புகார் பற்றி

"தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும்
தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை " கண்ணதாசன் மறைந்த போது.

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கருணாநிதி - " இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல , கண்ணீரில் மிதக்கிறது "

"போய் விட்டாயா மதி ?" தன் உட்கட்சி எதிரி மேதை மதியழகன் மறைந்த போது

எம்ஜியார் இறந்தபோது " செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க முதல் அமைச்சர் . என் நாற்பதாண்டு கால நண்பர்... "

"நெஞ்செல்லாம் தமிழ் மணக்க , நாவெல்லாம் தமிழ் மணக்க ..." நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது

இன்று பேரன்களின் மீது உள்ள பரிவு " கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது "

ஒரு சுவாரசியமான முதல் அமைச்சர் பலமுறை தமிழ்நாடு பெற்றதற்கு நாம் சந்தோசப்படலாம் . இப்படி ஒரு சுவாரசியமான முதல்வர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்குமே கிடைத்ததில்லையே !இந்த முதல் அமைச்சர் இல்லாவிடில் தமிழக வரலாறு வறண்டு உலர்ந்து போயிருக்கும் என்பதில் இரு கருத்து இருக்கவே முடியாது .

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதலில்கொல்லப்பட்டவர்களுக்கும் கூட ஒரு இரங்கல் கவிதை இப்போதாவது எழுதமாட்டாரா என்று அதனால் ஒரு ஏக்கம் உண்டாகிறது.






6 comments:

  1. This guy robbed TN like there is no tomorrow and you are saying he is a intersting CM because he can write/speak well. Wake up and smell the coffee!

    ReplyDelete
  2. கொல்லப்பட்டார்களா? வயது மூப்பின் காரணமாக அவர்கள் இறந்ததாக அல்லவா தலைவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்!!

    ReplyDelete
  3. good one parthi. however, here is how Mu.Ka. responded to the question on that. 'Dharmapuriyil 3 manavikalai erithaarkalae appodhu engae pona?'. We all know Jaya the 'B**ch' is cruel. But we all know it very well. This thug who portrays himself as a "mahaan"/statesman etc, is at last showing his true colors. as they say, you can't cheat everybody all the time

    ReplyDelete
  4. உங்களுடைய சமீபத்திய மறக்க முடியாத quotation -பார்ப்பன சமூகத்தினர் பற்றி-:
    "மென்மையானவர்களும், மேன்மையானவர்களுமான..."

    பதிவுலகிலிருந்து இன்னும் சில:

    தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி சார்பான வாதங்கள் மற்றும் இயக்கங்கள் பார்ப்பனர்களை சாரம்சப்படுத்தியே கட்டமைக்கப்பட்டன, படுகின்றன என்பதை மறுக்க முடியுமா? - என்ற கேள்விக்கு,

    "அடையாளம் (identity) என்பதும் வித்தியாசம்-மாறுபாடு (difference) என்பதும் வரலாற்றில் மாறிமாறிச் செயல்படுபவை, தமிழ்நாட்டிலும் இவை இரண்டும் பலவிதங்களில் மாறிமாறிச் செயல்பட்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்"-நாகார்ஜுனன்.

    "பார்ப்பனர்களும் ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டாலும் அது அதிகாரத்தை நோக்கி நகர்வதாகவே இருந்தது" - ராஜன் குறை.

    என் அன்புக்குரிய ராஜன் குறையின் 'பாதிக்கப்பட்டாலும்' என்பதிலுள்ள உம்மைத் தொகுதியில் தொனிக்கிறது பாருங்கள் அந்த மென்மை.

    ReplyDelete
  5. By this post, you have categorically torn them into pieces...

    you are really amazing...

    thanks

    ReplyDelete
  6. வைகோ-வை ஜெயிலில் சந்தித்தபோது ஒரு வரலாற்றுசிறப்பு மிக்க Quote, அதை பதிய மறந்து விட்டீர்களே.....!!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.