Share

Dec 13, 2008

'ஹிந்துத்வா துரோகி ' ஹேமந்த் கர்கரே

ஹேமந்த் கர்கரே ( Maharashtra ATS Chief) பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கையில் பலியான நாளுக்கு ஒரு வாரம் முன் தான் அவரை தாக்கரே அசோசியேசன் கடுமையாக தாக்கி ' ஹிந்துத்வா துரோகி ' (இந்த பட்டத்தை பெற எல்லோரும் சந்தோசப்படவேண்டும் )என்று அடையாளமிட்டிருந்தது. மும்பை கலவரத்தை எதிர்கொண்டு முதல் களப்பலி ஆகி சிவசேனை கூட்டத்தின் முகத்தில் கரியை பூசிவிட்டார் .

நரேந்திர மோடி ஹேமந்த் கர்கரே வீட்டில் அவர் மனைவி கவிதா கர்கரே யை துஷ்டி விசாரிக்க சந்திக்க வர விரும்பிய போது அதற்கு கவிதா மறுப்பு தெரிவித்தது சிலாகிக்க வேண்டிய விஷயம் .

கணவன் இறந்த பிறகு கவிதா கர்கரே விதவை அடையாளங்களை புறக்கணித்து நின்ற விஷயம் கூட ஹிந்துத்வா சக்திகளை கோபப்படுத்தும் விஷயம் தான் .

பாபர் மசூதி இடிப்பு , குஜராத் முஸ்லீம் படுகொலை கூட இந்த தேசத்திற்கு எதிராக நடந்த பயங்கர வாதம் தான் என்பதை மும்பை கலவரத்தை எண்ணி வருந்தும் ஒவ்வொருவரும் கண நேரமும் மறந்து விடக்கூடாது .

இந்திய நாட்டை பீடித்த புற்றுநோய் தான் பாரதிய ஜனதா , விஷ்வ ஹிந்து பரிஷத் .ஆர்எஸ்எஸ் ஆகிய Hindutwa Mob என்பதை நான் என் ப்ளாகில் முன்னரே வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளதை , பதிந்துள்ளதை ( நாகார்ஜுனன் இலங்கை இணைய தள பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டிக்கான என் பின்னூட்டம்) படித்தவர்கள் அறிவார்கள்.

நாகார்ஜுனன் 'தேசம் நெற் ' பேட்டியில் என் கருத்து

பிஜேபி, ஆர்எஸ்எஸ், விஹெச்பி இந்த நாட்டைப் பீடித்துள்ள புற்றுநோய்தானே?

.................................................................................................................................................

ஜாதி,மத,மொழி,இன வெறி அடையாளங்கள் ,இயக்கங்கள்,கொள்கை சிறை இவற்றிற்கெதிரான என் அருவருப்பு என்னை இந்த சிக்கல் மிகுந்த சமூகத்திலிருந்து மிக அந்நியப்படுத்தி விட்டது .என்னை தொடர்ந்து படிப்பவர்கள் இதனை நன்கு உணர முடியும் என்பது தான் உண்மை .

5 comments:

  1. Neutrals and lukewarms cannot make history.

    rpr அய்யா , இந்துத்தீவிரவாதம் தான் இந்தியாவை பிடிச்ச பீடை என்று உடைச்சு சொல்லுங்கையா. ஏன் மென்னு முழுங்குறீங்க.

    ReplyDelete
  2. //என்னை இந்த சிக்கல் மிகுந்த சமூகத்திலிருந்து மிக அந்நியப்படுத்தி விட்டது .என்னை தொடர்ந்து படிப்பவர்கள் உணர முடியும் //

    சில government ஆளுங்க கேக்குற லஞ்சம் (முக்கிமா EB கடைநிலை வூழியன் முதல் RE, SE வரை), 70 % பொதுஜனம் ரோட்ல ஒழுங்க வண்டி வோற்றதிலை(that leads to unneccessary accidents & Traffic), சாதாரண சாதியில் பிறந்துவிட்ட கொடுமையில், அரசியல் கேப்மாரிதனங்கள், எல்லாமே காசு காசு என்றாகிவிட்ட சமுக அவலங்கள், இவற்றின் அடையாளமாகவே திகழும் நெருங்கிய உறவுகளின் முகங்களும் எனக்கு அன்னியமுகமாகிவிட்டன. I feel always separted from the whole; even when I am in crowd.

    வாசிப்பும், சிறிது தியானமும், கர்நாடகா சங்கிதமும் தான் மன அமைதியை தருகின்றன

    ReplyDelete
  3. முந்தைய மறுமொழிக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. //சாதாரண சாதியில் பிறந்துவிட்ட கொடுமையில், அரசியல் கேப்மாரிதனங்கள், //
    ஆர்.பி.ஆர். சார் என்ன சொல்ல வருகிறார்?

    ReplyDelete
  5. Mr.VenkataSubramaniyan

    Just read his "Identity Crisis"

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.