Share

Dec 26, 2008

பல்லிளிக்கும் பகுத்தறிவு

எனக்கு இன்று தான் விஷயம் தெரிய வந்தது . வீரமணிக்கு இந்த வயதில் என்ன கஷ்டமோ ? திராவிட கட்சி தலைவர் தன் பெயரை மீ கி வீரமணி என்று மாற்றிகொண்டிருக்கிறார் . இது தெரியாத கிணற்று தவளை நான் அவரை 'கி வீரமணி' என்றே அறிவில்லாமல் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் . தப்பு தப்பு தப்பு .

சரி ..எல்லோருக்கும் கஷ்டம் இல்லாமலா இருக்கு ? ஆனா மீ.கி. வீரமணி கஷ்டம் வெளிய தெரியுது ..ஜெயலலிதாவிடம் கேட்டால் சில யாக பரிகாரங்கள் கூட சொல்லித்தருவார் .ஆனால் மீ .கி .வீரமணி அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும்போது தான் ஜெயலலிதாவை சட்டை பண்ணுவார் .

ஜ்யோவ்ராம் சுந்தர் !

கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு ! வீரமணிக்கு ....நியூ மராலாஜி ன்னு சொல்றாங்களே..

“The Devil can cite Scripture for his purpose!”
-Shakespeare in ‘The Merchant of Venice’

4 comments:

  1. பெண்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள் தாயார் பெயரையும் initialஇல் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று. அதனாலேயே மீ சேர்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    தினமலரில் நானும் இன்று படித்தேன் :)

    ReplyDelete
  2. //பெண்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள் தாயார் பெயரையும் initialஇல் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று. அதனாலேயே மீ சேர்த்துக் கொண்டிருக்கிறார் //

    RP sir, யானைக்குகூட அடி சறுக்குமா??
    :)

    ReplyDelete
  3. இந்த மீ.கி. பெயர் மாற்றத்துக்கு முன் பெயரியல் ஆசான் ‘ஏதோ’ ராசனிடமும், பெயரியல் ஆசி ஜெயலக்ஷ்மி ஸ்வரூப் ராணியா -- ஏதோ ஒன்று -- இருவரிடமும் ‘மீ’ சேர்த்துக்கொள்ளலாமா என்று கூட்டாலோசனை நடத்தினார் என்று நம்பத்தகுந்த விடுதலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அவர் பெயர் .... அவர் மாற்றிக்கொள்கிறார்... நமக்கென்ன வந்தது?

    அச்சுப்பிச்சு

    ReplyDelete
  4. RP Sir,
    First time commenting here. sometime back, T.R.Balu became T.R.Baalu and Veerasamy became VeerasWamy

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.