Share

Dec 19, 2008

ஏ ஆர் அந்துலே

இந்த அந்துலே முப்பது வருடங்களுக்கு முன் மகாராஷ்ட்ரா முதல்வர் . ஆள் பார்க்க ஹேர் ஸ்டைல் ஹிந்தி நடிகர் திலிப் குமார் மாதிரி வைத்திருப்பார்.

அந்துலே பிரமாண்டமான சிமென்ட் பேர ஊழல் விவகாரத்தில் தான் ரொம்ப பாபுலர் !

அந்த நேரம் சர்க்காரியா கமிசன் விசாரணையில் கருணாநிதி மேலும் பல ஊழல் புகார்கள் .

துக்ளக் பத்திரிகையில் ஒரு கேள்வி .

"அந்துலே பற்றி கருணாநிதி என்ன நினைப்பார் ?"

அதற்கு ஒரு சின்ன கேலி சித்திரம் -அந்துலே தோளில்துண்டு பறக்க கருணாநிதியை துச்சமாக பார்த்துகொண்டே பெருமையாக நடந்து போவார் ! கருணாநிதி அவரை பார்த்து அசந்து போய் மூக்கில் விரல் வைத்து நிற்பார் .

" ஆ !பெருங்கொண்ட செய்கை! "(இந்த வார்த்தை மதுரை வட்டார வழக்கு )என்று வியந்து நோக்கும் கருணாநிதி.

.....

ஹேமந்த் கர்கரே யை துரோகி என்று மாலேகான் குண்டு வீச்சு விவகாரத்தில் கடுமையாக ஹிந்துத்வா சக்திகள் விமர்சித்து கொண்டிருந்த நிலையில் மும்பை கலவரத்தில் பலியாகி விட்டார் .

சிவசேனா , பி ஜே பி க்கேல்லாம் அதிர்ச்சி .

மராட்டியர் தவிர பிற மாநிலத்தவர் வெளியேற அரசியல் செய்த சிவசேனா வுக்கு மும்பை கலவரத்தை இந்தியாவில் பல மாநிலத்தை சேர்ந்த " தேசிய பாதுகாப்பு படை வீரர்கள்" வேறு வந்து அடக்கி உயிர் தியாகம் செய்து ....

முகத்தில் கரி பூசிக்கொண்ட இந்துத்வா சக்திகளுக்கு நல்ல அவமானம் . ஏனென்றால் தேசாபிமானம் ,தேச பக்தி மூலதனத்தில் மதவாத அரசியல் செய்த பாரதிய ஜனதாவும் . மராட்டி கோஷ சிவசேனாவும் திகைத்து நின்ற நேரத்தில்

ஏ ஆர் அந்துலே வின் பாராளுமன்ற முட்டாள் தனமான பேச்சு மெல்லுவதற்கு உடனே வசதியாக அவல் கிடைத்து விட்டது . இதில் பயனடைவது இந்துத்வா சக்திகள் மட்டும் அல்ல . பாகிஸ்தான் அரசியல் வாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அந்துலேயின் பேச்சால் குஷியாகி விட்டார்கள் . அபத்தம் பாருங்கள் ! அந்துலேயின் விதண்டாவாதம் ஒரே நேரத்தில் ஹிந்துத்வா அரசியல் வாதிகளையும் பாகிஸ்தானையும் ,இஸ்லாமிய தீவிரவாதிகளையும் இன்பக்கடலில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது !!

" பயங்கரவாதிகள் கையால் தான் ஹேமந்த் கர்கரே இறந்திருப்பாரா? மாலேகான் பிரச்னையில் அவருக்கு எதிரிகள் ஹிந்துத்த்வாக்கள் என்பதால் ஏன் இது அவர்கள் செய்த கொலைசதியாய் இருக்கலாகாதோ?...காமா ஆஸ்பத்திரி பக்கம் அவரை அனுப்பினது யாரு?"

தத்து பித்து என்று இப்படி உளறி கொட்டி விட்டு " நான் யாருக்கு ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் ?" என்று நேற்று அந்துலே வீராப்பு பேசியிருக்கிறார்.

With his foolish speech , an idiot commits a major blunder!

.......

அந்துலே மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்து விட்டார் .நிர்ப்பந்தித்து ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டிருக்கிறது !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.