1.சந்தீப் உன்னிகிருஷ்ணன் தந்தை செய்த காரியம் மிகுந்த சிறப்புடையது என்றால்
கேரளா முதல்வர் 85வயது அச்சுதானந்தன் தேசத்திற்காக தன் இன்னுயிர் நீத்த புனிதனின் தந்தையை 'மெண்டல் ' என்று அவமானப்படுத்தியிருப்பது மிகவும் கேவலமானது .
அச்சுதானந்தன் பதவி விலக வேண்டும் என்று பலரும் வற்புறுத்தியுள்ளனர் .
அச்சுதானந்தன் சம்பவம் நடந்த உடனே சந்தீப் வீட்டிற்கு போய்விடவில்லை .கேரளாவில் பலரும் அவரது மெத்தனத்தை சுட்டிக்காட்டிய பின்னே மெதுவாக பெங்களூர் கிளம்பி போயிருக்கிறார். அரசியல்வாதிகள் துக்க வீட்டிற்கு வருவதே கூட ஒரு பகட்டு அரசியல் நடவடிக்கை . அந்த சம்பவத்தை நான் பலமுறை NDTV, TIMES TODAY அது ஒளிபரப்பப்படும்போது துவங்கி பார்த்தேன்.புத்திர சோகம் என்பது எத்தனை கொடுமையானது . உலகின் அத்தனை சோகங்களிலும் தாங்கவே முடியாதது புத்திர சோகம் . தன் பிள்ளையை தேசத்திற்காக பலிகொடுத்து விட்டு அப்படிப்பட்ட சோகத்தில் உள்ள தந்தை அந்த நேரத்தில் தன்னை வரவேற்று கௌரவிக்கவில்லை என்பதற்காக அவரை பைத்தியக்காரன் என ஏசுவது காட்டுமிராண்டிதனமில்லையா ? பதவி திமிர் இல்லையா . எனக்கு ஒரே வருத்தம் தான் . ஒரு முதிர்ந்த கம்யுனிஷ்ட் தலைவர் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டு வெறுப்புக்கு உள்ளாகி விட்டாரே என்பது மட்டும் தான் .
My empathy goes to Sandeep’s father.
அரசியல்வாதிகள் தேச துக்கத்தை கூட தன்முனைப்புடன் பார்ப்பவர்கள் என்பதைத்தான் அச்சுதானந்தனின் அவதூறு நிரூபித்திருக்கிறது .
2. பாலிவுட் ராம்கோபால்வர்மாவும் , மஹாராஷ்ட்ர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் தாஜ் ஹோட்டல் பார்க்க, 'சினிமா வியாபாரரீதி' யாகதேசிய சோகத்தை தன்முனைப்புடன் (எரிகிற வீட்டில் பிடுங்கியவரையில் லாபம் . மும்பை கலவர பின்னணியை வைத்து அழகான ஹிந்திதிரைப் படம் மக்களுக்காக எடுக்க வேண்டாமா . லோகேசன் பார்க்க வேண்டாமா ? )அணுகியது அரசியல் வாதிகள் மீதான சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தையின் அவமரியாதைநடவடிக்கை சரியானது,நியாயமானது என்பதை நிரூபித்து விட்டது .
ச்சீ ச்சீ ....
................................
டிசெம்பெர் மூன்றாம் தேதி
1.கேரளா முதல்வர் அச்சுதானந்தன் தரமற்ற தன் பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் .
2.மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி விலகுவது உறுதியாகியிருப்பதாக தெரிகிறது .


நீங்கள் அந்த சம்பவத்தைப் பார்க்காமல் எழுதியிருக்கிறீர்கள்.. சந்தீப் ஒரு தியாகி என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அதற்காக அவர் தந்தை நடந்து கொண்ட விதத்தை ஏற்கமுடியாது. ஒரு மாநில முதல்வரை “stinking dogs" என்று விளிப்பது - அதுவும் அவர் வேலை மெனக்கெட்டு கேரளாவிலிருந்து பெங்களூருக்கு ஆறுதல் சொல்லவே வந்திருக்கிறார் - நியாயமா?
அப்படி அவர் அரசியல்வாதிகளையே வெறுப்பவரென்றால் ஏன் எடியூரப்பாவும் அவர் கட்சியினரும் வந்திருந்த போது இந்த அறச்சீற்றத்தை கான்பிக்கவில்லை? தொலைக்காட்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது அவர் ஒரு சைக்கோ என்று.