மனைவி : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட மாட்டேன்னு சொன்னேன் . கேட்டிங்களா ?
கணவன் : ஏன் என்ன ஆச்சு ?
மனைவி : ராத்திரி பூனை வந்து எல்லா பாலையும் குடிச்சிட்டு போயிடுச்சி !
...
மந்திரி : பயப்படாதீங்க மன்னா ! மனுஷனுக்கு ஆறிலும் சாவு , நூறிலும் சாவு .
மன்னன் : அது பரவாயில்லை .. போரிலும் சாவு வந்திடுமோன்னு தான் பயமாயிருக்கு .
....
"மன்னர் போரில் தோற்ற பிறகும் புலவர் அவரை வாழ்த்தி குறுந்தொகை பாடுகிறாரே ?"
"மன்னரிடம் அவர் ஒரு பெருந்தொகை வாங்கி விட்டாராம் !"
....
"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வர்றதில்லை ."
" அட ! அப்படியா !!"
" ஆமா , என் கருத்தை ச்சொன்னால் தானே வேறுபாடு வர்றதுக்கு !"
....
" துண்டு சீட்டை படித்தவுடன் பாகவதர் ஏன் டென்சன் ஆயிட்டார் ?"
"கச்சேரி முடிந்தவுடன் தயவுசெய்து எழுப்பி விட்டுட்டு போங்கன்னு எழுதியிருக்காம் !"
...
"ஒரு நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?"
" ஊறுகாய் சார் !"
..
நோயாளி : ஐஸ் வாட்டர்னா எனக்கு உயிர்.. டாக்டர்!
டாக்டர் : தாராளமா குடிங்க . ஆனா குடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுடவச்சு குடிங்க .
...
"ஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மிஸ்டர் பாபு சங்கர் !"
"ஐயோ டாக்டர் , நான் கௌரி சங்கர் "
"வெரி குட் ! என்னோட தப்பை சரியா கண்டு புடிச்சிட்டீங்களே !"
.....
காதலி : உங்களுக்கு ராணி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்கான்னு சொல்லவே இல்லையே ?
காதலன் ; உன்னை ' ராணி ' மாதிரி வச்சுக்கிறேன் ன்னு நிறைய தடவை சொல்லியிருக்கிறேனே !
....
"தலைவர் இன்னும் பழைய ஞாபகத்திலேயே இருக்காரு ."
" என்ன விஷயம் ?"
" அவரோட பாதுகாப்புக்காக பின்னால் ஜீப்புலே வர்ற போலிசை பார்த்துட்டு காரை வேகமா ஓட்ட சொல்லி டிரைவர் கிட்டே சொல்றாரு !"
......
கடைசியா சுஜாதா சொன்ன ஜோக் ஒன்னு !
வசந்தின் எச்சரிக்கை - வயாக்ரா அதிகம் சாப்பிடக்கூடாது . ஒரு ஆசாமி ஏழு மணி நேரத்துக்கு ஒரு வயாக்ரா என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு மணிக்கு ஏழு சாப்பிட்டானாம் . இறந்து போய்விட்டான் ! சவப்பெட்டியை மூடவே முடியவில்லை !!
..
அத்தனை ஜோக்குகளுமே நன்றாக இருக்கின்றன நண்பரே!
ReplyDeleteபாராட்டுக்கள்!
நிஜமாவே ஸீடியசான ஜோக்ஸ்தான் ;)
ReplyDeleteசீரியஸா சொல்றேன். சிரிக்க வச்சுட்டீங்க.
ReplyDeleteஅனைத்து ஜோக்குகளும் சிரிப்பை வரவழைத்தன. நல்ல collection.மீண்டும் சந்திப்போம்.
ReplyDeleteநன்றி.
Risque and ribaldry ....enjoyed it.
ReplyDeleteNice comedy.. :-)
ReplyDelete