இலங்கை போரும் தமிழ் மக்களும் - மேலும் அறிக்கைகள்
நாகார்ஜுனன் ப்ளாகில் பின்னூட்டங்கள் :
Perundevi said...
பதிவில் இணைப்பு தந்திருக்கும் அறிக்கைகளைப் படித்துவிட்டு மிக்க வருத்தம் அடைந்தேன். தகவல்களுக்கு நன்றி. இப்போது இந்தியாவிலிருந்து ஏதும் நிவாரணங்கள் அனுப்பப்படுகின்றனவா? இவற்றை அங்கே யார் பகிர்ந்து அளிக்கிறார்கள்?
23/12/08 18:01
நாகார்ஜுனன் said...
இந்தியாவிலிருந்து சென்ற நிவாரணப்பொருட்களின் எடை 1,700 டன். இவை 80,000 பேரின் பயன்பாட்டுக்கு மாத்திரமே வரும். தவிர, எவ்வளவு நாள் வரும் என்று தெரியவில்லை. இவற்றை விநியோகிக்கும் பொறுப்பு பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினுடையது. இவற்றை நவம்பர் 21 அன்று இந்தச் சங்க அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் போரால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஏழாயிரம் என இலங்கை அரசின் நிவாரணத்துறை கூறினாலும் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் இது மிகையான மதிப்பீடு, இந்த எண்ணிக்கை ஒருலட்சம் இருக்கலாம் என்று அதே நிகழ்ச்சியில் கூறுகிறார்.. இதெல்லாம் இந்த அறிக்கையில் உண்டு. பத்திரிகைகளிலும் வாசித்தேன். எது எப்படியிருந்தாலும், இலங்கை அரசாங்கத்தை நம்ப முடியாது. அதனிடம் அரசியல் தீர்வு என ஒன்றுமில்லை.. அங்குள்ள தமிழ்மக்களுக்குப் போதுமான நிவாரணம் கிட்டவில்லை என்பதை இந்த அறிக்கை கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் இருப்போர் ஒருமுறை நிவாரணம் அனுப்பிவிட்டுத் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதாமல், போர்நிறுத்தம் நோக்கி இலங்கை அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகள் தயாராக இருப்பார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.. இந்திய, பன்னாட்டு அரசுகளிடமிருந்து கோரிக்கை வந்தால் இப்போதைக்கு ஏற்பார்கள் என்று ந்ம்பலாம்...
23/12/08 18:41
பாஸ்கர் said...
நாகர்ஜுனன் அவர்களே,அக்டோபர் 28௨௮ம் தேதி யாழ்ப்பாண ஆசிரியர்களின் மனித உரிமைகள் (UTHR-J)சமர்ப்பித்த கட்டுரையையும் நீங்கள் படித்திருக்கலாம். உங்கள் வலை தளத்திற்கு வருகை அதிகம் உள்ளதால் இந்த இணைப்பு பலரும் படிக்க உதவலாம்.http://www.uthr.org/SpecialReports/spreport31.htmஇந்த இருபக்க தாக்குதலில் இருந்து இந்த அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது உலகத்தின் கடமை. ருவண்டா போல் ஒன்று நடந்து விட அனுமதிக்கக் கூடாது.
23/12/08 19:35
sugan said...
அவர்கள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி மீண்டும் யாழ்ப்பாணம் போய்த் தாக்குவார்கள்.மேலும் நிலைமையைச் சிக்கலாக்குவார்கள்.இராணுவத்திற்கு மேலும் கொடும் வறுமையிலுள்ள இளைஞர்கள் 50,000 சேர்வார்கள்.தமிழ்மக்களை அழித்தொழிப்பதில் ஐந்தாம் படையாக எப்போதுமே செயற்படுகிறார்கள்.கடைசித் தமிழன் உள்ளவரை போராடுவோம் என்று எப்போதே சொல்லிவிட்டார்கள்.
24/12/08 10:22
RP RAJANAYAHEM said...
"இலங்கை அரசிடம் அரசியல்தீர்வு இல்லை..."
"புலிகள் கடைசித்தமிழன் உள்ளவரை போராடப்போகும் ஐந்தாம் படை..."
You cannot switch on Peace like a light.
24/12/08 12:30
நாகார்ஜுனன் said...
நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இலங்கைத்தீவு அழிவின் அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டது. பிரதானமாக இது அரசியல்-பிரச்னை என்பதால் இலங்கை அரசாங்கத்துக்குத்தான் அதிகப்பொறுப்பு. ஆனால், அதனிடம் நீதி, நியாயம் என ஏதுமில்லை... புலிகள் அமைப்பு எவ்வளவு மோசமான அமைப்பாக இருந்தபோதும் சரி, அது தோன்றுவதற்கு முன் இருந்ததும் அது அழியும் பட்சத்தில் அதற்குப்பின் இருக்கப்போவதும் அதே இலங்கை அரசமைப்பு என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது...
24/12/08 12:42
Indian Government is not sincere in resolving the Sri Lankan Tamils' ethnic issue for the last 16 years. Both the main political parties in Tamil Nadu toe the line of Central Government continuously as their focus is on their own welfare. Sri Lankan Tamils are abandoned by almost all. Only God can save them.
ReplyDelete***இலங்கை அரசாங்கத்தை நம்ப முடியாது. அதனிடம் அரசியல் தீர்வு என ஒன்றுமில்லை.. அங்குள்ள தமிழ்மக்களுக்குப் போதுமான நிவாரணம் கிட்டவில்லை என்பதை இந்த அறிக்கை கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் இருப்போர் ஒருமுறை நிவாரணம் அனுப்பிவிட்டுத் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதாமல், போர்நிறுத்தம் நோக்கி இலங்கை அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும். ***
ReplyDeleteபொறுப்பில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி.