Share

Dec 10, 2008

டிசெம்பெர் பெங்களுர்

டிசம்பெர் ஏழு ,எட்டு தேதிகளில் பெங்களூரில் இருந்தேன் . எட்டாம் தேதி மதியம் சென்னை கிளம்பி போனேன் . மறு நாள் அதாவது நேற்று மதியம் இரண்டரை மணி கோவை எக்ஸ்பிரஸ் மூலம் திருப்பூர் வந்தேன் .

பெங்களுர் இதுவரை மூன்று முறை டிசெம்பர் மாதத்தில் தான் போக வேண்டியிருந்திருக்கிறது . வாழ்வில் முதல் முறையாக பெங்களுர் போனது கூட ஒரு டிசெம்பர் மாதம் தான் . நீண்ட இடைவெளிக்கு பின் சென்ற வருடம் டிசெம்பர் மாதம் போனேன் . இப்போது சென்ற ஞாயிறன்று சென்றது கூட டிசெம்பெர் மாதம் தான் .God does not play at dice! என்று ஐன்ஸ்டீன் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது . கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கூட .

பெங்களூரில் நுழைந்த பின் போகவேண்டிய இடம் சேர காரில் மூன்று மணி நேரம் ஆகியது . அவ்வளவு நெரிசல் . வழி கண்டுபிடிக்க ஆட்டோகாரர் ஒருவரிடம் சிக்னலில் நிற்கும்போது விசாரித்தபோது அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த இரு இளம் பெண்கள் எனக்கு 'முத்த சமிக்ஞை ' நிறைய்ய ,நிறைய்ய அவசரமாக செய்தார்கள் .

பெங்களூரிலிருந்து எட்டாம் தேதி மதியம் சென்னை செல்லும்போது 'மதுரவாயல்' என்ற இடத்தில் வாகனங்கள் எறும்பாய் கூட ஊரமுடியாமல் படுகிற நரக அவஸ்தை .. நரகம் அந்த இடம் தான் என்று பந்தயம் கட்டலாம் . இவர்கள் ரோடு போடுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு தண்டனை ரொம்ப அதிகம் . சரி .. நேரம் ,காலம் இப்படி சாலையில் அளவில்லாமல் விரயமாகுமானால் அப்புறம் அவர்கள் என்ன வேலை பார்க்க முடியும்?

7 comments:

  1. பெங்களூர் வருவதாக தெரிந்திருந்தால் ஒரு சின்ன பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாம்..உங்களை சந்திக்க நிறைய பேர் கண்டிப்பாக ஆவலாகயிப்பார்கள் என்று நம்புகிறேன்..

    மீண்டும் வருவதாக இருந்தால்..ஒரு பதிவு போட்டு தான் சொல்லுங்களேன்...

    ReplyDelete
  2. You have hit the nail on the head RPR. Commuting in Chennai is a virtual nightmarish experience and consumes precious time. Count yourself lucky Sir.

    ReplyDelete
  3. he he.. TBCD, you are busted man!

    RPR, however "bengaluru"vasis like me would have definitely loved to meet up with you.

    ReplyDelete
  4. ஊர் மாறும் போது பிளாக்கர் தகவலையும் மாற்றனும்...மாற்றவில்லை...

    தற்சமயம், நமக்கு பெங்களூர் தான் வாசம்..

    ஃஃஃஃஃஃஃ
    பஸ்ட் ஆகலாம் ஒன்னுமில்லைங்க...என் பதிவிலே எல்லா விவரமும் இருக்கு...

    //
    epowerx said...

    he he.. TBCD, you are busted man!
    //

    ReplyDelete
  5. i was also in bengalooru - pavemens are dug, rees are uprooed, and even afer all his you hink of walking on pavemens, wo wheeler vehicles happily ride in he pavemen. here is no sense of raffic in he bangaloreans -- one alphabe is missing. sorry

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.