Share

Nov 25, 2008

சொர்க்கம் ,கைலாசம்

பத்து வருடம் முன் ராஜபாளையம்மலையடிவாரத்தில் சத்திய மூர்த்தி சுவாமிகள் என்பவரை சந்தித்தேன் .

வள்ளலார் இயற்றி பாடிய "மாண்டு ராக பாடல் " "வானத்தின் மீது மயிலாட கண்டேன் .மயில் குயில் ஆச்சுதடி " பற்றி என்னிடம் வரி வரியாக வெகு சுவாரசியமாக பேசினார் .

எம் எஸ் துவங்கி உன்னி கிருஷ்ணன் வரை பாடி பிரபலமான துக்கடா பாட்டு .

சத்தியமூர்த்தி சுவாமிகள் தொடர்ந்து அப்போது கடவுளை கேட்ட ஒரு கேள்வி : "சோறை குடுக்காத சாமி சொர்க்கத்தை காட்டுமா ?

காசை கொடுக்காத சாமி கைலாசத்தை காட்டுமா ?

இங்கே சோறை கொடு . அப்புறம் நீ சொர்க்கத்தை கொடு . இங்கே எனக்கு காசை கொடு .அப்புறமா ஒன் கைலாசம் !"

"இங்கே பூலோகத்திலே என்னை சித்திரவதை பண்ணி புழுவா துடிக்க விட்டுபுட்டு செத்தா உடனே சொர்க்கம் ,வைகுந்தம் ,கைலாசம்னு காதுலே பூ சுத்தாதே .

சும்மா ஏமாத்தாதே "

எனக்கு நீலமணியின் கவிதைகள் இரண்டு நினைவுக்கு வந்தது

1. "தட்டினால் திறப்பாராம் தாராள கடவுள் !

சாத்தி வைப்பானேன் ?"

2." என்ன வரம்வேண்டும் கேள் என்றார் கடவுள் .

அது தெரியாத நீ என்ன கடவுள்? "

...

தேவ தேவனின் கவிதை கீழே :

" காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய் எழுந்தார்

துயர் குழப்பமிக்க இவ்வுலகில்

தன் கடமை என்னவென்று வெகு

யோசனைக்கு ப்பின் கடவுள் "

...............

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாம் என்றே எண்ணி இரப்பார்

பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம்

பேயுரையாம் என்றிங்கு ஊதடா சங்கம்

- மகா கவி பாரதி

3 comments:

  1. //இங்கே பூலோகத்திலே என்னை சித்திரவதை பண்ணி புழுவா துடிக்க விட்டுபுட்டு செத்தா உடனே சொர்க்கம் ,வைகுந்தம் ,கைலாசம்னு காதுலே பூ சுத்தாதே .சும்மா ஏமாத்தாதே "எனக்கு நீலமணியின் கவிதைகள் இரண்டு நினைவுக்கு வந்தது 1. "தட்டினால் திறப்பாராம் தாராள கடவுள் !சாத்தி வைப்பானேன் ?"2." என்ன வரம்வேண்டும் கேள் என்றார் கடவுள் .அது தெரியாத நீ என்ன கடவுள்? //

    பின்னும் கடவுள் நம்பிக்கை பிறப்புரிமையின் அனிச்சைச் செயலாய்!!!

    ReplyDelete
  2. ஏன் சாமி (உங்களைதான்) .. நானே ஏதோ சாமிய நம்பி வாழ்கையே ஒட்டினு இருக்கேன்..
    சுத்தமா நாஸ்திகர் ஆக்கிடுவிங்க போலருக்க ...

    நெறைய எழுத்தாளர்கள் மற்றும் கவிகளை அறிமுகபடுதுகிறீர்கள் ... மிக்க நன்றி... வாழ்க்கை சுவையாகவே போய்கொண்டு இருக்கிறது

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.