Share

Nov 5, 2008

சாக்ரடீஸ்

பெரிய பெரிய கடைகள் ,நகைகடை ,துணிகடை , டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ,வித விதமான பொருட்கள் நிரம்பிய கடைகள் பார்க்கும் போது ' அடடா கையில் காசு இல்லையே . இந்த பொருளை எப்ப வாங்க போறோம் , பாப்போம் போனஸ் வந்தால் ..'இப்படி பலருக்கு மனசு கிடந்தது அடித்துகொள்ளும் !
Sophie’s worldஎன்று ஒரு நாவல் . அதில் ஒரு காட்சி
சாக்ரடீஸ் அப்படி ஒரு கடை முன் நிற்கிறார் .புராதன காலத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முன் : ஒரு பார்வை பார்க்கிறார் .முடிவாக சொல்கிறார் .
“What a lot of things I don’t need!”
......
இடாலோ கால்வினோ தன் Why read the Classics? கட்டுரையில் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார் .
ஹெம்லாக் தயாராகிகொண்டிருக்கிறது .
சாக்ரடீஸ் விஷம் குடிப்பதற்கு முன் புல்லாங்குழல் வாசித்து ஒரு மெட்டு கற்றுகொண்டிருந்தாராம் .
'இதனால் உமக்கு என்ன பிரயோஜனம் ?' -கேட்கிறார்கள்
"நான் சாகும்போது அதற்கு முன் புதிதாய் ஒரு புதிய மெட்டு அறிந்து கொண்டு விடுவது சந்தோசம் தானே !"

1 comment:

  1. ரஜநாயஹம் அவர்களே,

    தங்கள் பதிவுகளை நீங்கள் SCHEDULE செய்யலாமே.ஒரே நாளில் பல பதிவுகள் போடுவதால் சில பதிவுகளை விடுபட நேரிடுகிறது.பதிவு நேரத்தை நீங்கள் மாற்றி விட்டால் அது ஒரு நாளைக்கு ஒன்றோ அல்ல இரண்டோ கணக்காக தானாக பதிவாகி விடும்.ஒரு வேண்டுகோள் அவ்வளவே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.