Share

Nov 21, 2008

எஸ் பாலச்சந்தரின் மருமகன் வெங்கடேசன்

எஸ் பாலச்சந்தர் பற்றி எல்லோருக்கும் தெரியும் . அவருடைய அண்ணன் எஸ் ராஜம் பற்றி தெரியமா ? வீணை பாலச்சந்தர் உடன் பிறந்த சகோதரர் எஸ் ராஜமும் எஸ் பாலச்சந்தரின் அக்கா எஸ் ஜெயாவும் அந்த காலத்தில் 1933 ல் "சீதா கல்யாணம் " படத்தில் ராமராகவும் சீதையாகவும் நடித்தனர் . 1943 ல் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த "சிவகவி " படத்தில் கட்டிளம் காளை எஸ் ராஜம் முருகனாக வந்து பிரமாதமாக நடித்தார் . எஸ் ராஜம் நடிப்பின் முன் எம் கே டி கூட கொஞ்சம் அமுங்கி தான் தெரிவார் . சும்மா இடைவேளைக்கு மேல் வந்து கலக்குவார் .
திருப்பூரில் எஸ் பாலச்சந்தரின் இன்னொரு சகோதரி மகன் வெங்கடேசன் தொழில் அதிபராய் இருக்கிறார் .தலைமை அரிமா சங்க முன்னாள் தலைவர் ! அரிமா சங்கத்தில் அவரை சந்தித்தேன் . "எஸ் ராஜம் இறந்து எத்தனை வருடம் இருக்கும் ?" என்று கேட்டேன் ." அவர் உயிரோடு தான் இருக்கிறார். நன்றாக இருக்கிறார் ." என்றார் . வெங்கடேசன் சொன்னார் ." என் அம்மாவை தவிர அவரோடு உடன் பிறந்த அனைவருமே சினிமாவில் நடித்தார்கள் !"
எஸ் ராஜம் பற்றி வெங்கடேசன் இன்று சொன்ன சுவாரசியமான தகவல் . "தொண்ணூறு வயதாகிறது .இரண்டு வருடம் முன் வரை டி வி எஸ் 50 ஓட்டுவார் !"
இங்கே கோவை சூலூரில் ஒரு அரிமா உறுப்பினர் வீட்டு திருமண விஷேசம் சென்ற ஆண்டில் சுதந்திர தினத்தன்று நடந்தது . சஜூ டேவிட் என்ற உற்சாகமான அந்த நண்பரின் மகள் திருமணத்தை ஒட்டி ஒரு விருந்து . அதில் கலந்து கொள்ள வெங்கடேசன் அவர்களின் காரில் தான் சென்றேன் .
நான் சீர்காழியின் " தேவன் கோயில் மணியோசை " எஸ் பி பி யின் "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா " சீர்காழியின் மற்றொரு பாடல் " ஓடம் நதியினிலே !ஒருத்தி மட்டும் கரையினிலே " ஆகிய பாடல்களை ஆர்க்க்க்ஸ்ட்ராவில் பாடினேன் .
வெங்கடேசன் " கம்பன் ஏமாந்தான் " பாடலை பாடினார் . "நிலாவே வா நில்லாமல் வா" பாடலையும் பாடினார் .
....
பொதுவாக நான் பி பி ஸ்ரீநிவாஸ் ,கிஷோர் குமார் பாடல்கள் பாடத்தான் மிகவும் விரும்புவேன் .
கல்லூரி காலங்களில் இந்த இருவரின் பாடல்கள் விரும்பி பாடுவேன் .
பி பி எஸ் பாடலில் " காதல் நிலவே !கண்மணி ராதா !!நிம்மதியாக தூங்கு " பாடல் கேட்கும்போது இப்போது கூட என் ஞாபகம் தான் வருவதாக என் நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள் .
கிஷோர் குமார் " கில் தே ஹைன் குள் யாஹான் " சல்தே சல்தே மேரே ஏ கீத் யாக் ரே ஹெனா , கபி அல்விதனா கே ஹே நா " ரூப் தேரா மஸ்தானா " இன்னும் பல பாடல்கள் பாடுவேன் .
பாடுன வாயும் ஆடுன காலும் நிக்காது . இப்பவும் இசைக்குழு இருந்தால் சொந்த பந்தங்கள் விஷேசங்களில் பாடி விடுவேன் !

2 comments:

  1. "பாடுன வாயும் ஆடுன காலும் நிக்காது" Wonderful.

    ReplyDelete
  2. முன்னாள் மைலாப்பூர் வாசி என்ற முறையில் என்னிடமிருந்து சில -

    எஸ். ராஜம் அபூர்வ ராகங்களில் ஸ்பெஷலிஸ்ட். மேளகர்த்தா வரிசையில் அடிக்கடி பாடப்பெறாத 31-36, 67-72 ராகங்களை இவர் பாடியதை வைத்தான் கற்கிறார்கள். இவர் அந்தக்காலத்தில் வானொலியில் பணியாற்றியபோது பாடியவை.

    இன்னொரு விஷயம், அபாரமான ஓவியர். பல ஆண்டுகளாகக் காவிதான் அணிகிறார். மைலாப்பூர், லஸ் புத்தகக்கடைகளில் அடிக்கடி பார்க்கலாம். சகஜமாகப்பேசுவார்.

    என் தந்தையாரும் எஸ். பாலச்சந்தரும் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் சகாக்கள். எஸ். பாலச்சந்தர் கஞ்சிரா அநாயாசமாக வாசிப்பார். இவர் அப்போதே நாடகங்களில் நடித்தவர் என்று என் தந்தையார் சொல்கிறார்.

    நாகார்ஜுனன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.