அடையாளச்சிக்கல் !
ஏற்கனவே "தெலுங்கன் கருணாநிதி " என்ற கோஷம் பத்து வருடத்திற்கு மேலாக முன் வைக்கப்படுகிறது . இது வரை தமிழ் தேசிய வாதிகள் , விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ,தலித்கள் இந்த கோஷம் எழுப்பிகொண்டிருந்தார்கள் . இப்போது சுப்ரமணிய சுவாமி " கருணாநிதியின் தந்தையின் முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கர்கள் " என்ற உண்மை (!)யை கண்டறிந்து உலகுக்கு கூறியுள்ளார் . இலங்கை பிரச்னை தீர ஒரு தமிழர் தமிழக முதல்வர் ஆகவேண்டும் என்பது சுப்ரமணிய சுவாமியின் புதிய அபத்த கோஷம் .
இதற்கு நேர் மாறாக ரஜினிக்கு அடையாளச்சிக்கல் தீர்ந்து விட்டது . ரஜினி , அவரது தகப்பனார் ஆகியோர் பிறந்த இடம் தமிழகத்திலுள்ள கிருஷ்ணகிரி அருகிலுள்ள நாச்சி குப்பம் ! தமிழ் அடையாளம் !அங்கிருந்து எழுபது மைல் தூரத்திலுள்ள பெங்களூருக்கு பிழைக்கப்போன குடும்பம் தான் ரஜினியின் குடும்பம் !! இனி எவனும் கர்நாடகாகாரன் என்று ரஜினியை சொல்லமுடியாது .
அத்வானியே இது குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து குதூகலம் அடைந்துள்ளார் !!! சகிக்க முடியாத அபத்தம் .
அபத்த அடையாளங்கள் . அபத்த சிக்கல்கள் .
:-)
ReplyDeleteஎழுபதுகளில் எம்.ஜி.ஆரை மலையாளி, டீக்கடை, ராத்திரி வண்டி என்றெல்லாம் அநாகரீகமாக சாடியவர்கள் கருணாநிதியும் அவர் கட்சிக்காரர்களும். அக்காலக்கட்டத்தில் முதல்முறையாக எம்.ஜி.ஆர். பதிலடியாக கருணாநிதியின் ஜாதியை கூறி அது தெலுங்கு சாதி எனக் கூறினார். அப்போது கருணாநிதி பதறிப்போய் அப்படியெல்லாம் இல்லை என்பது போல எல்லாம் கூறினார்.
ReplyDeleteஆனால் ஒன்று, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்பதை சம்பந்தப்பட்டவர்களே ஒத்து கொள்ளவில்லை.
பெரியார் மட்டும் கன்னட பலிஜா நாயுடுவாக பிறந்திருந்தாலும், தமிழனுக்கு தலைமை பொறுப்பை ஏற்கும் வக்கில்லை என பல சமயம் கூறினாலும், அவர்களை திராவிடர்கள் (தமிழகத் தமிழர்கள்) யாரும் சாடவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu!
ReplyDeleteBeautiful comment!!
what goes around , comes around! When you base everything on hatred, hatred comes back. For some reason Mu Ka and the Jaathi Hindus (though on different ways) forget that.
ReplyDeleteபுழைப்பே இந்த ஜாதியை வைத்துதான் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில் காலா காந்தி அவர்கள் சொன்னது போல் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்.
ReplyDelete