ராஜாஜி பற்றிய பதிவு - இப்படியெல்லாம் சில நம்பிக்கைகள் அந்த காலத்தில் இருந்திருக்கின்றன.விசித்திரமான விஷயங்களை சுட்ட தான். சுப்ரமணிய தேசிகரின் புனைவாக கூட இருக்கலாம்.என்றாலும் ஒரு சுவாரசியமான புனைவு.
லத்தீன் அமெரிக்க கதைகளில் இப்படி “Mythology” தொன்மங்கள் இடம் பெறுவதை அறிவீர்கள. மாட்டு காதில் மந்திரம் சொல்வதில் ஒரு கவிதை தன்மை, தன் சகமனிதர்கள் மீதான அவ நம்பிக்கை இதெல்லாம் பதிய வேண்டிய விஷயம்.
நான் இந்து, ஆனால் நாத்திகன். இதை என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்கள் உணர முடியும்.
என்னுடைய "உண்டிங்கு என் ஜாதியெனில் " கட்டுரை ஒரே நேரத்தில் தனி தமிழ் வெறியர்கள், மதவாதிகள், இந்துத்தவா,திராவிட சித்தாந்திகள், ஜாதி அரசியல்வாதிகள் என்று பலர் கண்டனத்திற்கும் உள்ளானது. இதே என் ப்ளாகில் ஜூன் மாத பதிவுகளில் இந்த கட்டுரை உள்ளது .படித்து பார்க்கலாம். அதில் நான் தாமரை இலை தண்ணீராய் இயங்கியிருப்பதை உணர முடியும்.
விளக்கங்கள் கூட தேவையில்லை தான்.ஆனால் படு அபத்தமாக தமிழ் காவலர்கள், திராவிட சித்தாந்திகள் போன்ற மூட நம்பிக்கையாளர்கள் படு ஆவேசமாக ஆரிய எதிர்ப்பை வெளிப்படுத்தி நான் ஏதோ 'பழைமைவாதி', 'ஆரிய அடிவருடி',’மூட நம்பிக்கையை முன் வைப்பவன்’ என கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் .
I cannot suffer fools!
இன்னொரு பக்கம் இதை உண்மை என நம்பும் மதவாதிகளின் பரவச கமெண்ட் வேறு என்னை வேதனைப்பட வைக்கிறது. இதை எழுதுவதில் ஒரு கிண்டல் என் எழுத்தில் தொனிப்பதை கூட இவர்களால் அறிய முடியவில்லை.
என் பிராமண நேசம் உறுதியானது. அதற்கு நான் வெட்கப்படவில்லை.
மென்மையான,மேன்மையான மனிதர்களை நான் வணங்குபவன்.
இருபத்தைந்து வருடம் முன் நான் திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் இன்னமும் பத்திரமாக என்னிடம் இருக்கின்றன. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது .இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு. சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கும் இந்த பதிவின் தலைப்பை தான் கொடுத்தேன்.
அரைவேக்காடுகள் உடனே " பச்சோந்தி " பட்டப்பெயர் கொடுத்துகொள்ளலாம்.
சுந்தர ராமசாமி சொன்னதை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன் . அடையாளத்தை நிராகரிக்கும் எந்த இலக்கிய வாதியும் இதை தான் சொல்வான் .
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '
'கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள் ' அரற்றி கொண்டே இருக்கலாம் !
கவனித்தீர்களா இதுவும் கூட நல்ல பதிவாக வந்திருக்கிறது.
ReplyDeleteபாவம் விட்டுவிடுங்கள் - இவர்கள்
இயங்க தெரியா மனிதர்கள்
அன்புள்ள ராஜநாயஹம்,
ReplyDeleteஉங்கள் எழுத்தில் சத்திய தர்சனம் ஒளிவிடுகிறது.
நாய்கள் ஓலமிடுகின்றன- அது அவற்றின் இயல்பு.
கோட்டான்கள் கூவுகின்றன - அது அவற்றின் இயல்பு.
பன்றிகள் சேறுபுலம் நோக்கி ஓடுகின்றன-அவற்றுக்கு வேறு போக்கிடம் ஏது?
தமிழ்நாட்டின் தலைவிதி. நீங்கள் நாத்திகர். நம்பமாட்டீர்கள். ஆனால் நாங்கள் நம்புகிறோம்.
Sir
ReplyDeleteCould you please suggest 10 English books to read (must read list).
Dear Kuppan_yahoo,
ReplyDeletePlease read my pathivu "Willa Cather's My Antonia" in in the month October. There you can find my My 'must read List' of books.