"யானை பிழைத்த வேல் அரிது !!"
பெண் யானை ஒன்று எப்போதும் ஆற்றில் நீர் அருந்திய பின் ஒரு தென்னை மரத்தின் அடியில் இளைப்பாறும் .
ஒரு எலி ! நல்ல நினைப்புக்கார எலி . தன் குறுகிய எலி பிரதேசம் தாண்டி பல பரந்த அனுபவம் வேண்டி அலையும் எலி . தேடல் !தவிப்பு !
இந்த எலி திருமணம் ஆனது தான் . என்றாலும் இந்த பெண் யானை மீது மையல் . கண்ணால் காம வலை வீசியது . கை வசம் இருந்த தேவதேவனின் கவிதையை எடுத்து வீசியது .
"விடைத்து நிற்கும் என் குறி .
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி .
அடியே ! பீறிடும் எனது இந்திரியமடி இந்த கவிதை !"
தென்னை மரத்தின் அடியில் படுத்த யானைக்கு ஆச்சரியம் ! ஏன் இந்த எலி இப்படி தன்னை பார்த்து கண்ணடித்துக்கொண்டு இருக்கிறது . கவிதை சொல்கிறது !
'வாப்பா ! எலி ! ஒரு பொம்பளை தனியா இருக்கிற இடத்தில் வந்து கண் அடித்துக்கொண்டே இருக்கிறாயே ! தேவதேவன் எழுதிய கவிதை சொல்கிறாய் !என்ன வேண்டும் சொல் !"
எலி " உன்னை ஒரே ஒரு தடவை ஜோலி பார்க்க வேண்டும் என்று என் நெடு நாள் தவம் ! ப்ளீஸ் ..ப்ளீஸ் .."
யானைக்கு ஒரு Curiosity ! என்ன தான் , எப்படி தான் தன்னோடு இந்த சின்ன எலி உடல் உறவு கொள்ள முடியும் பார்த்து விடுவோமே ! " சரி ! என் புருஷன் கஜக்கோல் பாண்டியன் (யானை தான்) வர்ற நேரம் . அதுக்குள்ளே முடித்து விட்டு ஓடு !" பெர்மிசன் கொடுத்து விட்டது.
எலி யானை மேல் ஏறி அதன் முதுகு , வால் அதன் அடிப்பகுதி குண்டி எங்கும் சுற்ற ஆரம்பித்தது .அந்த நேரத்தில் தென்னை மரத்தில் இருந்து ஒரு இளனி யானையின் தலை மீது விழுந்து விட்டது . யானை உடனே பிளிறியது .
அதன் வால் பகுதியில் குண்டி பக்கம் இருந்த எலி கேட்டது ." என்ன நான் செய்யிறது வலிக்குதா ? சாரி நான் கொஞ்சம் முரட்டு தனமா செஞ்சிட்டேன் .மன்னிச்சிக்க .I apologize" என பவ்யமாக சொல்லி விட்டு கீழே இறங்கி
" நான் புதுமையானவன்!உலகை புரிந்துகொண்டவன்!..என்னை தெரியுமா ? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா ?" என உற்சாகமாக பாடிக்கொண்டே தன் எலி வலை நோக்கி ஆடிக்கொண்டே ஓடியது .
எலி வலையில் அதன் 'மனைவி எலி' கண்ணீர் விட்டபடி சரோஜா தேவி போல சோகமாக போஸ் கொடுத்து " என்னை மறந்ததேன் ? தென்றலே சென்று நீ என்னிலை சொல்லுவாய் " என பஞ்சு அருணாசலம் எழுதிய பாடலை பி.சுசிலா குரலில் ரொம்ப உருக்கமாக பாடிக்கொண்டு இருந்தது . Infidelity யை எந்த பெண்ணால் தான் தாங்கிக்கொள்ளமுடியும் சொல்லுங்கள்.
யானையுடன் சல்லாபித்து விட்டு வந்த எலிக்கு புரிந்து விட்டது . எந்த கேனை எலியோ பார்த்து விட்டு ,வந்து அதற்குள் தன் மனைவியிடம் பற்ற வைத்து விட்டது !
தன் மனைவியிடம் அந்த எலி கொஞ்சம் தோரணையுடன் சொன்னது .
" இங்கே பார் ! என் ரேஞ்சே வேற ! யானையே இன்னைக்கு கதறி கூப்பாடு போட்டுருச்சி ! கிழிஞ்சிடும் !ஜாக்கிரதை "


Nalla pathivu, unga pathivukku votta pottachu nanba, namma matra pathivuglaiyum padichu pidicha votta podunga