Share

Mar 6, 2009

Vittorio De Sica ‘s Bicycle thief(1949)

There is a cure for everything except death.
இவ்வளவு நம்பிக்கையுடன் தன் மகனிடம் சொல்லும் ரிக்சி எப்படி பிறழ்வை தழுவ நேர்கிறது.Ricci is not morally superior to the thief.
வாழ்வின் ஜீவாதாரமான தன் சைக்கிள் திருட்டு போகும்போது I have been cursed my whole lifeஎன தன்னிரக்கத்தால் பீடிக்கப்படும் ரிக்சி யாக லாம்பெர்டோ மாகியோரணி யும் மகன் ப்ருனோ வாக அற்புதமான நடித்துள்ள ஏழு வயது என்சோ ஸ்டயோலா . எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களை எத்தனையோ படங்களில் பார்க்கிறோம் . ஆனால் இந்த "பைசைக்கிள் தீப் " படத்தில் வரும் இந்த சிறுவனை படம் பார்த்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது . இந்த பையன் ஸ்டயோலா பின்னால் நிஜ வாழ்வில் ஒரு சாதாரண பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் ஆகிவிட்டதை சோகம் என்பதா இல்லை தத்துவார்த்தமாக அது தானே வாழ்க்கை என்பதா ?
கதாநாயகன் ரிக்சியாக நடித்த லாம்பெர்டோ கூட இந்தNeo –realistic movie யில் நடிக்கும்போது தொழில் முறை நடிகர் கிடையாது . அமெச்சூர் ! இவரையும் ஒரு சிறுவனையும் வைத்து விட்டோர்யோ டெசிக்கா இயக்கி ஒரு சிறப்பான திரைக்காவியமாக்கியிருக்கிறார் .'வேலையில்லா திண்டாட்டம்' என்ற வார்த்தை ஒரு Cliché . அதன் சோகத்தை என்ன ஒரு பிரமாண்டமாக இந்த படம் காட்டியிருக்கிறது .
சும்மா வார்த்தைக்காக "உருக்கம் " என்பதை எத்தனை முறை உபயோகிக்க வேண்டியிருக்கிறது.

அந்த சிறுவன் ப்ருனோ பாத்திரம் தான் எத்தகைய உருக்கமானது. நெஞ்சை பிழியும் பாத்திரம்.

 தன் தந்தை சைக்கிள் திருடி சிக்கிக்கொண்டு அடி வாங்குவதை பார்த்து விம்மி அழும் ப்ருனோ.You live and you suffer.
சத்யஜித் ரே இந்த படத்தை பார்த்து விட்டு இதனால் மிகவும் பாதிக்கப்பட்டதனால் தான் இந்த படம் வெளிவந்த சில ஆண்டுகளில்இதன் inspirationகாரணமாக பதேர் பாஞ்சாலி படம் எடுத்தார் .

3 comments:

  1. Bicycle Thief படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் .. வேளை வரவில்லை. RPR Sir, your blog is Aladin's cave of charming anecdotes. I wish you compile them all in a book.

    ReplyDelete
  2. அன்புள்ள ராஜநாயஹம்,

    தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திற்காக உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். என்னுடைய மெயிலுக்கு ஒரு Hi அனுப்பமுடியுமா? என்னுடைய ஐடி narain at gmail dot com. நன்றி.

    ReplyDelete
  3. Krishnan ,
    You are very kind to say this.

    With kind regards,

    R.P.Rajanayahem

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.