Share

Mar 10, 2009

Well ..Nobody is Perfect.

பில்லி வைல்டர் இயக்கிய படம் Some like it Hot (1959 movie)
டோனி கர்டிஸ் , மரிலின் மன்றோ , ஜேக் லெமன் ஆகியோர் நடித்தார்கள்.

சிரிப்பு படம்.

இந்த படத்தில் ஜோ பிரவுன் என்ற நகைச்சுவை நடிகர் பேசிய வசனம்
Well ..Nobody is Perfect. படத்தின் கடைசி வசனம்.
டோனி கர்ட்டிஸ் (சாக்சபோன் வாசிப்பவர் ), ஜேக் லெமன்( பாஸ் ரிதம் வாசிப்பவர் ) இருவரும் ஒரு கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்புவதற்காக இளம் பெண்களாக வேடமிட்டு ஒரு பெண்கள் இசைக்குழுவில் இணைந்து விடுவார்கள் .
டோனி கர்ட்டிஸ் பெண் வேடமிட்டாலும் காதல் மன்னன் ஆயிற்றே!

மரிலின் மன்றோவிடம் கவனமாக செட்டில் ஆகி விடுவார்.

ஜேக் லெமன் தான் பாவம்!

ஆஸ்குட் ஒரு கோடீஸ்வரர்.

அவர் ஜேக் லெமன் ஒரு பெண் தான் என மிகவும் மயங்கி விடுவார். அவ்வை சண்முகி உங்களுக்கு நினைவுக்கு வரும்.

ஆஸ்குட் Optimistic person! எந்த பிரச்சினையிலும் Postitive approach தான். Negative answer சொல்லவே மாட்டார் .
தன்னை கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமே இல்லாத விஷயம் என்பதை எப்படி எல்லாமோ சிரமப்பட்டு ஜேக் லெமன் விளக்குவார்.
ஆஸ்குட் "எங்கம்மா உடைய கவுன் தான் உன் மணப்பெண் உடை '"
ஜேக் லெமன் " என் சைஸ் வேற .உங்கம்மா சைஸ் வேற "
ஆஸ்குட் ' ஆடையை ஆல்டர் செய்துகொள்ளமுடியும் '
லெமன் " நான் மூணு வருஷம் ஒரு சாக்சபோன் வாசிப்பவனிடம் வாழ்ந்தேன்"
ஆஸ்குட் " கவலை படாதே .உன்னை நான் மன்னிச்சிட்டேன் "
லெமன் " என்னாலே குழந்தை பெத்துக்க முடியாது "
ஆஸ்குட் " தத்து எடுத்து வளர்ப்போம் "
தன் விக் கை தலையிலிருந்து எடுத்து விட்டு
எரிச்சலுடன் ஜேக் லெமன் இந்த ஆஸ்குட் வேடத்தில் நடிக்கும் ஜோ பிரவுனிடம் "தயவு செஞ்சு புரிஞ்சிக்க .. யோவ் நான் ஆம்பளையா .." என்று வெடிக்கும்போதும் தன் காதலை இழக்க மனமின்றி ’அதனாலே என்ன இப்ப’ என்று ஜோ பிரவுன் பிடிவாதமாக மந்தஹாசபுன்னகையுடன் சற்றும் அசராமல் சொல்லும் வார்த்தைகள்.. "Well ..Nobody is Perfect. "

படம் அதோடு முடியும் .

இந்த சினிமா வசன வரிகளின் சாசுவத மதிப்பு மிக அசாதாரணமானது.

Some like it Hot இயக்குனர் பில்லி வைல்டர் இறந்த போது ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தி :
Billy Wilder is dead. Nobody is perfect!

அவரது கல்லறை Gravestoneமீது எப்போதும் எல்லோரும் பார்க்க என்றென்றைக்குமாக எழுதப்பட்டுள்ள வரிகள் :
I ‘m a Writer. But then nobody is perfect.


யார் வாழ்வு தான் சதம்?!

................................

6 comments:

  1. சுவாரஸ்யம், பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  2. Really a witty epitaph! Here are a few more -

    http://www.2spare.com/item_67246.aspx

    ReplyDelete
  3. நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.. ஆனால் இதர விசயங்கள் ஆச்சர்யமானவை. பகிர்தலுக்கு நன்றி!

    ReplyDelete
  4. வெகு நேர்த்தியான snippet. நன்றிகள் பல RPR.

    ReplyDelete
  5. தமிழ் நாவல்களில் இது மாதிரி மிகவும் பிரபலமான வசனம் என்றால் எனக்குத் தோன்றுவது “இதற்கு தானே?” - மோகமுள் யமுனா.

    ReplyDelete
  6. ராஜநாயஹம் சார்,

    ரிஷிகபூருக்குப் பெண் வேடம் மிகக் கச்சிதமாகப் பொருந்திய ஒரு total entertainer 1974-75 இல் வெளி வந்த 'ரஃபூ சக்கர்' . கூடவே பெண் வேடம் போட்டுக் கோடீஸ்வரர் ராஜிந்தர் நாத்திடம் வசமாக மாட்டுபவர் காமெடியன் பெயிண்டல்! 'Vahee hota hai jo mansur-e-khuda hota hai', 'yeh jawaani','chup -chup' போன்ற அருமையான ரிஷி கபூர் , நீது சிங் பாடல்கள் நிறைந்த படம் . நீங்கள் எழுதியுள்ள ஆங்கிலப் படம்தான் ஒரிஜினல் என்று தெரியாமலே இந்த 'Nobody is perfect' வசனத்தை அனுபவித்து சிரித்ததுண்டு!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.