Share

Mar 4, 2009

மந்திரி குமாரி எல்லிஸ் ஆர் டங்கன் .

மந்திரி குமாரி படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர் டங்கன் அமெரிக்க வெள்ளைக்காரர் . இந்த படத்தில் கே சோமு (டவுன் பஸ் ,சம்பூர்ணராமாயணம் ,பட்டினத்தார் ஆகிய படங்களின் இயக்குனர் ), முக்தா வி சீனிவாசன் ஆகியோர் உதவி இயக்குனர்கள் .எல்லிஸ் ஆர் டங்கன் கிட்டத்தட்ட ஐம்பதுவருடங்களுக்கு மேல்தன் தொண்ணூறு வயதில் இந்தியா வந்திருந்தார் . தன் படத்தில் நடித்த கதாநாயகன் மக்கள் நாயகனாக தமிழக முதல்வர் ஆகி கொடிகட்டி வாழ்ந்து மறைந்த செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டார் . மந்திரி குமாரி யில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் , டெக்னிஷியன்ஸ் இவர்களில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இவரை சந்தித்தார்கள் . (அப்போது மாதுரி தேவி , வில்லன் எஸ் ஏ நடராஜன் (சிரித்தவாறு வசனம் பேசுவார் !கடைசி காலத்தில் நடராஜன் கஷ்டப்பட்டார் .)ஆகியோர் மறைந்து விட்டார்கள் )அப்போது இவருக்கு பெரிய அதிர்ச்சி . இந்த மந்திரி குமாரி பட சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பலரும் செட்டில் ஆகாமலே இருந்தார்கள் . சொந்த வீடு மந்திரி குமாரி படத்தில் எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ஜி சகுந்தலாவுக்கு கூட இல்லை .வறுமையில் வாடும் தன் படத்தில் நடித்த கலைஞர்களை பார்த்து இடிந்து போய் விட்டார்.
ஜி சகுந்தலா சிவாஜி கணேசனின் ஜோடியாக வியட்நாம் வீடு நாடகத்தில் நடித்தவர் . நடிகை பத்மினியின் உறவினர் . உருக்கமாக உடைந்த குரலில் சோகமாக பல படங்களில் நடித்த இவர் 'உயர்ந்த மனிதன் 'படத்தில் அருமையாக காமெடி செய்திருக்கிறார் .
எஸ் எஸ் சிவசூரியன் பற்றி நினைக்கும்போது என் நினைவிற்கு வருகிற விஷயம் ஒன்று அவர் தன் முதிய வயதில் தன் மகனை விபத்தில் பறிகொடுத்தவர் . புத்திர சோகம் இவரை முதுமையில் பீடித்தது வேதனையான விஷயம் . சிவசூரியன் நாடகங்களில் நடித்துகொண்டே இருந்தார் . எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுக வில் உடனே சேர்ந்தவர் . நான்கு வருடங்களில் ஆட்சியை அதிமுக பிடித்தது .அப்படியும் அதன் பின்னும் கூட இவர் வாழ்வு செழிக்கவே இல்லை என்று தான் சொல்லவேண்டும் . ஒரு கூடுதல் தகவல் இந்த சிவசூரியன் என் மாமனாரின் நண்பர் .
மாதுரி தேவி கிறித்துவ பெண் . க்ளாரா என்று பெயர் . இவர் அண்ணன் ஒரு ரவுடி . தியாகராஜபாகவதர் , என் எஸ் கிருஷ்ணன் தண்டனை அனுபவித்த 'இந்து நேசன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்' க்ளாராவின் அண்ணன் சம்பந்தப்பட்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன் .பின்னால் க்ளாரா 'மாதுரி தேவியாக' பிரபலமானார் .

மந்திரி குமாரி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்.ஏ.நடராஜன். கள்ளபார்ட் நடராஜன் அல்ல. கள்ளபார்ட் நடராஜனையும் எஸ் ஏ நடராஜனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் .இந்த எஸ் ஏ நடராஜன் சிவாஜியின் மனோகராவிலும் வில்லனாக வந்து கலக்கியவர். எம்ஜியாரின் மந்திரி குமாரி , சிவாஜியின் மனோகரா இரண்டு படங்களை நினைத்தால் எஸ் .ஏ .நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது . தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த எஸ் ஏ நடராஜன் .

கள்ளபார்ட் நடராஜன் ' சித்தாடை கட்டிக்கிட்டு' பாட்டிற்கு நடனம் ஆடியவர் . டப்பாங்குத்து டான்ஸ் அருமையாக ஆடுவார் . சிவாஜியின் பராசக்தியிலே கூட ஒரு காட்சியில் நடித்தவர் ."தெய்வப்பிறவி " படத்தில் சிவாஜிக்கு தம்பியாக கள்ளபார்ட் நடராஜன் நடித்திருக்கிறார் .மதராஸ் டு பாண்டிச்சேரி ,கண்காட்சி ஆகிய படங்களின் வில்லன் . இவர் " 'ஊதாப்பு கண் சிமிட்டுகிறது 'படத்தில் படகு ஒன்றில் " ஆண்டவன் இல்லா உலகமிது, ஆசைகள் இல்லா உலகமிது " பாட்டிற்கு நடித்த பின் அதன் பிறகு சினிமா வாய்ப்பே சுத்தமாக இல்லாமல் இருந்து நீண்ட காலத்திற்கு பின் " தேவர் மகன் " படம் தான் அடுத்து வாய்ப்பு கிடைத்து இவர் நடித்த படம் !

6 comments:

  1. My post on Mandiri kumari here
    http://awardakodukkaranga.wordpress.com/2009/03/05/மந்திரி-குமாரி/

    ReplyDelete
  2. ராஜநாயஹம் சார்,

    பள்ளி நாட்களில் , பனகல் பார்க் அருகில், ஒரு நகைக் கடையில் தேவரின் 'கெட்டிக்காரன்' ஷுட்டிங் பார்த்ததுண்டு. ஜெய், புதுமுகம் லீலா நடித்த இந்த மெகா flop படத்தில் கள்ளபார்ட் நடராஜன் நகைக்கடைக்காரரை சுட்டு விட்டு நகையுடன் காரில் தப்பி ஓடும் காட்சி தத்ரூபமாகப் படமாக்கப் பட்டது! 'போலீஸ்! போலீஸ்!' என்று கத்திக் கொண்டே கடைக்காரர் வயிற்றில் பெருக்கெடுத்து ஓடும் பொய் ரத்தத்துடன் வெளியே ஓடி வருவதை 5,6 டேக் எடுத்தது பசுமையாக நினைவில் உள்ளது! ஒரு கல்யாண ரிசப்ஷன் காட்சி அப்போது மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த நடிகை லீலாவின் வீட்டிலேயே எடுத்தார்கள். ஆனால் சில மாதங்களில் படம் வெளியான போது நான் பார்க்கவில்லை!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  3. Cinema Virumbi Sir!

    I always enjoy your lively comments.

    With Kind regards,

    R.P.Rajanayahem

    ReplyDelete
  4. நன்றி ராஜநாயஹம் சார்!

    பாலகுமாரனிடம் கடன் வாங்கிய வார்த்தைகளில் சொல்வதானால் , உங்கள் write up எல்லாமே விதை நெல்! மேற்கொண்டு விதைப்பவர்கள் விதைத்து அறுவடை செய்யலாம்! மற்றவர்கள் சும்மா நெல் பொரி செய்து கொறிக்கலாம்! அவரவர் taste க்கு ஏற்றபடி இரண்டுமே சுகம்தான்!

    By the way, அந்தக் கல்யாண ரிசப்ஷன் காட்சி வேறு ஏதோ மலையாளப் படம் என்று ஞாபகம், 'கெட்டிக்காரன்' அல்ல!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  5. யப்பா. இங்கு எல்லோருமே நடமாடும் .. sorry..

    வலையாடும் cinema லைப்ரரிகள் போல இருக்கு.

    சூப்ப்பர்.

    ReplyDelete
  6. சார் வணக்கம்
    நான் சிவக்குமார்
    நீங்கள் பழனியில் வசித்தீர்களா?பேராசிரியர் சிவக்கண்ணன் அவர்களுடன் உங்களை சந்தித்திருக்கிறேன்.தொடர்பு கொள்ள முடியுமா?9443558201

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.