Share

Mar 11, 2009

காவல் கோட்டம் நாவலும் எஸ் ரா தீர்ப்பும்

நிறைய பக்கங்கள் நாவல் , நிறைய எழுதுவது சாதனையாக கருதுவதா ? இல்லை வாசகனின் வேதனை என்று எடுத்துகொள்வதா?கண்ட கண்ட புத்தகத்திற்கும் நேரத்தை விரயம் செய்ய முடியுமா ? வாசித்தல் ஒரு தவம் அல்லவா ?
ஒரு முறை கோவி மணிசேகரன் தான் சில ஆயிரம் பக்கங்களுக்கு நாவல் எழுதியதாய் குறிப்பிட்டு " எவன் தமிழிலே இத்தனை பக்கங்களுக்கு நாவல் எழுதியிருக்கான் சொல்லு . " என்று சத்தமாக கேட்டதற்கு எழுத்தாளர்பெங்களுர் ரவிச்சந்திரன்(கவிஞர் புவியரசின் இந்த மாணவர் என்ன ஆனார் ?இறந்து விட்டார் என்பதற்கு ஆதாரம் ஏதும் யாருக்கேனும் கிடைத்து விட்டதா ? இன்னும் இல்லையா ?) உடனே ,உடனே " நல்ல ஹார்ட் லேபர் .கடுமையான உழைப்பு ." என்று பதில் சொன்னாராம் .
அசோகமித்திரனுக்கு சென்னையில் விழா ஒன்று எடுத்தபோது அவரை கௌரவித்து பேசிய சுந்தர ராமசாமி மேற்படி கோவி பாணி நிறைய எழுதும் எழுத்தாளர்களை பற்றி 'அவர்களை நாம் மே தினம் அன்று கௌரவித்துக்கொள்ளலாம் ' என்று குறிப்பிட்டார் .சபையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது .
காவல் கோட்டம் என்று ஒரு ஆயிரம் பக்க நாவல் . சு .வெங்கடேசன் எழுதியது . தமிழ் இனி வெளியீடு . நாயக்கர்கள் கலந்து கொண்டு வெளியிட்டுள்ளார்கள். ஐ ஏ எஸ் அதிகாரி கலந்து கொள்கிறார் .தமிழ் செல்வன் மேடையில் அழுகிறார் . கோவை ஞானி ' தமிழில் இது வரை இப்படி ஒரு நாவல் வரவில்லை . நான் அறுபது பக்க மலர் வெளியிடபோகின்றேன் " என்கிர்ரார் ..! ' இதுவரை எழுதப்பட்ட நாவல்களை இந்த நாவல் விஞ்சி விட்டது ' என்று 'கோவையின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் (ராஜேஷ் குமார் அல்ல )குறிப்பிடுகிறார் . 'காவல் கோட்டம் ' புத்தக வெளியீட்டு விழாவில் ' இருபது வருடமாக கோணங்கி எழுதியதை எல்லாம் இந்த நாவல் மிஞ்சி விட்டது .' என்று பேசினாராம் ஒருவர் .இந்த புத்தக வெளியீட்டு விழா அடிக்கடி நடக்கிறதாம் .இனி டால்ஸ்டாய் , தாஸ் தாவ்ஸ்கி என்று சொல்லக்கூடாதாம் .வெங்கடேசன் டால்ஸ்டாய் , வெங்கடேசன் தாஸ் தவ்ஸ்கி என்று தான் சொல்லவேண்டும் என்று பலரும் மேடையிலும் குறிப்பிடுகிறார்களாம் .காம்ரேடு எழுதிய நாவல் என்பதால் அந்த பின்புலமும் துதி பாடுகிறது .

என்னவெல்லாமோ நடக்கிறது இங்கே . எஸ் ராமகிருஷ்ணனின் அனுபவம் வேறு விதமாக இருக்கிறது . இந்த நாவலை படிக்க பல நாட்களை விரையம் செய்ததாக எஸ் ராமகிருஷ்ணன் உணர்கிறார் . தமிழ் செல்வன் கடுமையான மிலிடரி அனுபவம் உள்ளவர் என்பதால் இந்த நாவலை படிப்பதில் அவருக்கு அவ்வளவு கடின அனுபவம் இருக்காது தான் . ஆனால் என்னால் முடியவில்லை என்கிறார் . படு அபத்தமான நாவல் பற்றி விமர்சனம் செய்ய அவருக்கு ஏன் தோன்றியிருக்கும் என நான் ஊகிக்க முயன்றேன் . தன்னுடைய விமர்சனம் இனி வாசகர்களுக்கு இந்த அதீத மதிப்பீடுகள் , பயங்கர பாராட்டு புகழுரைகள் குறித்த அபாய எச்சரிக்கையை ,விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு படுமோசமான நாவல் என தான் உணர்ந்த பின்னும் சகித்துக்கொண்டு அதற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார் என தோன்றுகிறது .
'தமிழ் இனி' வெளியீடு எனும்போது அதற்கென்று ஒரு Coterie அதன் நூல்களை Promote செய்வதற்கு இருக்கிறது .செக்கு மாட்டு விமர்சகர்கள் நிறைய பேர் காத்துக்கொண்டு இருப்பார்கள் என்பதால் தான் எஸ் ராமகிருஷ்ணன் இந்த எதிர்மறை விமர்சனத்தை சிரமம் பார்க்காமல் ,இதனால் இந்த நாவலுக்கு மேலும் விளம்பரம் கிடைக்குமே என்று கவலை படாமல் முன் வைத்திருக்கிறார் என்பது தெளிவு .
நாயக்கர்கள் பற்றிய இந்த நாவலில் திருமலை நாயக்கர் பற்றி எழுதும்போது அவரது 'பிரபலமான தொந்தி ' பற்றி கூட எந்த குறிப்பும் இல்லை !திரட்டிய தரவுகளுக்கு நாவலில் யாருக்கும் நன்றி கூட தெரிவிக்கப்படவில்லை !நாவலில் வரும் நாயக்கர்கள் தமிழ் நாவல் என்பதால்கவனமாக தெலுங்கை தவிர்த்து தமிழ் பேசுகிறார்கள் என்பது எனக்கு செவி வழி செய்தி .
தமிழில் இது வரை இந்த மாதிரி நாவல் வந்ததில்லை என்று எப்படி இவர்களால்Declare பண்ண முடிகிறது .கோணங்கி இருபதுவருடம் எழுதியதை இந்த நாவல் காலி செய்து விட்டது என்று அற்பத்தனமாக சொல்லமுடிகிறது . தமிழில்இன்று வரை வந்துள்ள நாவல் சாதனைகளை எப்படி துச்சமாக தூக்கி வீசி விட முடிகிறது . SNOBBERY!இந்த மேட்டிமை பூர்ஷ்வாத்தனம் இலக்கிய உலகில் பலகாலமாக இயங்கி வருவது தான் .
இந்த மேட்டிமை பூர்ஷ்வாத்தனம் என்பதற்கு நான்எப்போதுமே எதிரானவன் .
எஸ் ராமகிருஷ்ணன் இந்த நாவலுக்கு கொடுத்துள்ள பத்வா தண்டனை சரியானது தான் என அங்கீகரிக்கின்றேன்.

15 comments:

  1. //எஸ் ராமகிருஷ்ணன் இந்த நாவலுக்கு கொடுத்துள்ள பத்வா தண்டனை சரியானது தான் என அங்கீகரிக்கின்றேன்.//

    தீராநதியில் நானும் விமர்சனம் படித்தேன். சரியாகத் தான் தெரிகிறது.

    ReplyDelete
  2. RPR இதை பார்த்தீர்களா ?
    http://www.keetru.com/literature/essays/manimaran.php

    ReplyDelete
  3. //படு அபத்தமான நாவல் பற்றி விமர்சனம் செய்ய அவருக்கு ஏன் தோன்றியிருக்கும் என நான் ஊகிக்க முயன்றேன் . தன்னுடைய விமர்சனம் இனி வாசகர்களுக்கு இந்த அதீத மதிப்பீடுகள் , பயங்கர பாராட்டு புகழுரைகள் குறித்த அபாய எச்சரிக்கையை ,விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு படுமோசமான நாவல் என தான் உணர்ந்த பின்னும் சகித்துக்கொண்டு அதற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்//

    இந்த கருத்தோடு முழுமையாக உடன்
    படுகிறேன்.

    ReplyDelete
  4. அனுபவம் புதுமை! உங்கள் விமர்சனம் (அந்த நாவலை படித்தால்) எதிர்ப்பார்க்கிறேன்!

    - விஜய், பெங்களூரு

    ReplyDelete
  5. நானும் இந்த புதினத்தின் சில பக்கங்களை தமிழினி பத்திரிக்கையில் படித்துவிட்டு இந்த புத்தகத்தை வாங்கினேன். எனக்கும் எஸ்.ராவின் விமர்சனத்தோடு உண்டன்படு உள்ளது நான் எஸ்.ரா அளவிற்க்கு தேர்ந்த வாசகன் இல்லையென்றாலும் இந்த நாவல் சலிப்பூட்டுவதாகவே உள்ளது. நான் படித்த வரை எஸ்.ரா இந்த அளவிற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததில்லை.
    I can tell it has ruffled quite a few feathers, based on the response to his criticism.

    ReplyDelete
  6. சார், கிருஷ்ணன் மேலே கொடுத்திருக்கிறதையும் படிச்சிடுங்க. எஸ்.ரா. கொடுத்திருக்கிற விமர்சனம் காட்டமா அமைந்ததுக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    எப்படியாயினும் எஸ்.ரா. (என்) மதிப்புக்குரிய எழுத்தாளர். மத்தவங்க காரண-காரியத்தோடு இந்த புத்தகத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தால் - எஸ்.ரா. இந்தளவுக்கு இறக்கி வைக்கிறார்! அது மேட்டிமைத்தனம் இல்லையா? ஒரு புத்தகத்தைத் திட்ட அவரிடம் இருந்து இத்தனை பதிவுகள் எதிர்பார்க்கவில்லை!

    ReplyDelete
  7. கு.சின்னப்பபாரதி யின் இத்தா தண்டி நாவல் வெளிவந்த போதும் இடதுகள் இவ்வாறுதான் பிதற்றி வந்துள்ளனர்.என்ன செய்ய கொண்ட கொள்கைக்காக கோமணத்தை அவிழ்த்து கொடிபிடிக்க வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  8. S Raamakrishnan's review is perfectly correct. Already it has come in yaazisai blog

    ReplyDelete
  9. Dear Sir,

    It is quite puzzling that you approve S.R's comments, without reading the book?

    'Prejudice' to be blamed?

    ReplyDelete
  10. http://sramakrishnan.com has sr's articles.

    ReplyDelete
  11. நண்பரே.. இரண்டு நாட்களுக்கு முன் எஸ்ராவை சந்தித்தபோது இது பற்றி பேசினார்.. அந்த புத்தகம் எங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டது எனவும், அதன் மூலங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சொன்னார்.. ஒரு தவறான புத்தகத்திற்கு தேவை இல்லாத பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதாலேயே தன் எதிர்ப்பை ஒரு வாசகனாக வெளியிட்டதாக சொன்னார்.. நாம் அந்த புத்தகத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலே போதும்.. தெரியாமல் நாமே விளம்பரம் செய்து விடக்கூடாது..

    ReplyDelete
  12. தமிழில் எத்தனையோ மோசமான நாவல்கள் வந்துள்ளன.சுஜாதா எழுதாத அபத்தங்களா.விகடன்,
    குமுதத்தில் வெளியாகாத
    குப்பைகளா? . எஸ்.ரா
    ஒவ்வொரு நாவலுக்குமா இப்படி
    எதிர்ப்பியக்கம் நடத்துகிறார். இந்த நாவல் மோசமான நாவல் என்று
    ஒரு கட்டுரை எழுதி நிறுத்திக்
    கொள்ளாமல் அதை தீராநதி,தன்
    இணையதளம்,கீற்று என்று
    பரவலாக பிரசுரிக்க காரணம் என்ன?.
    இதில் இலக்கியத்திற்கு அப்பாற்ப்பட்ட
    காரணங்கள் இருக்கின்றன என்று
    வாசகர் சந்தேகிக்க முகாந்திரம்
    உள்ளது.

    'ஒரு தவறான புத்தகத்திற்கு தேவை இல்லாத பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதாலேயே தன் எதிர்ப்பை ஒரு வாசகனாக வெளியிட்டதாக சொன்னார்'.
    இதுதான் இலக்கியவாதிகளின்
    கழிசடை அரசியல்.

    ReplyDelete
  13. //எழுத்தாளர் பெங்களுர் ரவிச்சந்திரன்கவிஞர் புவியரசின் இந்த மாணவர் என்ன ஆனார் ?இறந்து விட்டார் என்பதற்கு ஆதாரம் ஏதும் யாருக்கேனும் கிடைத்து விட்டதா ? இன்னும் இல்லையா ?//

    From http://desikann.blogspot.com/2005/06/blog-post.html:

    சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

    சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.

    ReplyDelete
  14. நான் இன்னும் இந்த புத்தகத்தைப் படிக்கவில்லை. இருப்பினும், புதினத்தைப் படிக்காமல் அடுத்தவரது விமர்சனத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாமும் அப்புதினத்தை விமர்சிப்பது சரி இல்லை..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.