1 .முசாரப் டெல்லி வந்து இந்தியா டுடே கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்து விட்டார் . இவர் கார்கில் யுத்தத்திற்கு பின் அதிபராக முன்னர் டெல்லி வந்த போது இவர் வரும் பாதையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்போது ஒரு வீட்டையே இடித்தார்கள் . இப்போதும் அவர் தன்னை அதிபராகவே நினைத்து கொண்டு தான் ' இந்தியா விட்டு கொடுத்து அனுசரிக்காவிட்டால் இன்னும் நிறைய கார்கில்களை சரித்திரம் பார்க்க வேண்டியிருக்கும்' என பேசியிருக்கிறார் . பங்களா தேஷ் போர் , பாகிஸ்தான் பிரிவினைக்கும் இந்தியா தான் காரணம் என முசரப் சொல்லும்போது ' எங்கள் எதிர்ப்பு, ராணுவ அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது . எங்கள் நாட்டையே சிதைத்து பிளவுபடுத்தியவர்கள் தானே நீங்கள்' என்ற தொனி தெரிகிறது .
முஸ்லீம் நாடு என தன்னை நினைக்கும் பாகிஸ்தான் தன் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களை விட இந்தியாவில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுவது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் .
பாகிஸ்தானில் மற்றொரு திருப்பம் எந்த நேரமும் தயாராய் இருக்கும் போல .ராணுவ புரட்சி பற்றிய ஹேஷ்யங்கள் உலா வரும் வேளையில் ஜெனரல் கியானி(கயானி ?) விரலை உயர்த்தி அதிபர் சர்தாரியை 'ஒழுங்கா வேலைய பார்க்கலேன்னா பார்த்துக்க . நான் பிஸியாக வேண்டி வந்துரும் ' என்று கடுமையாக எச்சரித்துள்ளார் . அமெரிக்கா சொல்லி தான் கியானி இப்படி சர்தாரியை கண்டித்துள்ளாராம் .
2 .ஒரிஸ்ஸாவில் பதினோரு வருட பிஜேபி கூட்டணியை ஆளுங்கட்சி பிஜு ஜனதா தளம் இழந்தவுடன் உடனே உடனே ஓடிபோய் நவீன் பட்நாயக்குக்கு இடதுசாரிகள் நேசக்கரம் நீட்டுகிறார்கள் .
பேஷ் பேஷ் ..
3 .ஜெயலலிதாவின் இன்றைய 'பகல் லஞ்ச் தவிர்க்கும்' சின்ன உண்ணாவிரதம் வைகோவின் பொருந்தா கூட்டணி குற்றவுணர்வை நீக்கி விடுமோ ?
கொஞ்ச நேரம் மதியம் உண்ணாவிரத மகிமையை ஜெயா டிவி யில் பார்த்தேன் . அவனவன் சூடத்தை கொளுத்துரான் , துண்டை போட்டு தாண்டுறான் .தோப்புக்கரணம் போடுறான் . தெய்வத்திற்கு இடைவிடாத பூஜை .அம்மன்நடுவில் தேஜசுடன் ஜெகஜோதியாய் அமர்ந்து பூரிப்புடன் அத்தனை தீபாராதனையையும் அம்மா திருப்புகழ் மந்திரத்தையும் ஏற்று புன்னகைக்கிறார் .
இலங்கை மக்கள் துயரம் இவர்களுக்கு பொருட்டே இல்லை . அம்மா ஆராதனைக்கு ஒரு மேடை.
பலே பலே ..
"நீதி ,குற்றமற்ற தன்மை இரண்டுமே ஒன்று சேரமுடியாதபடி பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன . 'குற்றமில்லா தன்மை' சிலுவையிலும் 'நீதி ' அலமாரியிலும் காணப்படுகின்றன ."
இது ஆல்பர் காம்யு தன் " வீழ்ச்சி " நாவலில் சொல்வது.


why invite a dictator and a fascist leader to our
country and listen to his unwarranted comments and threats....!
But one thing is clear.. that he has given a warning to India being present in India and that needs some guts I suppose...He has gone to the extend of declaring war
right in front of all those so called VIP gathering..!
Can any Indian do this in Pakistan and come out alive..!